‛நல்ல காலம் பொறக்குது..: ராகுல்| Dinamalar

‛நல்ல காலம் பொறக்குது..: ராகுல்

Updated : ஜன 11, 2017 | Added : ஜன 11, 2017 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பிரதமர் மோடி, ராகுல், காங்கிரஸ், ஆட்சி, நல்ல காலம்

புதுடில்லி: வரும் 2019ல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் ஏழை மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என அக்கட்சி துணைத்தலைவர் ராகுல் கூறினார்.
டில்லியில், காங்கிரஸ் தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கட்சி தலைவர் சோனியா கலந்து கொள்ளவில்லை. இதனால், துணைத்தலைவர் ராகுல் தலைமையில் இந்த மாநாடு நடந்தது.


காங்கிரஸ் தலைவர்கள் நாட்டிற்காக சிந்திய ரத்தமும்,வேர்வையும் நாட்டு மக்களுக்கு தெரியும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் தெரிவித்தார்.

மக்களுக்கு தெரியும்:

மாநாட்டில் ராகுல் பேசியதாவது: தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, நீதித்துறை போன்ற மதிப்பு மிக்க அரசியல் சட்ட அமைப்புகளை மோடி, பா.ஜ., பலவீனப்படுத்திவிட்டன.
ரூபாய் நோட்டு வாபஸ் என்பது மோடியின் தனிப்பட்ட முடிவு. ஏழைகளுடன் அவர் நேரத்தை செல்விட வேண்டும். ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்கள் வைத்து பிரதமரால் இனிமேலும் பேச முடியாது. இதனை மறைக்கதான் ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிக்கப்பட்டது. 2019ல் மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்த பின்னர் தான், ஏழைகளுக்கு நல்ல காலம் வரும். கடந்த இரண்டரை வருடங்களில் பிரதமரும், பா.ஜ.,வும் என்ன செய்தனர். கடந்த 70 வருடங்களில் காங்கிரஸ் செய்தது பற்றி மக்களுக்கு தெரியும்.சரிவு ஏன்?

மீடியா நண்பர்களுக்கு பல தடை உள்ளது. என்னை சந்திக்க வரும் அவர்கள், என்னிடம் ஏதோ செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் சொல்ல முடியவில்லை என்கின்றனர்.
இந்தியாவில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் கூறுகிறார். ஆனால் ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏன் ஏற்பட்டது என அவர் சொல்ல வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்ப திட்டத்தின் கீழ் வேலை நாட்கள் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது பற்றி பிரதமர் விசாரிக்க வேண்டும். மக்கள் நகரங்களுக்கு பதில்கிராமங்களுக்கு செல்வது பற்றியும் ஆலோசனை நடத்த வேண்டும் எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
11-ஜன-201719:59:45 IST Report Abuse
CHANDRA GUPTHAN ராஜவேலு சிங்கப்பூரில் ஹவாலா தொழில் செய்கிறார் போல மரண அடிதான் அதான் இந்த புலம்பல் . இந்நாடு என் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை உங்களைப் போன்ற துரோகிகள் வாழவே கூடாது ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
11-ஜன-201719:50:10 IST Report Abuse
CHANDRA GUPTHAN மீடியா நண்பர்களுக்கு பல தடை உள்ளது. என்னை சந்திக்க வரும் அவர்கள், என்னிடம் ஏதோ செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் சொல்ல முடியவில்லை என்கின்றனர்.- நீ தோத்துபோகப்போறே என்கின்றனர் . டில்லியில், காங்கிரஸ் தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கட்சி தலைவர் சோனியா கலந்து கொள்ளவில்லை. - மோடி நடவடிக்கையால் கடந்த 2 மாதமா ஜலபேதி , தூக்கமின்மை வியாதியும் சேர்ந்திருக்கு. இந்தியாவில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் கூறுகிறார். ஆனால் ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏன் ஏற்பட்டது என அவர் சொல்ல வேண்டும். இது தான் மாற்றம் . (நல்லா பினாத்துறான் - செம மப்பு போல ) கடந்த இரண்டரை வருடங்களில் பிரதமரும், பா.ஜ.,வும் என்ன செய்தனர். கடந்த 70 வருடங்களில் காங்கிரஸ் செய்தது பற்றி மக்களுக்கு தெரியும்.(ஆமாம் கடந்த 70 வருடங்களில் காங்கிரஸ் செய்தது எதை என்பதை மக்களுக்கு தோலுரிச்சு காட்டப்போறாருல்ல அப்புறம் சொல்லு குடும்பத்தோட களி நிச்சயம் )
Rate this:
Share this comment
Cancel
Eswaran - covai,இந்தியா
11-ஜன-201719:04:18 IST Report Abuse
Eswaran இத்தனை ஆண்டுகள் படிக்காத பாமரர்களை ஏமாத்தின மாதிரி இனிமேலும் ஏமாற்ற முடியாது . இப்போ படித்தவர்கள் நிறையபேர் உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
Eswaran - covai,இந்தியா
11-ஜன-201718:59:37 IST Report Abuse
Eswaran அப்போ சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லையா? இப்ப மட்டும் எப்படி நல்ல காலம் ?
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
11-ஜன-201718:26:54 IST Report Abuse
anbu காங்கிரஸாருக்கு ஏதாவது குழப்பமா? நிலைமை மோசம் போல் தெரிகிறது. மௌனசாமி மன்மோகன், பப்புவும் குழப்புகிறார்களே. அப்போலோவுக்கு அனுப்புங்கோ.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-ஜன-201717:33:52 IST Report Abuse
இந்தியன் kumar காங்கிரஸ் கட்சியின் ஒரே சாதனை ஊழல் தான் . ஊழலால் தான் ஆட்சி எதிர்க்கட்சி கூட ஆக முடியாமல் தூக்கி எறியப்பட்டது
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஜன-201716:33:55 IST Report Abuse
Endrum Indian ராஹுலுக்கு உண்மையான அடை மொழி “Iron Leg” அவன் கால் வைத்த இடம் உருப்பட்டதில்லை.
Rate this:
Share this comment
Rajavel - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-201718:29:31 IST Report Abuse
Rajavelமோடி கால் வைத்த இடம் எப்படி? : குஜராத்தில் பூகம்பம், குஜராத் கலவரம், உரி தாக்குதல், demonitaisation எல்லாவற்றிலும் மரணம் தான். 2009 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு உ.பி யில் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. பிஜேபி 10 இடங்கள் மட்டுமே. மதக்கலவரம் நடத்தி, உணர்வுகளை தூண்டிவிட்டு அறுவடை செய்தால் மட்டுமே பிஜேபிக்கு வாழ்வு. மக்கள் உணர தொடங்கினால் பழையபடி 2 சீட்டுதான் (நாடு முழுவதும் 1984 தேர்தலில் பிஜேபி இரண்டே இடங்களில் தான் வெற்றி பெற்றது)....
Rate this:
Share this comment
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
11-ஜன-201718:52:45 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்Rajavel - singapore,சிங்கப்பூர்:- என்ன ஒரு அற்பத்தனமான கருத்து.. மோடி கால் வைத்ததால் தான் பூகம்பம் வந்ததோ ? அப்படியென்றால் காஸ்மீர் கலவரங்கள் யாரால் வந்தது .. மீரட் கலவரம் ,, பஞ்சாப் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தீவிர வாதம் தலை விரித்தாடியது யாரால் ? மிகவும் அறிவு பூர்வமாக கருத்திடுவதாக நினைத்துக் கொண்டு தன்தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ள வேணாம் ..இந்திரா கொலையுண்ட நாள் இரவில் மூவாயிரம் பேரை தேடி தேடி கொன்றது யாரோ ? மதக்கலவரங்கள் மூலமும் மத உணர்வுகளை தூண்டுவது மூலமும் சிறுபான்மையினரின் வாக்குகளை வாக்கு வங்கியாக மாற்றி மொத்தமாக அறுவடை செய்து அதன் மூலம் நாட்டை சுரண்டிக் கொண்டிருந்தது யார் ? ஊழலுக்கு மகுடம் சூட்டியது இத்தாலி சோனியா காலத்தில் தான்.. அதில் இருந்து தற்காலிக விடுதலை தான் 2014 இல் கிடைத்துள்ளது . 2019 தான் முழுமையாக விடுதலை கிடைக்க போகிறது.. காங்கிரசை மொத்தமாக தோற்கடிப்பதன் மூலம் .. அதைத்தான் ராகுல் நல்ல காலம் என்று குறிப்பிடுகிறார் .....
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-201719:02:13 IST Report Abuse
Kasimani Baskaran"உணர்வுகளை தூண்டிவிட்டு அறுவடை செய்தால் மட்டுமே பிஜேபிக்கு வாழ்வு." - இதைப்போல மட்டமான திரித்து சொல்லப்பட்ட கருத்து வேறு இல்லை... காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டுமே அதிக அளவில் மதக்கலவரங்களும் குழப்பங்களும் நடக்கும், நடந்ததாகவே எல்லா ஆதாரங்களும் சொல்கிறது... சுனாமி கூட பலரை அள்ளிக்கொண்டு போனது - அதற்காக அப்பொழுது தமிழகத்தை ஆண்டவர் மீது பழியை போட்டு விடலாமா? இல்லை தருதலைத்தனமாக கருத்து எழுதும் உனக்காக உனது பெற்றோரை பழி போடலாமா?...
Rate this:
Share this comment
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
12-ஜன-201700:02:41 IST Report Abuse
Jayaraman PichumaniThis Rajavel Singapore is a congress person. That's why he always used to blame Modi. So not to give any cognizance to his posts. To say simply, his posts are just equal to his leader Ragul Gandhi's time to time bloughs....
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
11-ஜன-201716:21:34 IST Report Abuse
kowsik Rishi நல்லகாலம் பொறக்குது என்று இப்படி சொன்னால் எப்படி ராகுல் எங்கூர் குடுப்பை காரன் வேஷம் வேட்டி தலையிலே முண்டாசு, கையிலே குடை தொழில் ஒரு துணி மூட்டை எங்கே கையில் குடுடுப்பை எங்கே ராகுல் உன் பக்கத்தில் உள்ளாரே ஒரு பொருளாதார மேதை மன்மோகன் சிங்க் ஜி அவரிடம் அரசியல் விட்டு விட்டு ஆட்சி நிர்வாக விஷயமாக ரகசியமாக கேட்டு பார் மன் மோகன் சிங் ஜி சொல்வார் மோடி காலம் தான் நல்ல காலம் காங்கிரஸ் கம்பெனி காலம் கள்ள காலம் என்று சொல்லாதே யாரும் கேட்டால் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மம்தா தாங்க மாட்டார் என்று தான் சொல்வார் மன்மோகன் ஜீ
Rate this:
Share this comment
Cancel
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
11-ஜன-201715:53:14 IST Report Abuse
குரங்கு குப்பன் // மீடியா நண்பர்களுக்கு பல தடை உள்ளது. என்னை சந்திக்க வரும் அவர்கள், என்னிடம் ஏதோ செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் சொல்ல முடியவில்லை என்கின்றனர் // - என்ன சொல்லப்போறாங்க ஏன்டா இப்படி எங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகிறாய் என்று தான் சொல்ல வந்திருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
11-ஜன-201715:49:06 IST Report Abuse
குரங்கு குப்பன் // ‛நல்ல காலம் பொறக்குது..: ராகுல் // - எப்போ இவரு குடு குடுப்பை காரண மாறினர்
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
11-ஜன-201717:00:03 IST Report Abuse
madhavan rajanஅவர் சொல்வது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஊழல்காரர்களுக்கு. அவர்களுக்கெல்லாம் இப்போது கேட்ட காலம் தானே நடக்குது. மீண்டும் காங்கிரஸ் வந்தால்தான் அவர்களுக்கு ஊழல் அதிகமாக செய்வதற்குரிய நல்ல காலம்....
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
11-ஜன-201717:12:09 IST Report Abuse
madhavan rajanஇவ்வளவு ஆண்டுகளாக காங்கிரஸ் நல்லாட்சி தரவில்லை என்பதை ராகுல் ஒப்புக்கொண்டதற்கு நன்றி. காங்கிரஸ் வந்தால் ஏழைகளுக்கு நல்ல காலம் பிறக்கும் என்றால் சுதந்திரம் பெற்று இவ்வளவு ஆண்டுகளில் ஏழைகளுக்கு ஏன் நல்ல காலம் பிறக்கவில்லை? அவர்களுக்கு நல்ல காலம் பிறந்திருந்தால் பின் ஏன் காங்கிரஸ் 2014 ல் படுதோல்வி அடைந்தது? இவ்வளவு நாட்களில் ஏழைகளை முன்னேற்ற நல்ல நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னும் ஏழைகள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூச்சலிடுகிறார்கள்? திடீரென்று கடந்த இரண்டாண்டுகளில் ஏழைகள் அதிகம் ஆகிவிட்டார்களா?...
Rate this:
Share this comment
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
12-ஜன-201700:04:55 IST Report Abuse
Jayaraman Pichumaniராகுலு இனிமேதான் புதுசா ஒரு காங்கிரஸ் அக்கவுண்டு புக்கு தொறக்க போறாரு.அதனால காங்கிரஸ் எழுபது வருடமா என்ன பண்ணுச்சுன்னு அவரை கேக்க கூடாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை