Advertisement
ஜல்லிக்கட்டு வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுத்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தடை நீடிப்பதால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய-மாநில அரசுகள் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக எம்.பி.,க்களும் இன்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திற்கும் சென்று முதன்மை செயலர் மிஸ்ராவிடம் மனு அளித்தனர். இதற்கிடையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வழக்கு நிலுவையில் உள்ளதால் சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்காக காத்திருப்பதாகவும், உத்தரவு வந்த பிறகு ஜல்லிக்கட்டு குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் அனில் மாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுத்துள்ளதால் சுப்ரீம் கோர்ட் இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பை வெளியிட முடிவு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சுப்ரீம்கோர்ட் அனுமதி வழங்குமா? என்பதில் தொடர்ந்து கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jesudass Sathiyan - Doha,கத்தார்
11-ஜன-201723:43:54 IST Report Abuse
Jesudass Sathiyan தமிழ்நாட்ல பாஜக ஆட்சிக்கு வந்தால் தான் ஜல்லிக்கட்டு நடக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
11-ஜன-201723:21:10 IST Report Abuse
Jayaraman Pichumani அறிவியல் பூர்வமான விஷயமான ஜல்லிக்கட்டை நடத்த எவனுடைய அனுமதியோ, உத்தரவோ தேவையில்லை. முதல் வேலையாக இந்த PETA-வை நாட்டை விட்டு துரத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Prakash - tamilnadu,இந்தியா
11-ஜன-201722:48:09 IST Report Abuse
Prakash ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு ஒன்றும் ஆகாது. அதற்கு தடை. ஆனால் இறைச்சிக்காக மாடுகளை கொல்ல தடை இல்லையாம்?? என்ன அரசோ என்ன நீதிமன்றமோ??? இதுவரை எந்த ஜல்லிகட்டிலாவது மாடு இறந்திருக்கிறதா?? PETA வை யோசித்து பார்க்க சொல்ல வேண்டும்.... ஆனால் இறைச்சிக்காக மாடுகளை கொள்வது அவர்களுது கண்ணில் தெரிகிறதா? அல்லது கண்ணை மூடிக்கொண்டார்களா????
Rate this:
Share this comment
Cancel
Krishna - Dindigul,இந்தியா
11-ஜன-201721:46:08 IST Report Abuse
Krishna கோவை குண்டு வெடிப்புல 50 100 அப்பாவிங்கள கொன்ன சிமி தடை செய்யப்பட்டதும் எல்லாரும் வேற பேர்ல ஒரு 50 கட்சி ஆரம்பிச்சு ஆட்சி ல பங்குவகிக்கலயா அது மாதிரி தான் பண்ணனும் ..... அநியாயம் பண்ணவனே வேற பேர்ல சுதந்திரமா திரியிறப்ப.... நம் உரிமையை காக்க இதெல்லாம் தப்பே இல்ல ...
Rate this:
Share this comment
Cancel
Krishna - Dindigul,இந்தியா
11-ஜன-201721:42:15 IST Report Abuse
Krishna எப்படி CSK புனே ஆனதோ அது மாதிரி ஜல்லிக்கட்டு என்பதை பொங்கல் விழா... இல்ல தமிழர் விழா இப்டி எதாவது ஒரு பேர வச்சுகிட்டு நடத்திட்டு போயிட்டே இருக்கணும்.... உச்ச நீதி மன்றமாவது புண்ணாக்கு நீதி மன்றம் மாவது.....
Rate this:
Share this comment
Cancel
Eswaran - covai,இந்தியா
11-ஜன-201720:53:25 IST Report Abuse
Eswaran காவிரி உத்தரவை(2000கன அடி) கர்நாடக அரசு எப்படி மதிப்பதில்லையோ , அதைப்போல தமிழ்நாடும் ஜல்லிக்கட்டு கேசில் நடக்கவேண்டியதுதானே.அதற்க்கு தமிழக அரசு உடன்படுமா?
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
11-ஜன-201720:39:53 IST Report Abuse
Arivu Nambi எதுக்கும் ஒருதடவை அடிமைப் பெண்ல எம்.ஜீ.ஆர்.சிங்கத்தை அடக்குறத பாத்துப்புட்டு தீர்ப்பு குடுங்க .அப்புறமா மறுபடியும் மொதல்ல இருந்துன்னு சொல்லக்கூடாது. ஏம்பா சிங்கப்பூர் சேகர் சொல்லுயா..
Rate this:
Share this comment
Cancel
kuppusami - chennai,இந்தியா
11-ஜன-201718:22:06 IST Report Abuse
kuppusami வீர ஆண்கள் விளையாட்டு என்று போடலாம்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஜன-201717:43:42 IST Report Abuse
Endrum Indian ஜல்லிக்கட்டு-மாடுகள் துன்பத்துக்கு உள்ளாகுகின்றன என்று வழக்கு தொடுத்தால் அப்போ மாட்டிறைச்சி பிரியாணி கூட தடை செய்வோம் என்று சொன்னால் அந்த வழக்கை எப்பொழுதோ வாபஸ் வாங்கியிருப்பார்கள். எல்லா பிராணி வதையையும் இதன் மூலம் நிப்பாட்டி விடலாமே. செய்யுமா சுப்ரீம் கோர்ட்? செய்யாது? அப்புறம் எதற்கு இந்த வீண் நியாயம்? அப்போ குதிரை பந்தயம்-குதிரை வதை பாக்சிங்க்-மனித வதை இதை எல்லாம் நிப்பாட வேண்டியது தானே???
Rate this:
Share this comment
rishi - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201718:32:23 IST Report Abuse
rishiசரியான பதிவு...
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
11-ஜன-201717:19:38 IST Report Abuse
Chandramoulli இருக்கிற பிரச்சனை போதாது என்று இது வேறையா . தேவை இல்லாமல் மாட்டையும் பிடித்து கொண்டு , அதன் உரிமையாளர்களும் வேண்டாத சட்டங்கள் மூலம் உள்ளே தள்ளி விடுவார்கள் . அதற்கு யார் செலவு செய்து அவர்களை மீட்பது . யதார்த்தத்திற்கு வர வேண்டும். பணம் இருப்பவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் . ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் பணம் சம்பாதிக்க அங்கு நடத்தவில்லை . வீர விளையாட்டை நடத்தி அதில் சந்தோசம் அடைகின்றனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்