கர்ப்பிணி பெண் குத்திக் கொலை : 2 வது கணவர் போலீஸில் சரண்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி பெண் குத்திக் கொலை : 2 வது கணவர் போலீஸில் சரண்

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: அரியலூர் அருகே, கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த, அப்பெண்ணின் இரண்டாவது கணவரான வாலிபர் போலீஸில் சரணடைந்தான்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மனைவி நாகம்மாள், 32; இவருக்கும், அரியலூர் மாவட்டம் நாயணப்பிரியாள் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் மணிகண்டன், 29; என்பவருக்கும், கடந்த 7 வருடங்களுக்கு முன் போன் மூலம் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து, நாகம்மாள் கணவனை பிரிந்து வந்து, மணிகண்டனுடன் வாழ்ந்து வந்தார். இதன் பின்னர், நாகம்மாளை தனது வீட்டில் தங்க வைத்துவிட்டு வெளிநாடு சென்ற மணிகண்டன் 2015ல் ஊர் திரும்பினார்.இதனையடுத்து நாகம்மாள் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிகிறது.இந்நிலையில், நேற்று நாகம்மாளுக்கும், மணிகண்டனுக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது, வேறு ஒரு நபரிடம் தனக்கு கள்ளத்தொடர்பு உள்ளதாகவும், தனது கருவுக்கு அவரே காரணம் என, மணிகண்டனிடம் நாகம்மாள் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன், வீட்டில் காய்கறி நறுக்கும் கத்தியால் நாகம்மாளை கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு, டி.பழூர் போலீஸில் சரணடைந்தான்.இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், கொலையாளி மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meenu - Chennai,இந்தியா
17-ஜன-201723:38:45 IST Report Abuse
Meenu கணவன் வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட ஒருசில, அதாவது ஒரு சில மனைவிமார்கள் கள்ள தொடர்பு வைத்துக்கொள்கின்றனர். இது நிறைய நடக்கிறது. பரவாயில்லை இதுதான் பெண்சுதந்திரம் என்று எடுத்துக்கொள்கிறார்கள் போலும்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-ஜன-201713:14:54 IST Report Abuse
Pasupathi Subbian நாகம்மாளுக்கு வேண்டாத வேலை. அதன் முடிவு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை