சிவகங்கை: என்கவுன்டரில் ரவுடி கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை: என்கவுன்டரில் ரவுடி கொலை

Updated : ஜன 11, 2017 | Added : ஜன 11, 2017 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிவகங்கை, ரவுடி, என்கவுன்டர்

சிவகங்கை: போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடி, போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டான்.


தாக்குதல்:

இன்று அதிகாலை 6.30 மணியளவில் மதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி 6 பேர் கும்பல் வந்து கொண்டிருந்தது. வழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பியுள்ளனர். அங்கு காசு கொடுக்காமல், அங்கிருந்த ஊழியரை தாக்கிவிட்டு, பணத்தை பறித்து சென்றனர். இது தொடர்பாக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வேல்முருகன் என்ற போலீஸ்காரர் உட்பட 3 பேர் அவர்களை தடுக்க முயன்றனர். அவர்களை அந்த கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றது. இதனை தடுக்க முயன்ற வேல்முருகனுக்கு கை சுண்டுவிரலிலும், கண் புருவத்திலும் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றது. போலீசார் தாக்கப்பட்டது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் காரில் விரைந்து அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்தனர்.


மோதல்:

ஆனால், அந்த கும்பல், மானாமதுரை அருகேயுள்ள புதுக்குளம் பகுதியில் உள்ள முந்திரிதோப்பில் மறைந்து கொண்டனர். இந்த பகுதியில் தான் குற்றவாளிகள் அதிகம் பதுங்கியுள்ளனர். கும்பல் பதுங்கியுள்ளதை கண்டுபிடித்த போலீசார் அங்கு வந்து அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அங்கு அந்த கும்பல் அவர்களை தாக்க தொடங்கினர். இதில் இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. உருண்டு புரண்டு சண்டை போட்டனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார்த்திகை சாமி என்ற ரவுடி கொல்லப்பட்டான். இவன் மீது மதுரை, திருப்பூர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை என 32 வழக்குகள் உள்ளன. இவன் திருவிழா நடக்கும் பகுதிகளுக்கு சென்று வசதியான பெண்களை பார்த்து, அவர்களை நோட்டமிட்டு அவர்களது வீட்டில் கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தான்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
12-ஜன-201700:27:44 IST Report Abuse
ஏடு கொண்டலு போயஸ் தோட்டத்துல பெரிய பெரிய ரவுடிகள் இருக்கிறதாகப் புரளி. அவர்களை போடட்டும் பார்க்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஜன-201723:24:10 IST Report Abuse
K.Sugavanam இந்தமாதிரிஆட்களை கூண்டோடு சொர்கத்துக்கு அனுப்பறதுதான் நல்லது..
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
11-ஜன-201720:27:27 IST Report Abuse
appaavi மீதி பேர் சரியா மாமூல் கொடுத்துட்டானுங்க போல.
Rate this:
Share this comment
Cancel
MATHIYALAGAN - Chennimalai,இந்தியா
11-ஜன-201720:15:33 IST Report Abuse
MATHIYALAGAN எல்லாம் சிங்கம் சூர்யா பண்ற வேல ரவுடி எ எனகெளண்டர் பண்ற தைரியம் போலீஸ் கு வந்துருச்சு நடத்துங்க.....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜன-201720:13:21 IST Report Abuse
தமிழ்வேல் உருண்டு புரண்டு சண்டை போட்டீங்க ஆனா, மத்தவங்கள என்னா பண்ணுனீங்கன்னு சொல்லலியா ?
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
11-ஜன-201718:49:18 IST Report Abuse
Maverick சார்... முகத்தை பாருய்யா...ஆரம்ப கால..அஜித் மாதிரி இருக்கிறார்...
Rate this:
Share this comment
Chandramoulli - Mumbai,இந்தியா
11-ஜன-201719:39:48 IST Report Abuse
Chandramoulliநான் நினைச்சது வேறு . மறு வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவரோ என்று சந்தேகம் அடைந்தேன் . அவர் இல்லை ....
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
11-ஜன-201718:37:36 IST Report Abuse
Maverick குங்கும பொட்டு வச்சவன் நிறைய்ய பேரு...இப்படி ஒரு மார்க்கமாவே இருக்கனுங்கனுங்க.. பின்னணி என்ன ?.....எல்லோரும் அப்படி இல்ல... ஆனா... பெரும்பாலும் அப்படிதான்....
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஜன-201723:22:21 IST Report Abuse
K.Sugavanamமூர்க்கன்என்கிறீர்களா?...
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
11-ஜன-201717:02:49 IST Report Abuse
மஸ்தான் கனி போலீசை தாக்கியதால் ரவுடி சுடப்பட்டான் பொதுமக்களை தாக்கியதால் அல்ல. போலீசுக்கும் ரௌடிக்கும் எப்போதும் ஒரு டீல் இருக்கும். அந்த டீல் எப்ப டமால் ஆகும் என்று ரௌடிக்கு தெரியாது.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
11-ஜன-201716:04:22 IST Report Abuse
Natarajan Ramanathan வயதுகூட 32 இருக்காதுபோல....அதற்குள் 32 வழக்குகள்.....நல்ல தீர்ப்பு. (மானாமதுரை/பரமக்குடி இந்தமாதிரி ரௌடிகளுக்கு எப்போதுமே பேமஸ்)
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
11-ஜன-201715:49:32 IST Report Abuse
N.Purushothaman ஆறு பேத்தையும் பரலோகம் அனுப்பி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை