2030 ல் புகை பிடிப்பதால் 80 லட்சம் பேர் இறப்பர்.| Dinamalar

2030 ல் புகை பிடிப்பதால் 80 லட்சம் பேர் இறப்பர்.

Added : ஜன 11, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
2030 ல் புகை பிடிப்பதால் 80 லட்சம் பேர் இறப்பர்.

வாஷிங்டன் : புகை பிடிப்பதால் 2030 வாக்கில், வருடத்திற்கு 80 லட்சம் பேர் இறப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. அமெரிக்க தேசிய கேன்சர் இன்ஸ்டிடியூட் இந்த ஆய்வை மேற்கொண்டது. இறப்பவர்களில் 80 சதவீதத்தினர் நடுத்தர மற்றும் ஏழை நாட்டினர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
புகை பிடிப்பதை தவிர்க்க எல்லா நாடுகளும் பல வகைகளில் முயன்று வருகின்றன. புகையிலை பொருட்களுக்கு கடுமையான வரியையும் விதிக்கிறது. 2013 -14 ல் உலக அளவில் புகையிலை பொருட்களால் வந்த வரி வருவாய் மட்டும் 269 பில்லியன் டாலர் ( சுமார் 18 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் ) இருந்தாலும் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார் உலக சுகாதார அமைப்பின் புகையிலை தடுப்பு அமைப்பின் தலைவர் ஜெராமியாஸ் பால். சிகரட்டின் விலையை, வரியை போட்டு உயர்த்தி, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், இன்னும் சிகரட் விலை குறைவாகவே இருக்கிறது என்கிறார் பால்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை