Sushma Swaraj Warns Amazon: Apologise or We Cancel Visas | மிதியடியில் தேசிய கொடி: அமேசான் நிறுவனத்துக்கு சுஷ்மா கடும் எச்சரிக்கை| Dinamalar

மிதியடியில் தேசிய கொடி: அமேசான் நிறுவனத்துக்கு சுஷ்மா கடும் எச்சரிக்கை

Updated : ஜன 11, 2017 | Added : ஜன 11, 2017 | கருத்துகள் (38)
Advertisement

புதுடில்லி: இந்திய தேசிய கொடி போன்று கால் மிதியடி தயாரித்து இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ள அமேசான் நிறுவனத்திற்கு சுஷ்மா சுவராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்திய தேசிய கொடி அவமதிப்பு


பிரபல ஆன்-லைன் வர்த்தக இணையதளமான அமேசான் நிறுவனம் இந்திய தேசிய கொடி போன்று பல டிசைன்களில் கால் மிதியடி தயாரித்து தனது இணையதளம் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு விட்டுள்ளது.
விற்பனைக்கு வெளியான அரை மணி நேரத்தில் இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமேசான் நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:


சுஷ்மா கடும் எச்சரிக்கை

இந்திய தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் அமேசான் நிறுவனம் தயாரித்துள்ள அனைத்து பொருட்களையும் திரும்ப பெற வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் அமேசான் நிறுவனம் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
உடனடி மன்னிப்பு கேட்காவிட்டால், அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு இந்திய விசா வழங்கப்படாது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விசாக்களும் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முன்னதாக, இதேபோல், பெண்கள் அணியும் லெக்கின்ஸ் ஆடைகளில் இந்து கடவுளின் படம் பொறித்து விற்பனைக்கு வந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - Nellai,இந்தியா
12-ஜன-201710:55:42 IST Report Abuse
babu நம்ம தாய் திரு நாட்டில் இந்தியர்களாக பிறந்த நாம் நம் விவசாயிகளை மதிக்க தவிர விட்டோமே........ அது யாருக்கும் புரியவில்லையா இல்லை கண்டு கொள்ளவில்லையா............. கல்வி என்பது நமது அறிவினை வளர்க்கவும் அதன் மூலம் முன்னேறவும் தான், இங்கோ கொஞ்சம் படித்தவுடன் பணத்தை கண்டவுடன் மனிதனையும் அவனிடம் உள்ள மனித நேயத்தையும் வெறுத்து விட்டோம் என்று தான் சொல்ல தோன்றுகின்றது. வித விதமாக கலர் கலராக உடை அணிவது, ஊர் சுற்றுவது, யாரையும் கண்டால் காணாதது போல செல்வது, ஏழைகளை கண்டவுடன் முகம் சுளிப்பது போன்ற கேவலமான செயல்களை செய்யும் படித்த பண பலம் கொண்ட மனிதனே இறைவன் முன் நிற்க தகுதியில்லாத கொடிய அரக்க மிருகம், இது அனைத்து மதங்களிக்கும் உரைக்க பட்டுள்ளது. இன்று உன்னிடம் உள்ள எது நாளை உனக்கு சொந்தம், கட்டிய வீடா, வாங்கிய சொகுசு காரா, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருக்கும் கள்ள பணமா....... ஏதும் இல்லை உன்னுடன் உன் இறுதி பயணத்தில்....................
Rate this:
Share this comment
Cancel
Subramaniam Ramesh - madurai,இந்தியா
12-ஜன-201710:14:26 IST Report Abuse
Subramaniam Ramesh இதுக்கு மட்டும் இவ்வளவு கோவப்படுற நீங்க, ஏன் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களுக்கு வந்த அது ரெத்தம், எங்களுக்கு தக்காளி சட்டினியா. தமிழ்நாடும் இந்தியாவில்தானே உள்ளது? மாற்றாந்தாய் மனப்பான்மை உங்களிடம் இருக்க அந்த அமெரிக்காகாரண கோவிக்கது உங்களுக்கு தப்பா தெரியல.. முதலில் அவர்களை நீங்கள் இந்தியாவில் அனுமதிக்கவிட்டிருக்க கூடாது, இப்போ கைப்படுத்து கால் படுதுனு சொல்றதுல அர்த்தம் என்ன.. ஏன் இந்தியாவில் பொருள்களே இல்லையா? நாங்கள் கேட்கவில்லை அமேசான் எங்களுக்கு வேண்டும் என்று, அவர்களை அறிமுகப்படுத்தியது இந்திய அரசாங்கமே..
Rate this:
Share this comment
Cancel
Anushya Ganapathy - Bangalore,இந்தியா
12-ஜன-201709:22:05 IST Report Abuse
Anushya Ganapathy ஏன் எல்லோரும் அமேசான் இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் சொல்லுகிறீர்கள் ... இதை நிச்சயமா இந்தியன் வாங்கப்போறது இல்லை ... அப்போ அடுத்த நாட்டுக்காரன் வாங்கி காலுல போட்டு மிதிச்சா சரியா? இது போன்று மற்றவர்களின் உணவுகளை புண்படுத்தும் பொருளை உடனடியாக தடை செய்ய சொல்லுவது தான் சரி. இந்து தெரியாமல் நடந்தது என்று சொல்ல அமேசான் ஒன்றும் கைப்புள்ளை இல்லை. சுஷ்மா அவர்களின் நடவடிக்கை இன்னும் கடுமையாக இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
நான் தமிழன் - Zurich,சுவிட்சர்லாந்து
12-ஜன-201707:45:11 IST Report Abuse
நான் தமிழன் தடை பண்ணுங்க அந்த கேடுகெட்ட நிறுவனத்தை ... எச்சரிக்கை என்ன வேண்டிகெடக்கு....
Rate this:
Share this comment
Cancel
annaidhesam - karur,இந்தியா
12-ஜன-201707:07:23 IST Report Abuse
annaidhesam வெளிநாட்டுக்காரனுகளுக்கு இதே பொழப்பு..நம்ம ஊர்ல இருந்து எல்லாத்தையும் திருடுறானுக..அவர்களை பொறுத்தவரை எல்லாமே பிசுனஸ் ..
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
12-ஜன-201706:22:41 IST Report Abuse
karunchilai முடக்குங்கள், முடக்குங்கள், இந்த இணையத்தை இந்தியாவில் முடக்குங்கள், உடனடியாக.
Rate this:
Share this comment
Cancel
Raj Kumar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-201700:59:40 IST Report Abuse
Raj Kumar அமேசான் வலைத்தளத்தை உடனடியாக இந்தியாவில் தடை செய்யுங்கள்.
Rate this:
Share this comment
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-201710:39:18 IST Report Abuse
PRABHUஅதை இந்திய அரசு செய்யமாட்டார்களே.........
Rate this:
Share this comment
Cancel
Anandan Cg - udumalpet,இந்தியா
12-ஜன-201700:47:14 IST Report Abuse
Anandan Cg சொல்லி விட்டு நடவடிக்கை எடுப்பது , பேசி மன்னிப்பு கேட்க சொல்லுவது. இதையெல்லாம் விட்டு விட்டு , இது போன்ற விஷயங்களில் உடனடி வழக்கு பதிவு. உடனடி கோர்ட் ,மற்றும் தூதரக நடவடிக்கை. இதை எப்படி செய்வது என்று யோசியுங்கள் . நடவடிக்கை எடுத்துவிட்டு ஊடகங்களுக்கு தெரிவியுங்கள். மிக அருமையாக , உண்மையாக, சந்தேகத்துக்கிடமின்றி இருக்கும் என்பது சரியா?
Rate this:
Share this comment
Cancel
Sammatti - Chennai,இந்தியா
11-ஜன-201723:26:43 IST Report Abuse
Sammatti let central government first stop insulting tamil culture and understand others feelings ....or i am unconditionally supporting amazon ...just see it as either buisness or like PETA ...
Rate this:
Share this comment
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
12-ஜன-201701:44:44 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....)தமிழர்கள் ஆங்கிலம் படிப்பது தவறில்லை, ஆனால் ஹிந்தி படிப்பது தரவு என்று நினைப்பவர்கள். ஹிந்தியைவிட, ஆங்கிலம் தான் தமிழர்கள் மீது அதிகம் திணிக்கப்பட்டு உள்ளது. யாரெல்லாம் தமிழ் தமிழர் என்று கத்துகிறார்களோ, அவர்கள் தான் உண்மையில் தமிழின துரோகிகளாக உள்ளார்கள்....
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
12-ஜன-201706:24:53 IST Report Abuse
karunchilai'தமிழ்' அவர்களின் அரசியல் பிழைப்பிற்குக் கருவி....
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
12-ஜன-201706:27:00 IST Report Abuse
karunchilaiban Amazon ba ......s forthwith...
Rate this:
Share this comment
Anushya Ganapathy - Bangalore,இந்தியா
12-ஜன-201709:35:26 IST Report Abuse
Anushya Ganapathy@சம்மட்டி அவர்களே ... மற்ற மாநிலம் தமிழனை மதிக்கவில்லை என்றால் அது உள்நாட்டு பிரச்சனை ... என் வீட்டுக்குள்ள ஆயிரம் சண்டை நடக்கும் ... அதுக்காக பக்கத்துவீட்டுக்காரன் என்குடும்பத்தை அசிங்கப்படுத்துவதை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டிய அவசியம் இல்லை....
Rate this:
Share this comment
Senthilkumar Kumar - Kanchipuram,இந்தியா
12-ஜன-201710:46:15 IST Report Abuse
Senthilkumar Kumarஉன் வீட்டு மனுஷாள நீ மதிக்கலுன்னு வெளியில இருக்கறவனுக்கு தெரிஞ்சி போச்சி. அவன் உன்ன மிதிக்கிறான். தப்பு யாருகிட்ட இருக்கு? நீ உன்ன அடிச்சா வலிக்கல, அடுத்தவன் அடிச்சாமட்டும் வலிக்குதா? என்னங்கய்யா ஒங்கவூட்டு ஞாயம் மட்டும் ஒருதினுசா இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
11-ஜன-201722:55:38 IST Report Abuse
வெற்றி வேந்தன் இங்கு அமேசான் தளத்துக்கு ஆதரவு வாக்களித்து வரும் ஒரு இரண்டு பேர் உண்மையில் நல்ல தாய் தந்தைக்கு பிறந்தவரா? இவர்கள் கண்டிப்பாக நாட்டு பற்று இல்லாதவர்களாகத்தான் இருக்க கூடும். இவர்கள் மாதிரி புல்லுருவிகள் நாட்டில் இருந்தால் இவர்கள் மூலம் நம் எதிரிகள் நம்மை பலவீனப்படுத்து வார்கள்.
Rate this:
Share this comment
Senthilkumar Kumar - Kanchipuram,இந்தியா
12-ஜன-201710:52:00 IST Report Abuse
Senthilkumar Kumarஇல்லன்னமட்டும் நீங்க பலமாவ இருக்கீங்க? இதுவரை எல்லையில் தீவிரவாதிகளை காட்டிலும் நம்முடைய வீரர்கள் பலி எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கு. உங்க பலம் என்ன டீ பார்டி கொண்டாடுதா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை