ரோட்டில் கூடி கலைந்த தீபா ஆதரவாளர்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் கூடி கலைந்த தீபா ஆதரவாளர்கள்

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ரோட்டில், தீபா ஆதரவாளர் கூட்டம்

சென்னை: சென்னை, நங்கநல்லூரில் தீபா ஆதரவாளர்கள் கூட்டம், கல்யாண மண்டபத்தில் நடக்காமல் நடு ரோட்டில் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


ரோட்டில் கூட்டம்:

அ.தி.மு.க.,வில் சசிகலாவுக்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு மக்கள் ஆதரவு திரும்பி வருகிறது. தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் என்பவர், சென்னை, நங்கநல்லூரில் உள்ள கே.சி.பி. மகால் என்ற கல்யாண மண்டபத்தில் இன்று மதியம் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து இருந்தார்.

இதற்காக முன்பணத்தையும் கல்யாண மண்டபத்தில் செலுத்தி இருந்தார். ஆனால், உள்ளூரை சேர்ந்த அ.தி.மு.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக இன்று திருமண மண்டபத்திற்குள் தீபா ஆதரவாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட தீபா ஆதரவாளர்கள் ரோட்டில் ஒன்று கூடி பேசினர். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விவாதித்தனர். முடிவுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Valliappan - Chennai,இந்தியா
12-ஜன-201705:39:19 IST Report Abuse
Valliappan சின்னம்மா அண்ட் கோ, யாரையும் மிரட்டவே இல்ல.. எம் எல் ஏ க்கள், எம் பி க்கள், எதிர்ப்பாளர்கள் எல்லோரும் அடுத்த நாள் வேற அறிக்கை தானாகவே கொடுத்தார்கள் ... தீபா போஸ்டர் எல்லாம் போலீஸ் கிழிக்கவே இல்ல.. அது தி மு க வேலை அப்டியா சொல்றாங்க.. நம்பிட்டோம்..
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
12-ஜன-201703:26:05 IST Report Abuse
Suman பல சமூக சிந்தனையாளர்கள், சிறந்த அறிஞர்கள் தமிழ் நாட்டில் உள்ளனர். அவர்களை ஆதரிக்கவோ அவர்களை முன் நிறுத்தவோ மக்கள் தயாராக இல்லை இதை எல்லாம் பார்க்கும்போது மன்னர் ஆட்சில் இருக்கிறோம் என்றே தோன்றுகிறது நாடு முன்னேற பாலம் கல்யாண சுந்தரம் போன்ற தனலமற்றவர்களை மக்கள் அழைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
12-ஜன-201700:38:38 IST Report Abuse
Murukesan Kannankulam பணத்தால் சசிகலா MLA / MP / MLC களை விலக்கி வாங்கலாம் ஆனால் மக்கள் சக்தியை ஒன்றும் செய்ய முடியாது. தீபாவிற்கு பெருகும் கூட்டம் பாச கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel
John - Chennai,இந்தியா
12-ஜன-201700:10:13 IST Report Abuse
John பாத்திரம் தேய்க்கும் வேலைக்காரி முனியம்மாவுக்கு மட்டும்தான் முதல்வர் பதவி தருவீர்களா, ஒரு வெள்ளைக்காரனுக்கு தர மாட்டீர்களா..இந்நாள் முன்னாள் வருங்கால முதல்வர், யாராவது சட்டு புட்டுன்னு எனக்கும் முனியம்மா மாதிரி ஒரு வேலை போட்டு கொடுங்க..முனியம்மாவுக்கு அப்பல்லோ மாதிரி, எனக்கும் பெரிய பெரிய மருத்துவமனை எல்லாம் தெரியும் சொல்லிப்புட்டேன்..மறக்காம உங்க கால் உயரம் எவ்ளோன்னு முன்னாடியே சொல்லிடீங்கன்னா, பெட்டி சைஸ் சின்னதா செய்ய சொல்லிப்போடுவேன்..
Rate this:
Share this comment
RENU - Delhi,இந்தியா
12-ஜன-201705:54:47 IST Report Abuse
RENUகலாச்சாரம்னா என்னன்னு முதலில் தெரிந்து கொள்ளுங்கள் ...எழுதுவதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது .....
Rate this:
Share this comment
John - Chennai,இந்தியா
12-ஜன-201720:38:18 IST Report Abuse
John35 வருடங்களாக பாத்திரம் தேய்த்த வேலைக்காரி முனியம்மாவை தலைவியாய் கொண்ட நீங்கல்லாம் கலாச்சாரம் பத்தி பேசறீங்களா..ஆமாம் நீ யாரு வீட்ல பாத்திரம் தேய்க்கற..நீயும் முனியம்மா வழிதானா..உன்ன மாதிரி நிறைய பேரு கெட்டுப்போக போறாங்க முனியம்மாவை பார்த்து.....
Rate this:
Share this comment
Cancel
jay - toronto,கனடா
11-ஜன-201719:37:33 IST Report Abuse
jay "கலைந்த " தீபா ஆதரவு யாளர்கள் வெறும் தலைப்பு மட்டும் இல்லை ,, நெஜமாவே நடக்கும் ,, இப்படி தீபா அம்மா இழுத்தடித்தால்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஜன-201718:59:05 IST Report Abuse
K.Sugavanam காத்துபுகாத இடத்துல நடக்குற சம்பாஷணையை கூட verbatim போடும் நம்ப நிருபருக்கு .தெருவுல அவங்க நின்னு விவாதித்து எடுத்த முடிவுகள் தெரியலையாமே.. அவ்வளவு பயமா? அந்த கல்யாண மண்டபக் காரரு மாதிரி..
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜன-201719:57:29 IST Report Abuse
தமிழ்வேல் வந்த போட்டோவை வச்சிக்கிட்டு செய்தி போட்டிருக்கலாம். ஜி...
Rate this:
Share this comment
Cancel
jay - toronto,கனடா
11-ஜன-201718:54:42 IST Report Abuse
jay தீபா அம்மா அதில் கலந்து கொள்ளவில்லை ,, ஆதரவாளர்களுக்கும் ,, தீபா அம்மாவுக்கும் பேச்சு தொடர்பு இல்லை ,,, திசை மாறி தடுமாறுகிறது ,,, கட்சி
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
11-ஜன-201717:55:23 IST Report Abuse
Paranthaman சீப்பை கலயாணத்தில் ஒளித்துவைத்தால். வேறு சீப்பு கிடைக்காதா.முட்டாள்களே.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜன-201719:56:20 IST Report Abuse
தமிழ்வேல் கட்டுமரம் ஒரு கப்பலையே அனுப்பும்....
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
11-ஜன-201717:54:07 IST Report Abuse
JAY JAY இந்தியன் குமார் , தங்களுமா காசு வருவதை கொச்சைப்படுத்துவது?.. தாங்கள் வைகோவின் தீவிர ஆதரவாளரல்லவா?. இப்படி பேசலாகுமா?...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜன-201719:55:29 IST Report Abuse
தமிழ்வேல் கேள்வி கேட்கிறவனுக்கு முதல்ல பதில்....
Rate this:
Share this comment
ஈரோடுசிவா - erode ,இந்தியா
11-ஜன-201720:24:19 IST Report Abuse
 ஈரோடுசிவா"ஊசி போகும் வழி தான் நூல் போகும்.... தலைவன் எவ்வழியோ தொண்டணும் அவ்வழி.......
Rate this:
Share this comment
ஈரோடுசிவா - erode ,இந்தியா
11-ஜன-201720:45:58 IST Report Abuse
 ஈரோடுசிவாஇலட்சக்கணக்கான புதிய வாக்காளர்களைக் கொண்ட தமிழகத்தில் ...,ஆண்களை விட அதிகமான பெண் வாக்காளர்களைக் கொண்ட தமிழகத்தில் படித்த ,இளம் வயதுடைய ,ஒரு பெண் தலைவி தலையெடுக்கிறார்... ஜெ-வின் ரத்த உறவு எனபதும் ,ஜெ-வைப் போன்ற தோற்றமும் கூடுதல் தகுதி... இனி காசுக்கு ஓட்டுகளை விற்ற காலம் மாறி புதிய சகாப்தம் உருவாகப் போகிறது....ஜாதி,மத ,ஆரிய ,திராவிட கூப்பாடுகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு இளைய சமுதாயத்தின் பேராதரவோடு தமிழகதில் மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் "ஜெ.தீபா........
Rate this:
Share this comment
ஈரோடுசிவா - erode ,இந்தியா
11-ஜன-201721:32:37 IST Report Abuse
 ஈரோடுசிவா"பொட்டச்சி தானே....இவள் என்னத்த கிழிக்கப் போகிறாள்...."என்று ஏளனம் செய்து கொக்கரித்த திருக்குவளை கோமான் ஜெ -விடம் திண்டாடி தெருவில் நின்றதையும் இந்த நாடு பார்த்தது...இன்றைக்கும் அதே தவறை செய்கிறார்கள் ......
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
11-ஜன-201717:22:44 IST Report Abuse
Amma_Priyan திருட்டு கூட்டம் வருவதற்கும் ஆளுவதற்கும் ரயிலை ஓட்டுவதற்கும் டெலிபோனை கம்பியுடன் தரையில் பதிப்பதற்கும் தமிழகம் கரி பேரம் நடத்துவதற்கும் ஆசைப்படவில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை