விவசாயிகளுக்கு ஒருநாள் சம்பளத்தை தர அரசு ஊழியர்கள் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஒருநாள் சம்பளத்தை தர அரசு ஊழியர்கள் முடிவு

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விவசாயிகள், வறட்சி, அரசு ஊழியர்கள் சங்கம்

சென்னை : வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை இந்த மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளோம் என்று தமிழக அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நதிநீர் இல்லாத நிலையில் பருவமழையும் பொய்த்து போனதால் தமிழக விவசாயிகள் துயரத்தில் வாடியுள்ளனர். பயிர்கள் கருகியதால் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வேதனையான நிலையை அறிந்து அவர்கள் துக்கத்தில் பங்கெடுக்கும் வகையில் அரசு அலுவலக உதவியாளர்கள், ஊராட்சி, நகராட்சி, அனைத்து பல்கலை கழகங்கனின் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் ஒருநாள் சம்பளத்தை இந்த மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளோம்.
விவசாயிகள் நலன் காக்க ஒருநாள் ஊழியத்தை பிடித்தம் செய்து கொள்ள முதல்வரை கேட்டுக் கொள்கிறோம். வணிக வரித்துறை அலுவலக உதவியாளர்கள் சங்கம், மாநகராட்சி, நகராட்சி அலுவலக உதவியாளர்கள் சங்கம், ஊராட்சி, குடிநீர் மேல் நிலையநீர் தேக்க தொட்டி, கை பம்பு மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murasu - madurai,இந்தியா
12-ஜன-201701:47:47 IST Report Abuse
murasu மிகவும் நல்ல முடிவு , சரியான பயனாளிகளுக்கு அது சென்றடைய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். இதே போல் அணைத்து தனியார் நிறுவன ஊழியர்களும் , IT ஊழியர்களும் , வணிக சங்கங்களும் தங்கள் பங்களிப்பை செய்து நமது ஆணிவேராம் உழவர்களை காத்து நமது நன்றிக்கடனை செலுத்துவோம் . வாழ்க மனிதாபிமானம் , வளர்க உழவர் வாழ்வு , வாழ்க தமிழ் , வாழ்க மனித நேயம் , வளர்க சகிப்புத்தன்மை .
Rate this:
Share this comment
Cancel
Nagar Iyer - mumbai,இந்தியா
11-ஜன-201722:50:15 IST Report Abuse
Nagar Iyer இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு என்றாலும் நிரந்தர தீர்வு அல்ல. விவசாயிகளை 'ரசாயன விவசாயம்' என்ற விஷப்பாம்பிடம் இருந்து காப்பாற்றும் வரை விவசாயிகள் பிரச்சனை தீராது. சிக்கிம் மாநிலம் போன்று ஒவ்வொரு மாநில முதல்வரும் நேர்மையுடனும் விவேகத்துடனும் செயல்பட்டு 'ரசாயன விவசாயத்தை ' ஒழித்துக்கட்டி 'நம் இன பசு மற்றும் காளை ஆதார விவசாயத்தை' பின்பற்றி தனது மாநிலத்தை பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும். இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமது மற்றும் நமது சந்ததியர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 'ரசாயன விவசாயத்தை' ஒழித்துக்கட்ட நமது பங்கை ஆற்றவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
singaivendan - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-201721:29:14 IST Report Abuse
singaivendan வணங்குகிறோம்....கோடான கோடி நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Jayadev - CHENNAI,இந்தியா
11-ஜன-201721:04:09 IST Report Abuse
Jayadev தி மு க எவ்வளவு என கவனியுங்கள் ???
Rate this:
Share this comment
Cancel
Sabari Krishna - Bangalore,இந்தியா
11-ஜன-201716:04:49 IST Report Abuse
Sabari Krishna வாழ்த்துகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Ranganathan -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-201716:01:52 IST Report Abuse
Ranganathan இந்த முடிவு நல்ல முடிவுதான் ஆனால் நிவாரணம் சரியான பயனாளிக்கு செல்லுமா.அதிகாரிகளும்,சங்க தலைவர்களும்,அமைச்சர்களும் இந்த பணத்தில் கைவைக்காமல் சுத்தமாக பாதிப்படைந்தவர்களுக்கு கிடைத்தால் இந்த முடிவை நல்லமுடிவாக மக்கள் கருதுவார்கள் அதோடு எவ்வளவு பணம் பிடித்தம் செய்தோம் யார்யாருக்கு கொடுத்தோம் என்ற புள்ளி விவரங்களை இந்த கனிணி காலத்தில் வெளியிடவேண்டும் விவசாயி பாதிக்கப்பட்டதில் அதிகாரிகளும் அரசியல் ஆள்வோரும் கையாடல் செய்யக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
11-ஜன-201716:01:09 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. நல்லது செய்ய நினைக்கிறீர்கள் வாழ்த்துக்கள், ஆனால் அதை அரசாங்கத்திடம் கொடுக்காதீர்கள், நீங்கள் உங்கள் சங்கம் மூலம் செய்யுங்கள், அரசாங்கம் இந்த விவசாயிகளின் மரணத்தை மூடி மறக்க பார்க்கிறது, கிட்டத்தட்ட 190 மேல் ஆகிவிட்ட இந்த மரணத்தை, 17 க்குள் சுருக்குகிறது. மேலும் நீங்களும் சம்பளத்தை கொடுத்தால், அதை அவர்கள் அம்மெய்யின் சாவுக்காக செத்தவர்களுக்கு மொய் எழுதுவார்கள், உங்கள் பணத்தில். விவசாயத்தில் நாட்டம் என்று மரணித்தவனும், அம்மெய்யின் கணக்கில் செத்தவனுக்கும் ஒரே, அதே மூணு லட்சம் இது என்ன கொடுமை. உங்கள் பணம் கட்சி கணக்கில் வரவு வைக்க நீங்களே வாய்ப்பு கொடுக்காதீர்கள், உங்கள் சங்கம் மிக பெரிது, உங்கள் ஆட்கள் தமிழகமெங்கும் உள்ளார்கள், அவர்கள் மூலம் நேரடியாக கொண்டுசேருங்கள் இந்த மனிதாபிமான உதவியை, நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Jesudass Sathiyan - Doha,கத்தார்
11-ஜன-201715:56:41 IST Report Abuse
Jesudass Sathiyan வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன்....
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
11-ஜன-201715:56:24 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. நல்ல மனது பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
11-ஜன-201715:54:16 IST Report Abuse
தேச நேசன் வெள்ளைப் பிள்ளையாருக்கு அதனையே கிள்ளி படையல் நைவேத்தியம் படைப்பார்களாம் அ ஊ கள் மாமூல் வாங்காமலிருந்தாலே விவசாயிகளின் மாமூல் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்திருக்கும் BDO முதல் RI VAO க்கள் செய்யும் அட்டகாசம்தான் வேளாண்மை உருப்படாமல் போனதற்கு காரணம் இவை இல்லாமலிருந்தால் ஒரு ஆண்டு வறட்சியைக் கூட தாக்குப் பிடித்திருப்பார்கள்
Rate this:
Share this comment
Thlaivan - chennai,இந்தியா
11-ஜன-201716:59:47 IST Report Abuse
Thlaivanமிகவும் தரமில்லாத கருத்து நீ இதுவரை என்ன செய்துள்ளாய் என்று நினைத்து பார்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை