மிரட்டலுக்கு தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள்; மிரட்டுபவர்களுக்கு தீபா எச்சரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மிரட்டலுக்கு தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள்; மிரட்டுபவர்களுக்கு தீபா எச்சரிக்கை

Updated : ஜன 13, 2017 | Added : ஜன 11, 2017 | கருத்துகள் (112)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மிரட்டுபவர்களுக்கு தீபா எச்சரிக்கை

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவை, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆக்க வேண்டும் என, கட்சியின் நிர்வாகிகள் பலரும்; பெரும்பாலான தொண்டர்களும் விரும்பினர். ஆனால், அதை முறியடித்து, கட்சியின் அடிப்படை விதிகளில் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, பொதுக்குழு மூலம், சசிகலா, கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டு விட்டார்.


இல்லம் தேடி


இதனால், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்து, தீபாவை, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., பெயரில் தனி இயக்கம் காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள், தீபாவின் இல்லம் தேடி வருகின்றனர். அவர்கள், தங்கள் எண்ணங்களை நேரடியாகவே அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களிடம், உங்கள் எண்ணங்களையெல்லாம் அறிந்து கொண்டேன்; என் எண்ணமும் அதுதான். விரைவில் அதற்கான ஏற்பாடுகளுடன், என் முடிவை அறிவிக்கிறேன் என்று சொல்லும் அவர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை தெரிய வேண்டும் என்றும் பக்குவமாகப் பேசி, தொண்டர்களை அனுப்பி வருகிறார்.


அரசியலுக்கு வர வலியுறுத்தல்


இப்படி குவியும் தொண்டர்கள் ஒரு புறம் இருக்க, சேலம், திருச்சி, கரூர், ஈரோடும் அரியலூர், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர் என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தீபா பேரவை ஆரம்பித்து, உறுப்பினர் சேர்க்கையையும், அ.தி.மு.க.,வினர் துவங்கி விட்டனர். சேலத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அ.தி.மு.க., என்ற பெயரில் புதிய இயக்கத்தையும் ஆரம்பித்து, கொடி, சின்னம் ஆகியவற்றையும் அறிவித்து விட்டனர். இந்த இயக்கம் தீபா தலைமை தாங்கி நடத்துவதற்காக துவங்கப்பட்ட இயக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அம்மா தி.மு.க., என்ற பெயரிலும், தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, கட்சி துவங்கப்பட்டுள்ளது.

இப்படி தன்னெழுச்சியாக, தீபாவுக்கு ஆதரவு வட்டம் பெருகுவதை, அ.தி.மு.க., நிர்வாகிகளாலும்; சசிகலா ஆதரவாளர்களாலும் பொறுக்க முடியவில்லை. தீபா குறித்து பல்வேறு விதமான செய்திகளை, முடிந்த மட்டும் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பத் துவங்கி உள்ளனர். அப்படியொரு விஷயம்தான், தீபாவின் கணவர் பேட்ரிக். அவருக்காக தீபாவும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டார். அவர் தற்போது கிறிஸ்துவராகவே உள்ளார். அதனால்தான், அவர், நெற்றியில் பொட்டு வைப்பதில்லை. தீபாவை, இந்து இயக்கங்கள் தாங்கிப் பிடிக்க முயல்கின்றன. ஆனால், அவர் அதை விரும்பவில்லை. காரணம், அவர் கிறிஸ்தவர் என்பதுதான்.

அதுமட்டுமல்ல, அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால்தான், கட்சித் துவக்கும் பணியிலோ, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க., தொண்டர்களை சந்திக்கும் நிகழ்வையோ தள்ளிப் போட்டு வருகிறார் என்றெல்லாம் தகவல் பரப்புகின்றனர்.


இது தொடர்பாக, தீபா கூறியதாவது:


நான் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறேன்; கிறிஸ்தவராக மாறி விட்டேன் என, இப்போது சொல்லவில்லை. என் அத்தை ஜெயலலிதா இறந்த சில நாட்களில், நான், அவர் மரணத்தில் ஒளிந்து கிடக்கும் மர்மம் விலக வேண்டும் என சொல்ல ஆரம்பித்த, சில நாட்களிலேயே இப்படி, செய்தி பரப்பத் துவங்கி விட்டார்கள். அதுவும், நான், கிறிஸ்மசுக்காக, டிவிட்டர் மூலம் வாழ்த்து செய்து பதிவிட்டதும், பார்த்தீர்களா… தீபா கிறிஸ்தவர்தான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் என்றும் சொல்லத் துவங்கினார்கள்.

அப்போதே நான் சொன்னேன். நான், எல்லா மத பண்டிகைகளுக்கும், அந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ரம்ஜான் நாளில், முஸ்லிம்களுக்கு வாழ்த்துச் சொன்னேன். உடனே, நான் முஸ்லிம் மதத்துக்கு மாறி விட்டேன் என சொல்ல முடியுமா? அரசியல் ரீதியில், நான், பலம் பெற்று விடக் கூடுமோ என்ற அச்சத்தில், சிலர் இப்படியெல்லாம் செய்தி பரப்புகின்றனர். அதிலெல்லாம் கவனம் செலுத்தி, அவர்களோடு மல்லுக்கட்டி, நேரத்தை வீணடிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பத்தை, அந்த விஷயத்திலும் நான் நிறைவேற்ற மாட்டேன்.


பொய்யாக இட்டுக் கட்டுகின்றனர்.


என் கணவர் ஒரு கிறிஸ்தவர் என, இவர்களாக புதிய தகவல் சொல்கின்றனர். எதையோ ஒரு கதையை சொல்லிவிட்டு, அதற்கு, சப்போர்ட்டாக, சில விஷயங்களை பொய்யாக இட்டுக் கட்டுகின்றனர்.

நான் பொட்டு வைக்காதது, பெரிய குற்றமா என்ன? ஏற்கனவே, சிலர் என்னிடம் இது குறித்து சொன்னார்கள். இப்படிப்பட்ட விஷயங்களில் நான், தீவிர கவனம் செலுத்துவதில்லை. பொட்டு வைத்தால், இந்து. இல்லாவிட்டால், கிறிஸ்தவரா? இப்படியெல்லாம் சொல்லி, ஒரு மதத்துக்குள் என்னை யாரும் அடக்க முடியாது. நான் எல்லா மதத்துக்கும் பொதுவான பெண். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும் நான் மதிக்கிறேன்; இதில், எங்கள் அத்தை மாதிரிதான் நானும்.

இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; அனைத்து மத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் என்னை தொடர்ந்து சந்திக்கின்றனர். அவர்கள், நான், தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அப்படி நடந்தால், நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவோம் என்றும் கூறுகின்றனர். எது நல்லதோ, அதை கட்டாயம் செய்வேன் என்றுதான், அவர்களிடம் சொல்லி அனுப்புகிறேன்.

மற்றபடி, இந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதை தீவிரமாக ஆராய்ந்து; யோசித்துதான் செய்வேன். யாருக்காவும் அவசரப்பட்டெல்லாம் எதையும் செய்ய மாட்டேன். மற்றபடி, என் குடும்ப விஷயமெல்லாம், வெளியில் இருப்பவர்களுக்குத் தேவையில்லை.

என்னை சந்திக்க வரும் தொண்டர்களை சிலர் மிரட்டுவதாக அறிகிறேன். மிரட்டியெல்லாம் யாரும் யாரையும் பணிய வைக்க முடியாது. நடப்பது, நல்லவிதமாக நடந்தே தீரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா
13-ஜன-201709:46:30 IST Report Abuse
PENPOINT,INKLAND மேட்டர் இல்லாத தீப மேட்டர் மூணு நாளா முன்னணியில இருக்குன்னா இன்னும்,இன்னும் கருத்து எழுதலாம் போலிருக்கே
Rate this:
Share this comment
Cancel
Thamilarasu K - Salem,இந்தியா
13-ஜன-201709:23:39 IST Report Abuse
Thamilarasu K யார் வேண்டுமானாலும் அரசியலில் இறங்கலாம், தலைவர் ஆகலாம், சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம், அமைச்சர், முதலமைச்சர் ஆகலாம் என்கிற ஒரு நிலை இல்லாமல், அரசுரிமை என்பது ஒரு குடும்பத்தின் சொத்து என்கிற அவல நிலை தமிழ் நாட்டில் இருக்கிறது. அமெரிக்காவைப் பாருங்கள், நாட்டுக்காக இராணுவத்தில் பணியாற்றியவர் தம் சேவையை முன்னிறுத்தி, கொள்கைகளை, குறிக்கோள்களை முன்னிறுத்தி ஜனாதிபதி ஆக முடியும். தகுதியுள்ள யாவரும் அங்கே எந்த உயர்ந்த நிலைக்கும் செல்ல முடியும். ஆனால் நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் நிலைமை தலைகீழ். தமிழர்கள் மிகவும் திறமைசாலிகள், சுந்தர் பிச்சை Google நிறுவனத்தின் தலைவர், இன்றைக்கு சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவர்.. சகாயம் IAS மிக நேர்மையான மனிதர், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை என்று கணக்கில் அடங்கா திறமை சாலிகள். ஆனாலும் நம்முள் யாவரும் இவர்களை போன்றவர்களை நாட்டின் தலைவராக முன்னிறுத்த முயல்வதில்லை. ஏன் இந்த அடிமைத்தனம் ? கற்றோர் அனைவரும் ஒன்றிணைந்தால் குற்றம் ஒன்று இருக்குமோ நாட்டில். சிந்தியுங்கள் தமிழர்களே சிந்தியுங்கள். அனைவரும் ஒன்றிணைவோம் வாருங்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிற நிலை உருவாக்குவோம். இந்த சிந்தனை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள mgrammaadmk என்கிற Facebook Page பாருங்கள். ஆயிரக்கணக்கான வருடங்களாக சீரோடும், சிறப்போடும் இருந்த தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இலஞ்சம், ஊழல் என்கிற நோயில் சிக்கி நாட்டை சிறிது சிறிதாக கொன்று கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பாதுகாத்த நீதி, நேர்மை, நாணயம், மனித நேயம் போன்ற பண்புகளை 40 ஆண்டுகால ஒழுங்கீனம் சீரழிக்க முடியுமா, நிச்சயம் முடியாது. விழித்தெழுவோம் ஒரு நல்ல நாட்டை உருவாக்குவோம். வாருங்கள். Kindly visit the facebook page mgrammadmk.
Rate this:
Share this comment
Cancel
சத்திவேல்,டிறம்மன்,,நோர்வே. உங்களுக்கு அரசியல் சுத்துமாத்து சரிப்படாது. தயவு செய்து ஒதுங்குங்கள். அல்லது சில வேளை அவமானப்பட நேரிடும். நீங்கள் போட்டி போடுவது பணத்துடன். பணம் பாதாளம்வரை பாயும். தமிழ் நாட்டில் பணத்துக்குத்தான் வாக்கு. கடைசியில் பணம்தான் வெல்லும். மௌனம்தான் தற்போது உங்களுக்கு ஒரே வழி.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Chennai,இந்தியா
13-ஜன-201707:34:48 IST Report Abuse
Baskar தமிழனாய் பொறந்தது மகா கேவலம் . இது எட்டப்பனுங்க மட்டும் வாழும் நாடு. சூடு சொரணை எதுவும் இல்லாம 200 ரூ க்கு ஆசைப்பட்டு ஒட்டு போடும் தருதலைகள் . காசு வாங்கிகிட்டு கடசி தலைவனை கொண்டாடும் சிங்கப்பூர் சீமான்கள் . இது கேவலமான நாடு
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
13-ஜன-201700:07:54 IST Report Abuse
Shanu MGR இறந்த பின், ஜானகி அம்மாள் கட்சி வந்தது. அவர் MGRக்கு மனைவியாக இருந்த போதும், அவரை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. இவர் ஜெயலலிதாவின் சொந்தமாக இருந்தாலும், இவரை மக்கள் ஏற்றுக்கொள்வது கடினம்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
12-ஜன-201722:48:09 IST Report Abuse
vnatarajan தீபா அவர்களே முதலில் சட்டப்படி உரிமையுள்ள உங்கள் பாட்டியின் வீட்டை அதாவது போயஸ் கார்டானுக்குள் நுழைவதற்கு வழியை தேடுங்கள் இல்லாவிட்டால் இப்போதே திரைக்கு பின்னால் உங்களுக்கு கிடைக்காமல் இருப்பதற்கான சதி வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் ,அரசியல் பிறகு யோசிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
sri - chennai,இந்தியா
12-ஜன-201720:45:16 IST Report Abuse
sri நீங்கள் பொது வாழ்க்கைக்கு வர விரும்பினால் எந்த வித ஒளிவு மறைவுமின்றி நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுபவர் என்று கூற வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் தவறு இல்லை. Please don't play double game.
Rate this:
Share this comment
Cancel
Nikitha Sai - Chennai,இந்தியா
12-ஜன-201719:20:34 IST Report Abuse
Nikitha Sai தீபா அவர்களே உங்களின் பொறுமையே உங்களை காக்கும். உண்மையான தொண்டர்கள் உங்கள் பக்கம். எதற்கும் அஞ்சாதீர்கள். உங்களின் அத்தையின் ஆத்மா உங்களை ஆசிர்வதிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
12-ஜன-201717:35:09 IST Report Abuse
Selvaraj Thiroomal ஏம்பா ""கோட்டை நானும் தாண்டமாட்டேன்,, நீயும் தாண்டக்கூடாது"" என்று சொல்லுவதை "எச்சரிக்கை" என்றால் எங்களுக்கு சிரிப்புதான் வருகிறது.. அந்த பெண்ணோட வாழ்க்கையை கெடுக்க இத்தனை பேர் கிளம்பிட்டாங்களே அட எல்லாம் மதத்து ஆண்டவா
Rate this:
Share this comment
Cancel
Soosaa - CHENNAI,இந்தியா
12-ஜன-201717:18:25 IST Report Abuse
Soosaa ஒரு படித்த பெண் அரசியலுக்கு வர ஆசை படும்பொழுது ஏதாவது ஒரு சப்போர்ட் இருந்தால் சீக்கிரம் பெரிய இடத்துக்கு வர முடியும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வழி.. இவருக்கு தொண்டர்கள் ஆதரவு வழி.. ஆல் தி பெஸ்ட்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை