பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : குற்றவாளிக்கு வினோத தண்டனை| Dinamalar

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : குற்றவாளிக்கு வினோத தண்டனை

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : குற்றவாளிக்கு வினோத தண்டனை

ஐதராபாத்தில், பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு, மாஜிஸ்திரேட் கோர்ட், வித்தியாசமான தண்டனை வழங்கியுள்ளது.
தெலுங்கானாவில், டி.ஆர்.எஸ்., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஐதராபாத்தைச் சேர்ந்த, முகமது ரஹீம், 39, அதே பகுதியைச் சேர்ந்த, திருமணமான பெண்ணின் மொபைலுக்கு போன் செய்து, ஆபாசமாக பேசி வந்துள்ளான். பலமுறை எச்சரித்தும், ரஹீம் கேட்காததால், எரிச்சலடைந்த அந்த பெண், மொபைல் போன் பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டார். இதையடுத்து, அப்பெண்ணின் கணவரின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு, தவறாக பேசியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், ரஹீமின் செயல் குறித்து, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ரஹீமை, போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த, ஐதராபாத் மாஜிஸ்திரேட் கோர்ட், குற்றவாளி ரஹீமுக்கு, வித்தியாசமான தண்டனை வழங்கியது.
கோர்ட் அளித்த தீர்ப்பு விபரம்: பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ரஹீமை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, நகரின் மையப்பகுதியில், 'பெண்களுக்கு எதிரான, ஈவ் டீசிங்கை இத்துடன் நிறுத்துவோம்' என்ற வாசகம் அடங்கிய போர்டுடன், ஒருநாள் முழுவதும் நிற்க வைக்க வேண்டும். இதை பார்ப்போர், பெண்களிடம் சில்மிஷம் செய்ய பயப்படுவர். இனியும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு, இதை விட கடுமையான தண்டனை வழங்கப்படும். இவ்வாறு கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, போலீஸ் கண்காணிப்புடன், ரஹீமுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த வழியே சென்ற பொதுமக்கள், ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும், ரஹீமை பார்த்துச் சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12-ஜன-201719:39:51 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பேஷ் இது குற்ற முறை தண்டனை சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள தண்டனையாக இருக்காது என எண்ணு கின்றேன். இப்படித்தாங்க சமயோசிதமான தண்டனை வழங்கிடனும். கொலை குற்றத்திற்கு மரண தண்டனை அளிக்கனும்ங்க...>>
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-ஜன-201707:47:11 IST Report Abuse
A.George Alphonse This type of vinodha punishment may increase the revenge feelings of the culprit towards the woman and her family and he may damage her more hereafter. If that man would have been awarded imprisonment that might have change his carrier and very less chance of revenge feelings towards that woman and her family.As we see in movies and TV serials the affected persons always wait to take revenge in order to get satisfaction for their previous insult.May God change this man's character and save that woman and her family from further troubles and revenge from that culprit.
Rate this:
Share this comment
Cancel
Siva Panchalingam - Toronto,கனடா
12-ஜன-201705:00:12 IST Report Abuse
Siva Panchalingam இப்படியான சில குற்றங்களுக்கு இதனை விட திறமையான தண்டனை என வேறு எதுவும் இருக்கமாட்டாது.
Rate this:
Share this comment
Cancel
Panni Moonji Vaayan - chennai,இந்தியா
12-ஜன-201702:57:48 IST Report Abuse
Panni Moonji Vaayan mokkai theerpu, ivana pudichu sila pala naal ulla vechu kavanichurukanum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை