நில ஆவணங்கள் 'டிஜிட்டல்' மயம்: தெலுங்கானா அரசு திட்டம் | நில ஆவணங்கள் 'டிஜிட்டல்' மயம்: தெலுங்கானா அரசு திட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
நில ஆவணங்கள் 'டிஜிட்டல்' மயம்:
தெலுங்கானா அரசு திட்டம்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள, அனைத்து நில ஆவணங்களையும், 'டிஜிட்டல்' மயமாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, நிலங் களை மீண்டும் அளவிட, 'சர்வே' மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 நில ஆவணங்கள் 'டிஜிட்டல்' மயம்: தெலுங்கானா அரசு திட்டம்

முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி அமைந் துள்ள தெலுங்கானா மாநிலம், ஆந்திராவில் இருந்து பிரிந்து, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.

அரசு நிர்வாகத்தில், மின்னணு பயன்பாட்டை அதிகளவில் பயன்படுத்தி வரும் மாநிலங் களில், ஆந்திராவும், தெலுங்கானாவும் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள, அனைத்து நிலங்கள் குறித்த ஆவணங்களையும், டிஜிட்டல் மயமாக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.இந்த பணி, நில நிர்வாகத் துறைக்கு கீழுள்ள, 'பூபாரதி' துறையிடம் ஒப்படைக் கப்பட்டு உள்ளது.

இது குறித்து, அதன் இணைச் செயலர் பாஸ்கர் கூறியதாவது:

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, தெலுங்கானாவில் உள்ள நிலங்களின் ஆவணங்கள், டிஜிட்டல் வடிவில் இல்லை. இதனால், நிலம் தொடர்பான பொது மக்களின் விண்ணப்பங்களுக்கு, சரியான பதிலை அளிக்க முடியவில்லை.கடைசியாக, 1930களில், நிலங்கள் சர்வே செய்யப்பட்டன.

பல நிலங்கள், நிஜாம் காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. தற்போதுள்ள நில ஆவணங்களில், பெரும் பாலானவை கிழிந்தும், பயன்படுத்த முடியாத நிலை யிலும் உள்ளன. பல நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் காணவில்லை.

மத்திய அரசின், நில ஆவணங்களை, டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள

Advertisement

அனைத்து நிலங்களுக்கான ஆவணங்களும், டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, மீண்டும் நிலங்கள் குறித்த சர்வே மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம், எந்தெந்த வகையான நிலங்கள் உள்ளன என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்த சர்வே உள்ளிட்ட டிஜிட்டல் மயமாக்கும் பணிக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. மிக விரைவில், இந்தப் பணிகள் துவக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
12-ஜன-201717:50:04 IST Report Abuse

Shekar Raghavanடிஜிட்டல் மயமாகி விட்டால் ஆட்டை போட்ட பணத்தை எங்கே போடுவது , கட்டாயம் ஆக்கினால் கோட்டை கோர்ட்டுக்கு போகும் .................. உருப்படாத தமிழன் , தமிழுலகம் ............... தனி மனிதர்களின் துணிவால் வளர்ந்த விந்தை மிகு உலகம்

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
12-ஜன-201714:28:56 IST Report Abuse

Chandramoulliமிகவும் அற்புதமான திட்டம். நல்ல தொலை' நோக்கு திட்டத்துடன் செயல் பட நினைக்கிறார்கள் . வாழ்த்துக்கள் .

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
12-ஜன-201713:16:37 IST Report Abuse

Tamil Selvanதமிழ் நாட்டில் ரேஷன் அட்டையை ஸ்மார்ட் அட்டையாக கொண்டு வருகிறோம் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார்கள்... ஆனாலும் இன்னும் குடும்ப அட்டையில் உட்தாள் தான் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்... இவ்வளவு நாட்களாக நமக்கு தெரியாமலே ரேஷன் அட்டையில் வாங்கினவர்கள் இப்பொழுது இந்த ஸ்மார்ட் அட்டையின் மூலம் பல பொருட்கள் வாங்கும்போது நமக்கு செய்திகள் வந்து விடுகிறது... அதனால் கொள்ளை அடிக்க முடியவில்லை என்று சொல்லி மீண்டும் பழைய படிக்கே உட்தாள் ஒட்ட ஆரம்பித்து விட்டார்கள்... இன்னும் 5 ஆண்டுகள் இப்படியே நடந்தாலும் நடக்கலாம்...

Rate this:
karthik - Chennai,இந்தியா
12-ஜன-201711:39:09 IST Report Abuse

karthikBJP ruled states are doing excellent. Non BJP states live Andhra, telungana, orissa are also doing good. Only concerns are about Tamilnadu, punjab, Bihar, kerala and West Bengal.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
12-ஜன-201710:48:43 IST Report Abuse

நக்கீரன்வரவேற்கப்பட வேண்டிய முடிவு. இந்த தூங்கு மூஞ்சி தமிழகம் இது போன்ற எந்த தொலைநோக்கு திட்டங்களும் வைத்திருப்பதாக தெரியவில்லை.

Rate this:
Kumar Kandasamy - Hosur,இந்தியா
12-ஜன-201711:10:42 IST Report Abuse

Kumar Kandasamyஉங்களுக்கு நாட்டு நடப்பே தெரியல, அவனவன் வேஷ்டி அவுறுத்துன்னு சேலைய சுத்திகிட்டு நிக்கிறப்போ வேலைய எப்படி பார்க்க முடியும். அவங்களோட பிசினஸ் ஸ்கோப் ல இதெல்லாம் வராது பாஸ்....

Rate this:
senthil - Pasumbalur,இந்தியா
12-ஜன-201706:10:19 IST Report Abuse

senthilஅடுத்த ஆப்பு ரெடி ஆகுது

Rate this:
Kumar Kandasamy - Hosur,இந்தியா
12-ஜன-201711:17:13 IST Report Abuse

Kumar Kandasamyஅப்படீன்னா நீங்க எந்த திருடனுக்கு பினாமி?...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-201704:29:47 IST Report Abuse

Kasimani Baskaranஅருமையான விஷயம்... சிங்கப்பூரை மாடலாக வைத்து பணியாற்றுகிறார்கள்... ஆவணங்களை டிஜிட்டல் மயமாகி விட்டால் அவற்றை தேடுவது மிக எளிது...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement