30 சதவீத டிரைவிங் லைசென்ஸ்கள் போலி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

30 சதவீத டிரைவிங் லைசென்ஸ்கள் போலி

Updated : ஜன 11, 2017 | Added : ஜன 11, 2017 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டிரைவிங் லைசென்ஸ், போலி, நிதின் கட்காரி

புதுடில்லி: இந்தியாவில் உள்ள டிரைவில் லைசென்சுகளில் 30 சதவீதம் போலியானது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: போக்குவரத்து அமைப்பை திறம்பட மேம்படுத்த வேண்டியுள்ளது. இதன் மூலம் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். போக்குவரத்து விதிகளில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்க வேண்டும். சாலை அமைப்பை மாற்றியமைக்க வேண்டும். இது நமது கடமை.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிப்பதன் மூலம், நேர்மறையான பாதிப்பு ஏற்படும். மேலும், இதனால் மக்கள் சாலை விதிகளை கடுமையாக பின்பற்றுவார்கள். நமது சாலை அமைப்பை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நவீனப்படுத்துவதுடன், கணிணிமையமாக்க வேண்டும். அதிகாரிகள் தலையீடு இன்று அபராதம் டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
12-ஜன-201710:16:22 IST Report Abuse
christ RTO அதிகாரிகள் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு வாகனத்தை முறையாக ஓட்ட தெரியாதவனுக்கெல்லாம் ஓட்டுநர் உரிமம் கொடுக்கிறார்களே அதனால் பல விபத்துகள் நடைபெறுகின்றனவே அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் ?
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஜன-201708:39:48 IST Report Abuse
Lion Drsekar ஜநாயகம் என்ற பெயரில் இங்கு நடப்பதே ஒரு போலி, குடும்ப ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டு வருகிறது, பெயர் என்னவோ ஜநாயகம், அப்படி இருக்க ,,,,? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
murasu - madurai,இந்தியா
12-ஜன-201701:40:54 IST Report Abuse
murasu இத கண்டுபிடிக்கவே அண்ணனுக்கு மூன்று வருஷம் ஆயிடுச்சு . சரிபண்றதுக்குள்ள 30 வருஷம் ஆயிடும் . வழக்கமான வசனத்தை காணோமே " கடந்த 70 ஆண்டுகள் காங்கிரஸ் லைசென்ஸை கிழித்திபோட்டுவிட்டது , அதை ஓட்ட பிஜேபி க்கு 700 வருடம் ஆட்சி தேவை , அது இதுன்னு புருடா'
Rate this:
Share this comment
Srinivas - India,இந்தியா
12-ஜன-201709:42:25 IST Report Abuse
Srinivasயோவ் முரசு 65 ஆண்டுகளா இத கண்டே புடிக்கல உங்க கொள்ளைக்கார அரசு, கூமுட்டை...
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
12-ஜன-201701:36:28 IST Report Abuse
Gnanam போலி என்று தெரிந்தும் விட்டு வைப்பானேன்? அதற்காக இனி இந்திய சட்டதிட்டங்களை மாற்றி எழுதவேண்டுமா? காவல் துறையை முடுக்கி பிடியுங்கள். வாகன சோதனை செய்து போலி லைசென்ஸ் வைத்திருப்பவரை சிறையிலிடுங்கள் போலி லைசென்ஸ் கொடுத்தவரை பணிநீக்கம் செய்யுங்கள், லைசென்ஸை கிழித்தெறியுங்கள். வேறு வழி இன்னும் வேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel
smoorthy - bangalore,இந்தியா
11-ஜன-201720:51:25 IST Report Abuse
smoorthy இவர் அறிக்கை படி பார்த்தால் வாகன சோதனையின் பொது உரிய அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்வது இல்லை என்பது தான் உண்மை ஆகிறது / ஆகவே முதலில் அவர்கள் செய்த பணிகளை மறு ஆய்வு செய்து அவர்களை தண்டிக்க வேண்டும் / RTO அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதினால் தான் தகுதி இல்லாதவர்கள் கூட ஓட்டுநர் உரிமம் பெற்று விடுகின்றனர் / இதனால் அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஆகிறது / இதற்க்கு ஒரு நல்ல முடிவு எடுத்தால் தான் மக்கள் உயிர் போகாமல் காப்பாற்ற முடியும் /
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
11-ஜன-201719:25:18 IST Report Abuse
Nakkal Nadhamuni 30 % தானா? இந்தியாவுல 30 % போலி, 70 % பேர்கிட்ட லைஸென்ஸ் கிடையாது. கிட்ட போய் பார்த்தீங்கன்னா இது எல்லா சான்றிதழுக்கும் பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201719:16:27 IST Report Abuse
PRABHU 30 சதவீத டிரைவிங் லைசென்ஸ்கள் போலி....அப்போ 100 % எல்லா லைசென்சுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது ன்னு ஒரு அறிவிப்பு வெளியீட்டு நம்ம கள்ள நோட்டு விஷயத்தில் செய்ததுபோல கலக்கிடலாம்......... யாராவது எதிர்த்தால் ....எல்லையில் நம்ம வீரர்கள்...... ஜெய் ஹிந்தி .....பாரத் மாதா கி ஜெய்... சொல்லுவோம்....
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
11-ஜன-201718:51:35 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. 30 தானா? ஓகே ஆனால் 90 % பேருக்கு தகுதியே கிடையாது. முறையாக தேர்வு வைத்தால் விதிமுறைகளே சுத்தமாக தெரியாது. விபத்துகளுக்கு அதுவே காரணம்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஜன-201718:34:49 IST Report Abuse
K.Sugavanam ஒரு உண்மையை சொல்லிட்டாருப்பா ..இவரோட டிரைவிங் லைசென்சு எப்புடி? நேர்ல போயி ஓட்டிக்காட்டி வாங்கி இருப்பாரா? ரினியூ பண்ணி இருப்பாரா? சொல்றது ஈஸி.. போற போக்குல எதை வேணா சொல்லிட்டு போயிரலாம்.. அப்போ இன்னொரு Delicencing surgery க்கு ரெடியாறாரோ இந்த டொக்டர்.
Rate this:
Share this comment
Chandramoulli - Mumbai,இந்தியா
11-ஜன-201719:32:56 IST Report Abuse
Chandramoulliஉங்களின் வாயில் சக்கரை போட வைத்து விடாதீர்கள் ....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-201718:28:59 IST Report Abuse
Kasimani Baskaran கண்காணிப்பை அதிகரித்தால் பாதி விதிமீறல்கள் குறையும்... ANPR மூலம் வாகனங்களை கண்காணித்து தானே சம்மன்களை அனுப்பும் முறைக்கு மாறவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை