ஏப்ரலில் ஜி.எஸ்.டி., அமல்? அருண் ஜெட்லி நம்பிக்கை | ஏப்ரலில் ஜி.எஸ்.டி., அமல்? அருண் ஜெட்லி நம்பிக்கை Dinamalar
பதிவு செய்த நாள் :
ஏப்ரலில் ஜி.எஸ்.டி., அமல்? ஜெட்லி நம்பிக்கை

காந்தி நகர்:''நிலுவையில் உள்ள, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டால், ஏப்., 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை, நாடு முழுவதும் அமல்படுத்துவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

ஏப்ரலில் ஜி.எஸ்.டி., அமல்? அருண் ஜெட்லி நம்பிக்கை

குஜராத்மாநிலம்,காந்திநகரில் நடந்த,'விப்ரன்ட்' சர்வதேச மாநாட்டில்,

மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி பேசியதாவது:

மாநில அரசுகளுடன்,ஜி.எஸ்.டி., தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்பட்டால், ஏற்கனவே திட்டமிட்டபடி, ஏப்., 1 முதல், ஜி.எஸ்.டி., நாடு முழுவதும் அமல்படுத்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

முடியாத பட்சத்தில், ஜி.எஸ்.டி.,யை, செப்., 16க்குள் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட, ஜி.எஸ்.டி., மசோதாவின்படி, ஜி.எஸ்டி., யை, செப்., 16க்குள் அமல்படுத்தாவிட்டால், தற்போது அமலில் உள்ள சில வரிகள் காலாவதியாகி விடும்.செல்லாத

Advertisement

நோட்டு திட்டத்தாலும், ஜி.எஸ்.டி., அமல்படுத்துவதாலும், நாட்டின் பொருளா தாரம் சிறப்பான வகையில் முன்னேற்றம் அடையும். இந்த ஆண்டில், அதன் பலன்களை காண்போம் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
12-ஜன-201714:34:29 IST Report Abuse

Chandramoulliஅதுவும் இந்த சர்க்கஸ் பபூன் இருக்கும் வரை எதுவும் திட்டமிட்ட நேரத்தில் நடக்க வாய்ப்பு இல்லை . செப்டம்பர் 2017 க்கு பிறகு தொடங்க வாய்ப்பு அதிகம். இன்னமும் ஏகப்பட்ட தீர்மானங்களில் உடன்படிக்கை இல்லை . மாநிலங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் பிரயாணிக்கின்றனர் . முடிவு எடுத்தாலும் அதை சீரமைக்க செயல்படுத்த கால அவகாசம் தேவை . ஐந்து மாநில தேர்தல்களினால் ஒரு முடிவும் எடுக்க முடியாது . 2018 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு அதிகம் .

Rate this:
sickularist sickular - sikim,பூடான்
12-ஜன-201714:15:40 IST Report Abuse

sickularist sickularஇது நாட்டுக்கு மிகவும் உன்னதனான வரிவிதிப்பு முறை. இதனால் வரி ஏய்ப்பு ஊழல் மிகவும் குறைய வாய்ப்புகள் அதிகம், நமது இந்திய பொருளாதாரம் மிக உன்னத நிலைக்கு கொண்டுசெல்ல முடியும். இது நாட்டுக்கு நல்லதென்பதால் தான் இடது சாரிகள் மற்றும் பணம் பண்ணமுடியாதே என்ற ஏக்கத்தில் ஊழல் வாதிகள் எதிர்க்கின்றனர்

Rate this:
Renga Naayagi - Delhi,இந்தியா
12-ஜன-201713:39:12 IST Report Abuse

Renga Naayagiவாய்ப்பில்லை

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஜன-201711:53:00 IST Report Abuse

Pugazh Vஜி எஸ் டி நடுத்தர மக்கள் தலையில் அடுத்த சம்மத்தி அடி. இது நன்றாகத் தெரிந்தும், எதற்காகவோ பலரும், இதை வரவேற்கிறார்கள். அனுபவிங்க.. ஜி எஸ் டி என்று சொல்லி, இது வரை எந்த வரிகளுக்கும் உட்படாத பொருட்களைக் கூட 22 % வரி கட்டி வாங்கும் நிலை, இது வரை வெறும் 14 . 5 % வரி கட்டிக்க கொண்டிருக்கிற பொருட்களுக்கும் 22 % வரி கட்டும் நிலைகளுக்கு ஆளாகப் போகிறீர்கள். 22 % க்கு அதிகமான வரியுடன் இப்போது மிகச் சிலவே இருக்கின்றன. அவற்றின் விலை வேண்டுமானால் குறையலாம், ஆனால் அவை எந்தப் பொருட்கள் என்று தெரியவில்லை, இன்று வரை.

Rate this:
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
12-ஜன-201710:10:02 IST Report Abuse

முருகவேல் சண்முகம்..ஏப்ரல் 17 மாதம் முதல் அமல்படுத்தினால் நல்லது, முழு ஆண்டு கணக்கும் ஒரே திட்டத்தில் வரும், இல்லையெனில் குழப்பம் அதிகமாகும். ஆனால் இன்றைய நிலவரப்படி இது சாத்தியமில்லை, இதுவரையில் மத்திய மாநில அரசுகளின் எல்லைகள் வரைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கான சாப்ட்வேர் முழு அளவில் தயங்கவில்லை, இந்த மாதம் வரை மத்திய மாநில அரசுகளின் சாப்ட்வேரில் நிறுவனத்தின் விவரங்களை பதிவு செய்வதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது, ஆனால் அது முழுமையானதாக இல்லை, சில குளறுபடிகள் உள்ளது. இதன் பிறகு மத்திய மாநில அரசு ஊழியர்களின் அதிகாரவரம்பு நிர்ணயிக்கப்படுத்தல் வேண்டும், இதன் பிறகு இரு அரசுகளில் எஞ்சப்போகும் ஊழியர்களின் நிலை என்னவாக போகிறது. GST யை கையாளப்போகும் ஊழியர்களுக்கான பயிற்சி அப்புறம், நிறுவனங்களுக்கான பயிற்சி என்று நீளப்போகும் இந்த விவகாரம் ஏப்ரலில் அமல்படுத்துவது மிக மிக கடினம், அப்படியே அமல்படுத்தினாலும் கூட அரைகுறையாகத்தான் செய்யமுடியும் ஆகையால் இன்னும் மூன்று மாதகாலம் எடுத்துக்கொண்டு பின்னர் முழுவீச்சில் அமல்படுத்தினால் நல்ல முறையில் அமைப்படுத்த முடியும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-201704:31:28 IST Report Abuse

Kasimani Baskaranதொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியில் பாஜக அரசு வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement