People living near BSF's J&K camp say officers sell rations to civilians at half the market rate | கமிஷன் பார்க்கும் பி.எஸ்.எப்., அதிகாரிகள்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கமிஷன் பார்க்கும் பி.எஸ்.எப்., அதிகாரிகள்?

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (18)
Advertisement
கமிஷன் பார்க்கும் பி.எஸ்.எப்., அதிகாரிகள்?

புதுடில்லி: பி.எஸ்.எப்., ஜவான்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் பாதி விலைக்கு விற்கப்படுவதாக, பொது மக்களும், ஜவான்களும் கூறியுள்ளனர். மேலும், அலுவலகத்திற்கு பொருட்கள் கமிஷன் அடிப்படையில் வாங்கப்படுவதாக பர்னிச்சர் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.


விசாரணை:

ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றும் வீரர், தேஜ் பகதுார் யாதவ், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், தானும், பிற வீரர்களும் மிக மோசமான உணவை சாப்பிடுவதாகவும், இந்த சூழ்நிலையில், எவ்வாறு பணியாற்ற முடியும் என்றும் குற்றஞ்சாட்டி, மூன்று வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார்.


விற்பனை:

இந்நிலையில், பி.எஸ்.எப்., வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை பி.எஸ்.எப்., உயரதிகாரிகள் விற்பனை செய்வதாக பொது மக்களும், ஜவான்களும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஜவான் ஒருவர் கூறுகையில், எங்களுக்கு வழங்கப்படும் பருப்பு, காய்கறி ஆகியவற்றை, முகாமுக்கு வெளியே பொது மக்களுக்கு குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, எங்களுக்கு எந்த வசதியும் கிடைக்காமல் செய்து விடுகின்றனர். தினசரி எங்களுக்கு தேவையான பொருட்களையும் கிடைக்காமல் செய்து விடுகின்றனர். அவற்றை தங்களது ஏஜென்ட்களுக்கு விற்கின்றனர் எனக்கூறினார்.கான்ட்ராக்டர் ஒருவர் கூறியதாவது: பி.எஸ்.எப்., முகாம் வெளியே, சந்தையில் விற்கப்படும் விலையை விட பெட்ரோல் விலை பாதிவிலையில் எங்களுக்கு கிடைக்கும். அரிசி மற்றும் பல பொருட்கள் குறைந்த விலையில் எங்களுக்கு கிடைக்கும் என்றார்.


கமிஷன்:

பர்னிச்சர் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், அலுவலக உபயோகத்திற்காக எங்களிடம் பொருட்கள் வாங்கும் உயரதிகாரிகள், அதற்கு கமிஷன் பெற்று விடுவர். இதற்காக அவர்கள்தரம் பற்றி கவலைப்பட மாட்டார்கள். பி.எஸ்.எப்., ஏலத்தில் மின்னணு முறையிலான டெண்டர் கிடையாது எனக்கூறினார்


மறுப்பு:

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பி.எஸ்.எப்., உயரதிகாரிகள், படையில், ஜவான் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் பணியில் இருக்கும் வீரர்களின் உயிரில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்படாது எனக்கூறினார்.சட்டம் ஒழுங்கு பணியில் உள்ள சி.ஆர்.பி.எப்., ஜவான் ஒருவர் கூறுகையில், பணியில் இருக்கும் எங்களுக்கு வழங்கப்படும் உணவு தரத்தில் குறைவு இருக்காது. பணி முடித்த பின்னர் எங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படுகின்றன என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
11-ஜன-201722:23:55 IST Report Abuse
மதுரை விருமாண்டி ....மித்ரோன்.. அதனால் தான் நாங்கள் இந்திய ராணுவத்தை தனியார் வசம் ஒப்படைக்க தீவிரமாக யோசிக்கிறோம். ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற தேச பக்த கம்பெனியின் வசம் நமது ராணுவத்தின் பராமரிப்பை ஒப்படைக்கிறோம்.. சொல்லுங்க.. பாரத் மாதா கீ ஜெ..
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
11-ஜன-201720:46:57 IST Report Abuse
balakrishnan மோடி ஆட்சியில் இப்படி ஒரு நிலையா, வெட்கம், வெட்கம், என்ன செஞ்சாலும் ஊழலை ஒழிக்க முடியாது, லஞ்சத்தை ஒழிக்க முடியாது, துஷ் பிரயோகத்தை நிறுத்த முடியாது, பேசாம எல்லா நோட்டும் செல்லாதுன்னு சொல்லிடவேண்டியது தான் அப்ப எங்க இருக்கும் லஞ்சம், மக்கள் எக்கேடோ கேட்டு போகட்டும்,
Rate this:
Share this comment
Cancel
ARUN - coimbatore,இந்தியா
11-ஜன-201719:18:06 IST Report Abuse
ARUN உயர் பதவிக்கு வந்த அதிகாரிகள் ,காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது லஞ்ச அடிப்படையில் உயர் பதவிக்கு வந்திருப்பார்கள். இவர்கள் நாட்டை விற்ககூட தயங்காத தேச துரோகிகள் .இன்னும் என்ன என்ன வெளியே வரப்போகிறதோ. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இனிமேல் தான் ஒவ்வொன்றாக வெளியே வரும்.
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
11-ஜன-201718:58:10 IST Report Abuse
Sambasivam Chinnakkannu உண்மை இருக்கலாம் ,,,,இதற்க்கு முன் தமிழகத்திலேயே பல இடங்களில் (ராமநாதபுரம் முகாம் ) டீசல் திருடி பாதி விலைக்கு விற்பதைப்பற்றி என் நண்பர் சொல்லி இருக்கிறார் ,,,, மறுப்பதற்கில்லை ,அரசு விசாரணை செய்ய வேண்டும் ,,அதே சமயம் அதிகாரிகள் சக ஜவான்களை நண்பர்களாக பார்க்க வேண்டும் , வேலையில் தான் அதிகாரி ,தனிப்பட்ட முறையில் இல்லை என்பதை உணர வேண்டும் ,,, கூட்டு முயற்சி தான் பலன் அளிக்கும் , அதனால் சக ஜவான்களுடன் சகஜமாக பேசி , வேலை வாங்கவேண்டும் ,,,
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஜன-201718:42:12 IST Report Abuse
K.Sugavanam பர்னிச்சரை அப்பால பாருங்கப்பா.. அந்த சாப்பாட்டு கான்டராக்டரு யாரு? அவரை புடிச்சி நாலு "தப்பு தப்பாம" அதை மறைக்க பர்னிச்சர் வியாபாரிகள் பேட்டியா? நல்லா சவுண்டு விடுறாங்க ஒன்னை மறைக்க பெரிசா..
Rate this:
Share this comment
Antoni Raj - Uthamapalayam,இந்தியா
11-ஜன-201718:59:51 IST Report Abuse
Antoni Rajசாப்பாட்டுக்கு காண்ட்ராக்டர்கள் யாரும் கிடையாது. எல்லையில் பணிபுரியும் இவர்களுக்கு மெஸ் வசதி உள்ளது. மற்றும் ரேஷன் கிடைக்கிறது. ஆனால் தினசரி உணவு தயாரிக்க எவ்வளவு ரேஷன் சாதனங்கள் கொடுக்க வேண்டுமோ அதை மெஸ்ஸுக்கு கொடுப்பது கிடையாது....
Rate this:
Share this comment
Cancel
rishi - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201717:54:42 IST Report Abuse
rishi வேதனியான விசயம்
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-201717:43:43 IST Report Abuse
Kasimani Baskaran எல்லயைக்கூட காங்கிரஸ் விட்டுவைக்கவில்லை... பாரிக்கர் இதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்கிறாரா என்று பார்க்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
Thlaivan - chennai,இந்தியா
11-ஜன-201717:20:22 IST Report Abuse
Thlaivan தேச பத்தர்கள் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்தானே அப்புறம் அவரு ஒரு பைத்தியம்னு கேச முடிச்சுடுவோம்.
Rate this:
Share this comment
GPV - Chennai,இந்தியா
11-ஜன-201717:26:48 IST Report Abuse
GPVதேச பக்தர்கள் ஆட்சியில் இருப்பதால் தான் நம்பிக்கையுடன் குறை சொல்ல முனைகிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்...
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
11-ஜன-201717:07:35 IST Report Abuse
Sampath Kumar கமீஸன் இல்லாத துறை இந்தியாவில் இல்லை எங்கும் எதிலும் நீக்கமற நிற்க்கும் இறைவன் போல ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
A. Sivakumar. - Chennai,இந்தியா
11-ஜன-201718:05:32 IST Report Abuse
A. Sivakumar.கமிஷன் கிடைத்தால், இந்த அதிகாரிகள் வீட்டில் இருப்பவர்களையும் விற்று விடுவார்கள்....
Rate this:
Share this comment
kuppuswamykesavan - chennai,இந்தியா
11-ஜன-201723:17:34 IST Report Abuse
kuppuswamykesavanவாய்ப்பு கிடைக்கும் வரை யோக்கியம் பேசும் சிலர் , வாய்ப்பு கிடைத்தால் லஞ்ச ஊழலில் வாழ்ந்து விடுகின்றனர். இந்த நிலை மாறுமா இந்தியவில்....
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
11-ஜன-201717:00:26 IST Report Abuse
மஸ்தான் கனி //பர்னிச்சர் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், அலுவலக உபயோகத்திற்காக எங்களிடம் பொருட்கள் வாங்கும் உயரதிகாரிகள், அதற்கு கமிஷன் பெற்று விடுவர்// கடைக்காரருக்கும் உயர் அதிகாரிக்கும் இடையே சமரசம் உண்டு., கமிஷன் ..கமிஷன். ஜவான்களும் எதிரியை சுட்டு வீழ்த்தினால் அவர்களுக்கும் கமிஷன் கொடுக்கும் அம்ஷத்தை மோடி அரசு அறிவித்தால் ரொம்ப நல்லா இருக்கும். சாப்பாடு ஒரு மேட்டரே இல்லேன்னு போய் கமிஷன் ரொம்ப முக்கியமாக கருதுவார்கள் நம் வீரர்கள். காசே தான் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை