வேதனை! :ஜல்லிக்கட்டிலும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சொதப்பல் | வேதனை! :ஜல்லிக்கட்டிலும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சொதப்பல்: பிள்ளையாருக்கு பதிலாக குரங்கை பிடித்த கதை தான் Dinamalar
பதிவு செய்த நாள் :
வேதனை!
ஜல்லிக்கட்டிலும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
சொதப்பல் :பிள்ளையாருக்கு
பதிலாக குரங்கை பிடித்த கதை தான்

அரசியலுக்கு அப்பாற்பட்டு, நடுநிலையாக இருக்க வேண்டியவர், எம்.பி.,க்களை திரட்டி வந்து, மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் செயல்படுவது தான், துணை சபாநாயகரின் பணியா' என்ற, பலத்த கேள்வி எழுந்துள்ளது.

வேதனை! :ஜல்லிக்கட்டிலும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சொதப்பல் :பிள்ளையாருக்கு பதிலாக குரங்கை பிடித்த கதை தான்

ஜல்லிக்கட்டு விஷயத்தில், பிரதமரை சந்திக்க, முறையான அணுகுமுறையை பின்பற்றாமல், தமிழக நலனுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுவது போன்ற தோற்றத்தை, அ.தி.மு.க.,வினர் ஏற்படுத்தியுள்ளதாகவும், டில்லியில் பேச்சு எழுந்துள்ளது.ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் வலுத்துவரும் நிலை யில், நேற்று, துணை சபாநாயகர், தம்பிதுரை தலைமையில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குழு, டில்லிக்கு வந்து மனு அளித்தது.

முதலில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், அனில் மாதவ் தவே இல்லத்திற்கு சென்ற அந்தக்குழு, அ.தி.மு.க., பொதுச் செயலர், சசிகலாவின் கடிதத்தையே மனுவாக அளித்தது. இதன்பின், பிரதமர் அலுவலகத்திற்கு சென்று, அங்கும் ஓர் அதிகாரியைச் சந்தித்து, அதே கடிதத்தை மனுவாக அளித்துவிட்டு, பேட்டியும் அளித்தனர்.

மறக்கவில்லை


பிரதமரைச் சந்தித்து, அவசர சட்டம் இயற்ற வலியறுத்தப் போவதாக கூறிவிட்டு, வழக்கம்போல் இந்த முறையும், ஓர் அதிகாரியிடம் தான், இவர்களால் மனு அளிக்க முடிந்துள்ளது. இதுவரை, பல்வேறு பிரச்னைகளுக்காக, 11 முறை நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டும், நெய்வேலி நிறுவனப் பிரச்னைக்காக மட்டுமே, பிரதமரை, அ.தி.மு.க., - எம்.பி.,க்களால் சந்திக்க முடிந்தது. 'பார்லிமென்டில், அதிகம் பலம் உடைய கட்சியான, அ.தி.மு.க.,வுக்கு ஏன் இந்த அவலம்' என்பது குறித்த கேள்விக்கு, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:

நாட்டின் அரசியல் சாசன உயர் பதவிகளான, ஜனாதிபதி, பிரதமர் என்ற நடைமுறை வரிசை யில், 10வது இடத்தில் வருகிறது, லோக்சபா துணை சபாநாயகர் பதவி.பாரபட்சமின்றி,
அரசியலுக்கு அப்பாற்பட்டு நடப்பதுடன், அரசுக்கு எதிராக, எம்.பி.,க்கள், சபைக்குள் நெருக்கடி தரும்போது, அரணாக நின்று, அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமையும் உடையவர்கள் தான், சபாநாயகரும், துணை சபாநாயகரும்.
ஆனால், தம்பிதுரையோ, எம்.பி.,க்களை குழுவாக திரட்டி, அதற்கு இவரே தலைமையேற்று, பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி தருகிறார். கடந்த முறை, பார்லிமென்ட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு, எம்.பி.,க்களை ஊர்வலமாக, அவர் அழைத்து வந்ததை, பிரதமர் மறக்கவில்லை.

கண்ணியம் மிக்க துணை சபாநாயகர் அலுவலக, 'லெட்டர் பேடை' தன், சுய அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தி,

பார்லிமென்ட்டின் மாண்பை குலைத்தார். தற்போது, ஜல்லிக்கட்டு விவகாரத்திலும், இவரது நடவடிக்கை ஆச்சர்யம் அளிக்கிறது.

அதிருப்தி


துணை சபாநாயகர் என்பதால், அவசர சட்டம் குறித்த நடைமுறை, அவருக்கு தெரியும். நினைத்த மாத்திரத்தில், அதை கொண்டு வந்துவிட முடியாது. கடந்த வாரம் தான், அவசர சட்டங்கள் குறித்து, சுப்ரீம் கோர்ட் கடுமையான அதிருப்தியை வெளி யிட்டு இருந்தது.அவசர சட்டம் தான் தீர்வு என்றால், அதற்கு எப்போதிருந்தோ முயற்சி செய்திருக்க லாம். குளிர்கால கூட்டத் தொடரிலேயே ஒப்புதலை வாங்கியிருக்கலாம். அப்போது, பார்லி.,க்கு ஒருவர் கூட
வரவில்லை.

தற்போது கூட, ஜெயலலிதாமறைவு, பொதுக்குழு என பல பிரச்னைகளில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பிசியாக இருந்தாலும், டிசம்பர், 29க்கு பின், பெரிய வேலைகள் எதுவும் அவர்களுக்கு இல்லை. இந்த, 13 நாட்களாக, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்த னர். பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென உண்மையிலேயே, தம்பிதுரைக்கு அக்கறை இருந்தால், குறைந்தபட்சம், இரண்டு நாட்களுக்கு முன்பே, முறைப்படி தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

சங்கடம்


பிரதமரின் இருப்பு மற்றும் அலுவல்களை கேட்டறிந்து, அதன் பின், எம்.பி.,க்களை அழைத்து
வந்திருந்தால், அது நியாயம். பிரதமர், கடந்த மூன்று நாட்களாக, குஜராத்தில் நடந்த மாநாட்டில் இருந்தார் என்பதும், அங்கிருந்து வந்ததும், டில்லியில், கென்யா அதிபருடன் அவருக்கு சந்திப்பு உள்ளது என்பதும் தம்பிதுரைக்கு தெரியும்.

ஒரு, 'பேக்ஸை' மட்டும் அனுப்பிவிட்டு, எம்.பி.,க் களை டில்லிக்கு வரச்சொல்வதும், பிரதமரை சந்திக்கப் போவதாக, முதல் நாள் செய்தியாக்கு வதும் ஏற்புடையதல்ல.இதன்மூலம், 'தமிழக நலன் களுக்கு எதிரானவர் மோடி; தமிழக எம்.பி.,க்களை சந்திக்க மறுக்கிறார்' என்பது போன்ற தோற்றத்தை, துணை சபாநாயகரே முன்னின்று செயல்படுத்துவது நியாயமல்ல.

தன் அரசியல் லாபங்களுக்காக, துணை சபாநாயகர் மற்றும் பிரதமர் அலுவலகங்களை கிள்ளுக்கீரை யாக மாற்ற, நினைக்கிறாரே என்ற வேதனை தான் மிஞ்சுகிறது.அரசியல் சாசன பதவியில் இருந்து கொண்டு, பிரதமரின் நடைமுறை அலுவல்களைக் கூட உறுதிபடுத்தாமல், திடீரென டில்லிக்கு வந்து, பேட்டி, ஊர்வலம், செய்தி என, அரசியல் செய்வ தால், மத்திய, மாநில உறவுகளுக்கு ஊறு ஏற்படுவது மட்டுமல்ல; தேவையற்ற அரசியல் சங்கடங்களை யும் ஏற்படுத்தும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நிழல் முதல்வரா?


சசிகலா முதல்வராக வேண்டுமென, முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக, தம்பிதுரை தான் அறிக்கை விட்டார். தற்போது, முதல்வரின் கடிதத்துக்கு பதிலாக, சசிகலாவின் கடிதத்தையே, டில்லியில் மனுவாக தந்துள்ளார்.இதைபார்க்கும் போது, 'பன்னீர்செல்வத்துக்கு எதிராக, தம்பிதுரை, மீண்டும் வாள் சுழற்றியுள்ளார். சசிகலா என்ற கேடயத்தை கையில் ஏந்தி, தமிழகத்தின் நிழல் முதல்வராக செயல்படு கிறாரா தம்பிதுரை' என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இது என்ன நியாயம்?


அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலாவின் கடிதம் தான் கோரிக்கை மனு; அதை, அமைச்சர், அனில் மாதவ் தவேவிடம், காலையில் அளித்தனர். பின்,

Advertisement

அதே மனுதான், பிரதமர் அலுவலகத்திலும் அளிக்கப்பட்டது. பிரதமரிடம் அளிக்க வேண்டிய மனுவை, அவருக்குப் போய்ச் சேரும் முன்பே, ஒரு அமைச்சரிடம் எப்படி அளிக்கலாம்? அப்படி யானால், பிரதமருக்கு அளிக்க வேண்டிய மனு பற்றிய விபரங்களை முன் கூட்டியே கசிய விடுகின்றனரா என்பதும் புரியவில்லை.

உடனே வர முடியுமா?


ஜல்லிக்கட்டு தொடர்பாக மனு அளிக்க சென்றபோது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரை பார்க்க முடியவில்லை. ஒரு சிலர், கடைசி நேரத்தில், அடித்துப் பிடித்து ஓடிவந்தனர். விசாரித்தபோது, 'டில்லியில் கடும் குளிர். காலையில் விமான சேவை தினமும் பாதிக் கப்படுகிறது. மேலும், எல்லா எம்.பி.,க் களுமே சென்னையில் இருப்பதில்லை. இவர்கள் எல்லாம் கிளம்பி வர, போதிய அவகாசம் தராமல், உடனே பறந்து வா என்றால், முடியுமா' என, பதில் கேள்வி வருகிறது.

தீர்ப்புக்கு பின் நல்ல முடிவு:மத்திய அரசு உறுதி


'ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க் கள், மத்திய அமைச்சர் அனில் தவேயை சந்தித்து, கோரிக்கை விடுத்தனர். அதன் பின், நிருபர்களிடம், அனில் தவே கூறியதாவது:

காளைகள் உட்பட, விலங்குகளை எப்படி நடத்த வேண்டும் என்பது நம் பாரம்பரியத்தில் உள்ளது. விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என்பதை, யாரும் நமக்கு சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டும் அதுபோலத்தான். இதில், காளைகள் எந்த விதத்திலும் துன்புறுத்தப் படுவதில்லை.இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய, ஐ.மு., கூட்டணி அரசு செய்த தவறு தான் தற்போதைய பிரச்னைக்கு காரணம். காளைகளை, காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்து, காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டது, தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடையாக அமைந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி களில், காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும், அதன் பாரம்பரியம் குறித்தும் மீண்டும் முறையிடுவோம். இவற்றை கோர்ட் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.மற்றபடி, இந்த விவகாரத் தில், மத்திய அரசு தயாராகவே உள்ளது. நடு இரவில் கூட, தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காகத் தான் காத்திருக்கிறோம். அதன் பின்னரே, இதில் நல்ல முடிவை எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜன-201716:32:26 IST Report Abuse

Endrum Indianஅ.தி.மு.க எம் பி.க்கள் தானே. அசிங்கமான திருட்டு முட்டாள் கழகம் என்றால் அம்மே என்று பிளிருவது, டயர் தொட்டுக் கும்பிடுவது இது தானே தெரியும், “வேறொன்றும் அறியேன் பராபரனே” என்று சொல்வது போல் இருக்கின்றது இவர் தம் செய்கைகள்.

Rate this:
spr - chennai,இந்தியா
12-ஜன-201715:15:05 IST Report Abuse

sprஇது தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. ஏதேனுமொரு விஷயம் குறித்து எவரும் பேசாமல் இருக்க வேண்டுமென்றால், அதனை நீதிமன்ற விசாரணை என்ற கிணற்றில் போடவேண்டும் சசிகலா புஷ்பாவின் மனு போன்று உப்புசப்பில்லாத வழக்குகளை உடனடியாக விசாரிக்க முனைந்த நீதிமன்றம் இது போன்ற உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வழக்குகளை, கொடும் குற்ற வழக்குகளை எல்லாம் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்காமல் தள்ளிப்போடுவது ஏன்?

Rate this:
jayaraman - attayampatti,இந்தியா
12-ஜன-201713:43:08 IST Report Abuse

jayaramanஉச்ச நீதி மன்றம் உத்தரவு க்கு எதிராக மத்த்திய அமைச்சர்கள் ஆனந்தகுமார் போன்றோர் தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் விடக்கூடாது என்பதை விட தம்பிதுரை செய்தது ஒரு தவறே அல்ல

Rate this:
Karunan - udumalpet,இந்தியா
12-ஜன-201712:48:59 IST Report Abuse

Karunanகொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே என்று ஆக்ரோஷம் நமக்கு வருகிறது.அனால் எதுமே செய்யமுடியாதா கையறு நிலைமை.பிரிந்துசெல்லவோ நம்மை தள்ளுகிறார்கள்

Rate this:
Karunan - udumalpet,இந்தியா
12-ஜன-201712:45:58 IST Report Abuse

Karunanஎது எப்படியோ துணை சபாநாயகரையிருந்தாலும் தன்மாநிலத்துக்கு அநீதி இழைக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.பிஜேபி காரர்கள் கதைக்கட்டி அரசியல் செய்வதில்தான் சமர்த்தர்கள்.பிரதமர் JJ இருக்கும்போதே தமிழக எம்பிக்களை சந்திக்க மறுத்தவர்தான்.பிஜேபி/காங்கிரஸ் இருவருமே ஒரேமாதிரிதான் தமிழகத்தை நடத்துகிறார்கள்.

Rate this:
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
12-ஜன-201712:12:14 IST Report Abuse

Karuppu Samyரெண்டு பேருமே ஆணியே புடுங்க வேண்டாம், இந்த உச்ச நீதி மன்றத்தை முழுசா காவிரி விஷயத்திலே நடந்துக்க சொல்லுங்க அப்புறம் இந்த மாட்டு மேட்டரில் உளறுவதை பத்தி பேசிக்கலாம். யார் தடுத்தாலும் அதை உடைப்போம், மீறி நடத்துவோம் என்ன பண்றீங்க ன்னு பார்க்கலாம்.

Rate this:
DINESH - Muscat,ஓமன்
12-ஜன-201713:43:57 IST Report Abuse

DINESHசனியனை (சசிகலா) விட்டா தான் தமிழ்நாடு உருப்படும்...

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
12-ஜன-201712:02:30 IST Report Abuse

நக்கீரன்இப்படி ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்யும் இந்த அறிவு கெட்ட தம்பிதுரை தலைமையிலான குழு அ.தி.மு.க., பொதுச் செயலர், சசிகலாவின் கடிதத்தையே மனுவாக அளித்துள்ளது. தான் ஒரு இந்த அரசியல் அமைப்பின் பிரதிநிதியாக இருக்கிறோம் என்பதை மறந்து விட்டு எம்பிக்களை திரட்டி மனு அளிக்கிறார். அ.தி.மு.க., பொதுச் செயலர் என்பவர் யார்? ஏதேனும் அரசு பொறுப்பில் இருக்கிறாரா? அவர் முதலமைச்சருக்கு மேலே அதிகாரம் உள்ளவரா? அப்புறம், எதோ மத்திய அரசு நடுவில் நின்று ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடுத்துக்கொண்டு இருப்பது போல் தமிழகத்தில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது ஏன்? பிரச்னை சுப்ரீம் கோர்ட் வசம் உள்ளது. அதை மீறி மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதை தெரிந்தும் ஓட்டுக்காக அரசியல் வேஷம் போடுவது கண்டிக்கத்தக்கது. இனியும் இந்த நாடகங்களை நாங்கள் நம்ப தயாராக இல்லை.

Rate this:
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
12-ஜன-201711:58:08 IST Report Abuse

Durai Ramamurthyபிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி தருகிறார் என்பதற்காக தம்பிதுரையை ஒரேடியாக குறைசொல்லி தமிழக நலனுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுவதை மறுத்துவிடமுடியாது..பிரதமர் ஒருநாள் முழுவதுமா கென்ய அதிபரை சந்தித்தார்.

Rate this:
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
12-ஜன-201711:55:43 IST Report Abuse

மு. தணிகாசலம் சுமார் பத்துப் பதினைந்து மாநில முதலமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த உயர் அந்தஸ்தை பாராளுமன்றத்தின் ஒரே ஒரு துணை சபாநாயகரான திரு தம்பிதுரை அவர்குளுக்கு கொடுக்கப்படலாம். ஆனால், அவர் ஒரு கட்சி பொதுச் செயலாளர் முன்பாக நின்றுகொண்டு இரு கையெடுத்து கும்பிட்டு யாசகம் கேட்ட செயல், துணை சபாநாயகரின் மதிப்பை இழிவுபடுத்திவிட்டது.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஜன-201717:19:52 IST Report Abuse

இந்தியன் kumarபதவியின் மதிப்பை கேவலப்படுத்தும் தம்பிதுரையை துணை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்....

Rate this:
Rajesh A - Chennai,இந்தியா
12-ஜன-201711:21:54 IST Report Abuse

Rajesh Aநம்முடைய சூழல் புரிந்து புத்திசாலித்தனமாக பிரதமரை சந்திக்க திட்டமிட்டு செல்லவேண்டும்.... இது கூட தெரியாதவர்களை இன்னும் பதவியில் இருந்து தூக்காமல் இருக்கின்றனர்.

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement