பேரழிவை நாடு சந்திக்கும்! மன்மோகன் எச்சரிக்கை | பேரழிவை நாடு சந்திக்கும்! மன்மோகன் எச்சரிக்கை Dinamalar
பதிவு செய்த நாள் :
பேரழிவை நாடு சந்திக்கும்!
மன்மோகன் எச்சரிக்கை

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு திட்டத் தால், நாடு மிக மோசமான பேரழிவை சந்திக்க உள்ளதாக, காங்., கட்சியைசேர்ந்த, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.

 பேரழிவை நாடு சந்திக்கும்! மன்மோகன் எச்சரிக்கை

மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை கண்டிக்கும் வகையில், டில்லியில் நேற்று, காங்., மாநாடு நடத்தியது. இதில் பங்கேற்று முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் பேசியதாவது: 'செல்லாத நோட்டு திட்டத்தால், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்;

எல்லா துறை களிலும் முன்னேற்றம் ஏற்படும்' என, பிரதமர், நரேந்திர மோடி கூறுவதில், உண்மை எதுவும் இல்லை. இந்த விஷயத்தில், பிரதமர் மோடி செய்துள்ள தவறுகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை, காங்., கட்சியினருக்கு உண்டு.

செல்லாத நோட்டு திட்டத்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவை சந்திக்கும். இதனால், மிக மோசமான பேரழிவு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. நாட்டின் வருமானம் கடந்த இரண்டாண்டுகளில் அதிகரிதது வருவதாகபிரதமர் மோடி கூறுவது பொய். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் நாட்டை கடுமையாக பாதித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக, அனைத்தும் கெட்டதி லிருந்து மோசமாக மாறியுள்ளது. ஜி.டி.பி., வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும் என சிலர் கூறுகின்றனர்.

Advertisement

இதன் மூலம் ரூபாய் நோட்டு வாபஸ் பெரிய பேரழிவு என்பதை நாம் எண்ணி பார்க்கலாம். ஜிடிபி குறையும் போது, வேலைவாய்ப்பு, உற்பத்தி, விவசாய வருமானம் குறையும். இது ரூபாய் நோட்டு வாபசால் ஏற்பட்ட பேரழிவு ஆகும் எனக்கூறினார்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sahayam - cHENNAI,இந்தியா
12-ஜன-201722:20:05 IST Report Abuse

Sahayamகருத்து சொல்லும் தேச பக்தர்களுக்கு - நான் பேங்க் சென்ற போது நேற்று கண்ட காட்சி - 15 பேருக்கு rs 2000 எடுக்க வித்திடர்வேல் ஸ்லிப் நிரப்பி கொடுத்தேன். அவர்களுக்கு சம்பளம் மாதம் 4500 . அது அவர்கள் கம்பெனியால் 4 நாட்கள் முன்பு போடப்பட்டது. கடந்த 4 நாட்கள் பாங்குக்கு நடந்து கடைசில் இன்று இந்த 2000 அவர்களுக்கு கிடைக்கிறது . மீதி எப்போவோ தெரியாது . இந்த 4 நாட்களுக்கு பாதி நாள் சம்பளம் இல்லாத லீவு. இந்த 2000 ரூபாய்க்கு சில்லறை மாற்றுவதற்கு 100 கமிஷன் கொடுக்க வேண்டும். பாதி பேருக்கு மேல கம்பெனியில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். மீதி இருப்பவர்களுக்கு அடுத்த மாதம் முதல் எல்லா பிடித்தமும் போக 3500 தான் சம்பளம் என கூறி விட்டார்கள். இந்த 3500 க்கு எங்கு எது வாங்கினாலும் வரி கட்டி வாங்கினால் நிகர செலவு பண்ணும் தொகை rs 3000 மட்டுமே. எப்படி ஜீவனம் நடத்துவோம் என சொல்லி கண்ணீர் வடித்தார்கள். இந்த கண்ணீருக்கு மோடி கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும்.அந்த முதலாளி வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணம் வைத்தால் அவனை பிடிக்க துப்பு கெட்ட அரசு ஏழைகளின் வைத்தில் அடிப்பது சரியல்ல

Rate this:
Krishna - Dindigul,இந்தியா
12-ஜன-201721:49:03 IST Report Abuse

Krishnaஒரு பேரழிவு பேரழிவை பத்தி பேசுது....

Rate this:
Sivagiri - chennai,இந்தியா
12-ஜன-201721:19:19 IST Report Abuse

Sivagiriகாங்கிரஸ் கம்பெனி முதலாளிகளும் மேனேஜர்களும் பைத்தியம் பிடித்து பிதற்ற ஆரம்பித்து விட்டார்கள் போல . . .

Rate this:
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
12-ஜன-201720:23:32 IST Report Abuse

Palanisamy Tதம்பி "அண்ணனின் விழுதுகள்" அவர்களே, நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்ளென்றுப் புரியவில்லை நான் மாலத் தீவுப் "பேப்பரை" படிப்பதில்லை. தவறு நடந்திருந்தால் திருத்திக் கொள்கின்றேன்.

Rate this:
Sham - Ct muththur,இந்தியா
12-ஜன-201720:14:11 IST Report Abuse

Sham உண்மைதான் மண்ணு மோக சிங்கு... உம்மையும், மக்கள் விரோத இத்தாலி மாபியா கும்பலையும், உடனே இந்தியாவை விட்டுத் துரத்தாமல் வைத்திருந்தால் நிச்சயம் பேரழிவு ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை... வந்துட்டாரு... . கருத்துக் சொல்ல...

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
12-ஜன-201720:08:01 IST Report Abuse

 ஈரோடுசிவாஇந்த பொருளாதார புண்ணாக்கு பினாத்துவதைப் பார்த்தால் மோடியின் நடவடிக்கையால் அந்த பக்கம் ஏகப்பட்ட சேதம் போல... நீங்க என்ன கஷ்டப்பட்டா சம்பாதிச்சிங்க... இந்த அடிஅடிச்சுக்கரிங்க...

Rate this:
Prem Ananth - CHENNAI,இந்தியா
12-ஜன-201720:07:43 IST Report Abuse

Prem Ananthமணிமேகலையின் அடிமை சொல்லிட்டாரு .... கெளம்பு காத்து வரட்டும் - யோக்கியன் வாயை தொறந்துட்டாரு -

Rate this:
Rocky - chennai,இந்தியா
12-ஜன-201719:29:50 IST Report Abuse

Rockyஇவர் ஆட்சியில் ஏற்பட்ட சீரழிவைத் தான் இப்போது அனுபவித்து வருகிறது இந்தியா ... இதைவிடச் சீரழிவு இனி ஏற்படாது ...

Rate this:
Vetri Vel - chennai,இந்தியா
13-ஜன-201706:17:01 IST Report Abuse

Vetri Velகூவத்தில் ஒரு முத்து.. கண்டுபுடிப்பை பாருங்கள்.... போயி வாங்கி வாசல்லில தவம் கிட... இதுக்கு மேல ஒரு சீரழிவு வேணுமா உனக்கு...?...

Rate this:
Thamizh Pithan - CHICAGO,யூ.எஸ்.ஏ
12-ஜன-201718:25:08 IST Report Abuse

Thamizh Pithanமௌன சாமியார் மன்மோஹன் - அமைதியா இருந்தா கைது இல்லை - சும்மா இத்தாலி பேச கேட்டு ஆடினா - ஜெயில்தான் - களி தான்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜன-201717:28:39 IST Report Abuse

Endrum Indianகாங்கிரஸ் ஊழல் செய்து ஆண்ட காலத்தில் சந்திக்காத பேரழிவா இப்பொழுது சந்திக்கப் போகின்றது. “ஊமை ஊரை கெடுக்கும் பேச ஆரம்பித்தால்” என்று சொல்வது போல் இருக்கின்றது இந்த மௌன சிங்கின் ஆரவாரம்.

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement