ரியாத்: இந்திய ஹஜ் பயணிகளுக்கான கோட்டாவை சவுதி அரேபிய அரசு அதிகரித்துள்ளது. இதன்படி இதுவரையில் 1.36 லட்சம் ஆக இருந்த இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 1.70 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 29 ஆண்டுகளுக்கு பின் சவுதி அரேபிய அரசு இந்தியாவுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.