Advertisement
மல்லையாவுக்கு 'நோட்டீஸ்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: கோர்ட் உத்தரவுகளை மீறி, 273 கோடி ரூபாயை, தன் குழந்தைகளின் பெயருக்கு மாற்றியதாக, வங்கிகள் கூறிய புகார் குறித்து பதிலளிக்கும்படி, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டதை தொடர்ந்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றான், பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையா. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், வங்கிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தன் சொத்துக்களை விஜய் மல்லையா விற்கக் கூடாது, யாருக்கும் மாற்றக் கூடாது என, கோர்ட்டுகள் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த, 'டியாஜியே' என்ற நிறுவனத்தில், தன் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த, 273 கோடி ரூபாயை, விஜய் மல்லையா, தன் குழந்தைகளின் பெயருக்கு மாற்றியுள்ளான்; அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு ஏற்ற, நீதிபதிகள், குரியன் ஜோசப், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி, விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வு, வழக்கு விசாரணையை, பிப்., 2க்கு ஒத்தி வைத்தது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்