No Probe Into Sahara Diaries Case Against PM Narendra Modi, Others, Says Supreme Court | சகாரா விவகாரம்: ஆதாரமற்ற வழக்கில் பிரதமரை விசாரிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட் அதிரடி| Dinamalar

சகாரா விவகாரம்: ஆதாரமற்ற வழக்கில் பிரதமரை விசாரிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட் அதிரடி

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
சகாரா விவகாரம்: ஆதாரமற்ற வழக்கில் பிரதமரை விசாரிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடில்லி: ‛சகாரா குழுமத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அதை நிரூபிக்க போதிய ஆதாரம் சமர்பிக்கப்படாததால் பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்த முடியாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.


பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டுபிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா, பிர்லா குழுமங் களிடமிரு ந்து லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் கடும் குற்றம்சாட்டை முன்வைத்தார்.

இதுதொடர்பாக, கடந்த 2013, 14 ஆகிய ஆண்டுகளில் சகாரா குழுமத்தில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் என கூறி சில ஆவணங்களை அவர் கடந்த மாதம் வெளியிட்டார். அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட சில அரசியல்வாதிகளின் பெயர் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டிய ராகுல் ஊழல் குற்றச்சாட்டில் பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோர்ட் மேற்பார்வையில் பிரதமர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த கோரி அபிடவிட் தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதேகி, வாதிட்டதாவது 'பிரதமர் மோடிக்கு எதிரான லஞ்ச குற்றசாட்டில் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. இதுபோன்ற காகித ஆவணங்களை சட்டப்பூர்வ ஆதாரமாக ஏற்றால் நாட்டில் ஒருவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது' என்றார்.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு:


போதிய ஆதாரமில்லைகுஜராத் முதல்வராக இருந்த போது, நரேந்திர மோடி உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் சகாரா குழுமத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. ஆதாரமற்ற இந்த வழக்கில் பிரதமர் மோடியை விசாரிக்க முடியாது.


விசாரிக்க முடியாது


இந்த வழக்கில், போதிய ஆதாரமின்றி விசாரணைக்கு உத்தரவிட்டால், அது அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துபவர்களை இயங்கவிடாமல் முடக்குவது போல் ஆகி விடும். மேலும், அது ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பானது அல்ல.இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த நவ.,14 ஆம் தேதி நடந்த விசாரணையின் போதும் ஆதாரமற்ற இந்த வழக்கில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்து குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு அரசியலில் மீண்டும் ஒரு சறுக்கலை தந்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
12-ஜன-201709:36:10 IST Report Abuse
balakrishnan ஆதாரம் இருந்த மட்டும் அவரை விசாரித்துவிட்டு முடியுமா என்ன, அவ்வளவு சாதாரண ஆளா அவரு, ஒரு நிருபர் கூட கேள்வி கேட்க முடியாது, வல்லமை பொருந்திய அமெரிக்கா அதிபர் கூட நிருபர்களுடன் உரையாட முடியும், அவர்கள் அதிபரை கேள்வி கேட்க முடியும், கேள்வி கேட்க முடியாத ஒரு பொருள் l நமது பிரதமர் மட்டுமே
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-201710:24:57 IST Report Abuse
Kasimani Baskaranமுன்னர் ஒரு முறை ஒரு வெளிநாட்டு பயணத்தின் பொழுது அவருடன் சில நிருபர்கள் போனார்கள்.. ஒரு குசும்பு நிருபர் கேட்டார் "குஜராத் மதக்கலவரத்துக்கு நீங்கள் ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டால் இஸ்லாமியர்கள் உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார்களே" என்று... அதற்க்கு மோடியின் பதில் - "என்மீது குற்றம் இருந்தால் எனக்கு தண்டனை வாங்கிக்கொடுங்கள்" - அதுதான் சரியான நெறிமுறை" - மோடியை அவரது இணையத்தளத்துக்கு சென்று யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும்.. பதில் கண்டிப்பாக வரும்.....
Rate this:
Share this comment
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
12-ஜன-201711:25:36 IST Report Abuse
Krishna Sreenivasanகாங்கிரஸ் லே எவ்ளோ பெருக்கானுகள் இருக்கே சோனியா டு அடிமாட்டு தொண்டன்வரை சகலமும் பிராடுகளே தான் கைகளை இல்லே தேனடைக்கலேயே முழுங்கினானுகளே ஒரு சிலர் தவிரா 80 % அரசு அதிகாரிகள் (காவல்துறை உள்பட) லஞ்சமேதான் தான் அவிக வாழ்க்கையின் ஆதாரம் ரமமோஹன் ராவ் சிக்கிண்டான் மத்தவனுக மாட்டிக்களே அவ்ளோதான் மோடி வெரி கிளீன் மனிதர் ராகுலும் ஆனவரை என்னவெல்லாமோ சொல்லினேனே இருக்கான் இவனும் தானிப்போ வெளிஆடுபோனானே எதுக்குப்போனான் என்னஜோலி என்று அவன் கச்சிக்கும் தெரியாது மத்தவாளுக்கும் தெரியாது ஆனால் மோடி ஜுலியாவே ஓராறு காளிக்கு லாம் சுத்தபொக்லீய்யே , சொல்லாமலும் போகலே நாடு நன்னாவே இருக்கக்கூடாது என்பதிலே அவ்ளோ இஷ்டம் எதிர்கச்சியே இருக்கும் பணமே பண்ணியவாளுக்கு...
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
12-ஜன-201708:16:49 IST Report Abuse
N.Purushothaman ராவுலுக்கு செம பல்பு கெடச்சது தான் மிச்சம்...மம்தாவோட அந்த பல்பை பகிர்ந்திக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
12-ஜன-201707:33:11 IST Report Abuse
தேச நேசன் ஸ்பெக்ட்ரம் வழக்கும் நிலக்கரி ஊழல் வழக்கும் தகுந்த ஆதாரங்களோடு தனியாரால் கோர்ட்டில் போடப்பட்டபோது இதே நீதிமன்றம் போதுமான ஆதாரம் உள்ளது எனக் கூறி சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அவ்விசாரணையையும் தனது நேரடி கண்காணிப்பில் நடத்தியது ஆனால் இவ்வழக்கிலோ ஆதாரம் குப்பையளவுக்கே இருந்ததால்தான் குப்பையில் போட்டது ராகுலின் கற்பனைக்கோட்டையில் குடிபுக சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தயாராக இல்லை பூகம்பமே வரப்போகிறது என்ற ராகுல் இப்போது பூகம்பத்தோடு ஒரு கோர்ட் சுனாமியாலும் தாக்கப்பட்டுள்ளார் இந்த ஷாக்கிலிருந்து மீள் ராகுல் மீண்டும் தாய்லாந்து பட்டாயா போகலாம் டென்சன் குறையும்
Rate this:
Share this comment
Cancel
PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா
11-ஜன-201723:25:09 IST Report Abuse
PENPOINT,INKLAND அன்னை நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்து அயராது உழைக்கும் மோடியை தூற்றுபவர்கள் அந்நியநாட்டு கைக்கூலிகள் காழ்புணர்ச்சியோடு , தேவையற்று வழக்குபோடுவோரும் அதை ஆதரிப்போரும் நமது எதிரிநாட்டிடம் பணம் வாங்கிக்கொண்டு செயலாற்றும் தேச துரோகிகள் .இதற்கு ஆதாரம் என்னிடம் இல்லை .ஆதாரம் இல்லை என்பதால் ,நீங்கள் அந்நிய நாட்டு கைக்கூலிகள் இல்லை என்று ஆகிவிடாதல்லவா. நீங்கள் நேர்மையானவர்கள் என்றால் மோடியும் அப்படித்தான் நான் சொல்வது சரிதானே மோடி எதிர்ப்பாளர்களே. வில்லங்கமான வார்த்தை விளையாட்டு எல்லோருக்கும் கை வந்த கலைதான் நண்பர்களே
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
11-ஜன-201722:53:05 IST Report Abuse
R. Vidya Sagar அடுத்த பூகம்பத்தை எதிர் பார்க்கிறோம், ராகுல்ஜி
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201722:42:15 IST Report Abuse
Tamilan சிபிஐ ஆட்களை விலைக்கு வாங்கியிருப்பார்கள் அல்லது அதிகாரத்தை வைத்து மிரட்டி வைத்திருப்பார்கள். அதனால் கிடைத்த ஆதாரத்தை அவர்களே யாருக்கும் சந்தேகம் வராமல் அழித்திருப்பார்கள். இப்படியொரு அரசியல் சட்டம் நாட்டுக்கு தேவைதானா?
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
11-ஜன-201721:57:38 IST Report Abuse
raja குன்கா போன்றோர் கண்களில் எப்போதும் ஆதாரம் படாது. நீங்களும் குன்கா வகையறா வாக தான் இருப்பீர்
Rate this:
Share this comment
Cancel
sarala - Chennai,இந்தியா
11-ஜன-201721:55:15 IST Report Abuse
sarala மிஸ்டர் ஜெதேவ். முதல் முறை தவறு செய்திருந்தால் மன்னிக்கலாம். இரண்டாவது முறையும் அதே தவறை செய்து இருக்கிறார்கள். எல்லா வழக்கிலும் நீதிபதிகள் கூறுவது தகுந்த ஆதாரங்களை கொண்டு வாருங்கள் என்பர். இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளியா.
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
11-ஜன-201721:48:09 IST Report Abuse
Jaya Prakash ஒன்று மட்டும் புரிகிறது.... காங்கிரஸ் என்று ஒரு கட்சி இல்லவிட்டால்.... பிஜேபிக்கும் சரி தினமலர் வாசர்களுக்கும் சரி..... பொழுது போகாது.... எல்லாமே அரசியல்தான்? .... இந்த சஹாரா கேஸ் காங்கிரசால் போட படவில்லை.... இதை ஒரு NGO , PIL ஆக தாக்கல் செய்தார். மேலும் உச்ச நீதிமன்றம்.... இந்த கேஸை விசாரணைக்கு எடுக்காமல் தகுந்த ஆதாரம் இல்லாததால் டிஸ்மிஸ் செய்துவிட்டது. ...... இது அரசியல் கருத்து அல்ல..... உண்மையை வாசகர்களுக்கு புரிய வைக்க மட்டுமே....
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
12-ஜன-201707:24:05 IST Report Abuse
தேச நேசன் என்ன சொல்றீங்க ? ஆதாரம் இல்லாத இந்தப் புகாரைத்தான் புலி வருது பிலி வருது என்பதுபோல சவடால் விட்டு பல தவணைகளுக்கு மிரட்டி பின் நிருபர்களுக்குமுன் ராகுல் வெளியிட்டார் இதனால் பூகம்பமே வெடிக்கும் என்றார் தனது பினாமியாக பிரசாந்தைத் தூண்டி விட்டு வழக்கு போடவைத்தார் இப்போது கோர்ட் தோல்விமட்டும் அவருக்குத் தொடர்பில்லாததா? ஆகமொத்தம் வெற்றிக்கு பல சொந்தக்காரர்கள் உண்டு தோல்வி மட்டும் எப்போதும் அனாதைதானோ ??...
Rate this:
Share this comment
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
12-ஜன-201709:34:38 IST Report Abuse
Jaya Prakashதேச நேசன்... பிரசஷத் பூஷன் கேஸ் போட வில்லை ..... கேஸ் போட்ட NGO வுக்கு சார்பாக வாதாடிய வக்கீல்..... உங்களுக்கு நியாபகம் இருக்கா?....... போபாலில் நடந்த யூனியன் கார்பைடு கொடூர விஷ வாயு கேஸில்..... அரசுக்கு எதிராக,,,, யூனியன் கார்பைடு சார்பாக வாதாடிய வக்கீல் யார் தெரியுமா?..... இன்றைய மத்திய நிதி அமைச்சர்... திரு அருண் ஜெட்லீ அவர்கள்...
Rate this:
Share this comment
Cancel
Jayaraman Sekar - Bangalore,இந்தியா
11-ஜன-201721:47:10 IST Report Abuse
Jayaraman Sekar ஆதாரமற்ற வழக்கை அனுமதிக்க முடியாது என சொல்லி இருக்கிறதே அல்லாமல் பிரதமர் நிரபராதி என சொல்லவில்லை சரியான ஆதாரங்கள் இருந்தால் அனுமதிக்க படும் என சொல்லியிருக்கிறது ,===== இப்படி ஒரு ஆறுதலா, போய் பப்பு கிட்ட சொல்லி இதை பிரச்சாரம் பண்ண சொல்லுங்க
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
12-ஜன-201707:27:27 IST Report Abuse
தேச நேசன் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் மோதி நிரபராதியா இல்லையா என்பதே வழக்கிலில்லை தான் கொடுத்ததை ஆதாரமாகக் கொண்டு விசாரிக்கத்தான் ராகுலின் கையாள் பிரசாந்த் கேஸ் போட்டார் நிரபராதியா இல்லையா என்பதி இந்த அவழக்கிலில்லை ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டு என தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு குப்பையை வைத்து ஒருவரை நீங்கள் குற்றவாளி என்று சொல்ல முயற்சிக்கிறீர்கள் இதே அடிப்படையில் நீங்கள்(ஆதாரமின்றி) ஒரு கொலைக்குற்றவாளி என நான் சொன்னால் விடுவீர்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை