ஆறு மிதவை மோட்டார்கள் பொருத்தம்: மாநகராட்சி மின்கட்டணம் உயர வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆறு மிதவை மோட்டார்கள் பொருத்தம்: மாநகராட்சி மின்கட்டணம் உயர வாய்ப்பு

Added : ஜன 11, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து, மிதவை மோட்டார்கள் மூலம், சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்க இருப்பதால், மின்கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை உட்பகுதியில், சேலம் மாநகராட்சி நீரேற்று நிலையம் உள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு, 2.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும். தற்போது அணை நீர்மட்டம் சரிந்ததால் நாள் ஒன்றுக்கு, 2.2 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே எடுக்க முடிகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 35.69 அடியாகவும், நீர்இருப்பு, 9.97 டி.எம்.சி.,யாகவும் சரிந்து விட்டது. இதனால், சேலம் மாநகராட்சி நீரேற்று நிலைய அடிவார தொட்டிக்கும் கீழே, நீர்மட்டம் சென்று விட்டது. எனவே, அணையில் மிதவை மோட்டார் பொருத்தி, தண்ணீர் எடுத்து தொட்டிக்குள் நிரப்பி, அந்த நீரையே சுத்திகரிப்பு நிலையத்துக்கு பம்பிங் செய்ய வேண்டும். இதற்காக, சேலம் மாநகராட்சி நீரேற்று நிலையத்தில், 75 மற்றும், 45 ஹெச்.பி., திறன் கொண்ட ஆறு மிதவை மோட்டார்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் நீர்மட்டம், 34 அடியாக குறைந்து விடும். அப்போது மிதவை மோட்டார்களை பயன்படுத்தியே தண்ணீர் எடுக்க முடியும். வரும் நாட்களில், சேலம் மாநகராட்சி நீரேற்று நிலையத்தில், ஒரே நேரத்தில் தண்ணீரை பம்பிங் செய்யும் மோட்டார்கள், மிதவை மோட்டார்கள் என, இரண்டையும் இயக்க வேண்டும். அதற்கேற்ப நீரேற்று நிலையத்துக்காக மின்கட்டணமும் இரட்டிப்பாகும் என்பதால், சேலம் மாநகராட்சி குடிநீர் வினியோகத்துக்கான செலவு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை