உலக போர் ஆரம்பித்ததை முதலில் சொன்ன நிருபர் மறைவு| Dinamalar

உலக போர் ஆரம்பித்ததை முதலில் சொன்ன நிருபர் மறைவு

Added : ஜன 11, 2017
Advertisement
உலக போர் ஆரம்பித்ததை முதலில் சொன்ன நிருபர் மறைவு

லண்டன் : இரண்டாம் உலக போர் ஆரம்பமானதை உலகுக்கு முதன் முதலில் தெரிவித்த இங்கிலாந்தின் டெய்லி டெலகிராப் பத்திரிக்கை நிருபர் நேற்று ஹாங்காங்கில் காலமானார். 105 வயதான கிளாரி ஹேலிங்ஒர்த் என்ற அந்த பெண் நிருபர் தான் முதன் முதலில், ஜெர்மன் படைகள் போலந்துக்குள் நுழைந்தது என்று, அவர் பணியாற்றிய டெய்லி டெலகிராப் பத்திரிக்கைக்கு தகவல் கொடுத்தார். இரண்டாம் உலக போரின் ஆரம்பமே, ஜெர்மன் படைகள் போலந்துக்குள் :நுழைந்தது தான். வரலாற்று சிறப்புமிக்க அந்த செய்தியை டெய்லி டெலகிராப் பத்திரிக்கை தான் முதன் முதலில் உலகுக்கு சொன்னது. இப்போது போல் செய்தியை கொடுத்த நிருபரின் பெயரை வெளியிடுவது அப்போது வழக்கம் இல்லாததால் இவர் பெயர் பத்திரிக்கையில் வெளிவரவில்லை.இருந்தாலும் இந்த செய்தி, காடோவைஸ் இல் இருக்கும் எங்கள் சிறப்பு செய்தியாளரிடமிருந்து வந்தது என்று எழுதியிருந்தது.
அது நடந்தது செப்டம்பர் மாதம் 1 ம் தேதி 1939 ம் வருடம். காடோவைஸ் என்ற போலந்திற்கு சொந்தமான பகுதியில் ஜெர்மன் படைகள் நுழைந்ததை, அந்த பகுதியிலேயே தங்கி இருந்த கிளாரி, டெய்லி டெலகிராப்புக்கு தகவல் கொடுத்தார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் உள்ள அரசு செகரட்டரி ஒருவருக்கும் போன் செய்து தெரிவித்திருக்கிறார். அப்போது கிளாரி சொன்ன வார்த்தை, போர் ஆரம்பமாகி விட்டது என்பது தான்.
இரண்டாம் உலக போருக்குப்பின் மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் பல ஆண்டுகளாக நிருபராக பணியாற்றிய கிளாரி, பின்னர் 1949 முதல் சீனா வந்து அங்கு நிருபராக பணியாற்றினார். இங்கிலாந்தின் பொறுப்பில் இருந்த ஹாங்காங், சீனாவிடம் 1997 ல் ஒப்படைக்கப்பட்டபோது அங்கு சென்றவர் பின்னர் அடிக்கடி ஹாங்காங் சென்றுகொண்டிருந்தார். பின்னர் அங்கேயே தங்கி இருந்தார். அங்குள்ள வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, அங்கு அடிக்கடி சென்று அவரது நினைவுகளை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் செய்வாய் அன்று அவரது இல்லத்திலேயே இறந்து விட்டதாக பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை