உ.பி.,யில் அமைகிறது காங்., - சமாஜ்வாதி கூட்டணி?| Dinamalar

உ.பி.,யில் அமைகிறது காங்., - சமாஜ்வாதி கூட்டணி?

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அகிலேஷ், ராகுல், காங்., சமாஜ்வாதி, கூட்டணி

லக்னோ : உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க உள்ளதாகவும், ராகுல் மற்றும் அகிலேஷ் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் முலாயம்சிங்குக்கும், அகிலேசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தேர்தல் பணிகள் மந்தமான நிலையில் உள்ளன.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தாலும் தற்போது பா.ஜ., கட்சி பெற்றுள்ள வளர்ச்சியாலும், சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்தால்தான் ஓரளவுக்கு வெற்றி பெற முடியும். இல்லையெனில் கட்சிக்கு மேலும் வீழ்ச்சி ஏற்படும் என காங்கிரஸ் கருதுகிறது.
இதனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து சமாஜ்வாதி கட்சிக்கு தூது விடப்பட்டது. அகிலேஷ் தலைமையிலான அணியுடன் காங்கிரஸ் கூட்டணி சேருகிறது. அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் கூட்டணி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பேசுகையில், மத சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறி காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணியை உறுதி செய்தார். அப்போது காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஷீலாதீட் சித் கூறுகையில், அகிலேஷ் மற்றும் ராகுல் போன்ற இளம் தலைவர்களுக்கு வழிவிட தயார் என்றார். இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சிகள் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் , உ.பி., முதல்வர் அகிலேஷ் ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subin Dev - Colachel,இந்தியா
11-ஜன-201722:19:50 IST Report Abuse
Subin Dev காங்கிரசுடன் சேருபவர்கள் வளர்வார்கள். பா.ஜ.க, வுடன் சேருபவர்கள் அழிவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
11-ஜன-201719:23:18 IST Report Abuse
Ramesh Kumar UP தேர்தல் என்பது ஏறக்குறைய அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி. அநேகமாய் பிஜேபி காணும் கனவு பலிக்காது என்றே தோன்றுகிறது. காசி விசுவநாதர் மோடியை காப்பாற்றட்டும். UP யில் காங்கிரஸ் தன் பலத்தை இழந்து ஏறக்குறைய முப்பது வருடங்களாகிறது. இப்போதாவது தேறுகிறதா என்று பார்ப்போம்...
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-201718:19:09 IST Report Abuse
Rajavel ஹிட்லர் மோடிக்கு எதிரான வெற்றி கூட்டணி. வெற்றி நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201717:50:53 IST Report Abuse
Swaminathan Nath ராகுல் வைத்த கூட்டணி வெற்றி பெறாது, அகிலேலிஷ் தனியாக நின்றால் வெற்றி பெறலாம், காலத்தின் கட்டாயம், பார்க்கலாம்,
Rate this:
Share this comment
Rajavel - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-201718:17:05 IST Report Abuse
Rajavelபிஹாரில் பிஜேபிக்கு ராகுல் ஊதிய சங்கு மறந்து போய்விட்டது என நினைக்கிறேன்....
Rate this:
Share this comment
GOPALASAMY - bengaluru,இந்தியா
11-ஜன-201719:23:25 IST Report Abuse
GOPALASAMY ராகுல் இனிமேல் முறைவாசல் செய்யவேண்டியதுதான் . கொஞ்சநாளுக்கு லல்லுவுக்கு , அப்புறம் கொஞ்ச நாளுக்கு அகிலேஷுக்கு . பிரமாதம் ....
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201717:50:01 IST Report Abuse
Swaminathan Nath ராகுல் அதிர்ஷ்ட காரர், அகிலேஷ் க்கு இனி கெட்ட காலம்,
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201717:49:12 IST Report Abuse
Swaminathan Nath ragul rasi karar, akelishku pooratha kaalam,
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஜன-201717:29:55 IST Report Abuse
Endrum Indian “ஓம் சர்வ ரோக நாசனாமாய நமஹ”
Rate this:
Share this comment
Cancel
Anees Umar - kadayanallur,இந்தியா
11-ஜன-201717:16:40 IST Report Abuse
Anees Umar ok Mr,Sriram wait & see
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-ஜன-201717:16:13 IST Report Abuse
இந்தியன் kumar தெளிவான தீர்ப்பு கிடைக்கும் , தனி மெஜுரிட்டி கிடைக்கும். பொறுத்திருந்து பாப்போம்.
Rate this:
Share this comment
Cancel
RAVIKUMAR SRINIVASAN - Chennai,இந்தியா
11-ஜன-201716:12:34 IST Report Abuse
RAVIKUMAR SRINIVASAN கேடியும் கேடியும் ஒண்ணா சேந்திருக்காங்க. வெரி சூப்பர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை