கோல்கட்டா: திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 கட்சி நிர்வாகிகள் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.காரக்பூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்திற்கு இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், கட்சி நிர்வாகிகள் இருவர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.