எனக்கும் ரஷ்யாவிற்கு எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப் | எனக்கும் ரஷ்யாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப்| Dinamalar

எனக்கும் ரஷ்யாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப்

Updated : ஜன 12, 2017 | Added : ஜன 11, 2017 | கருத்துகள் (7)
Advertisement
எனக்கும் ரஷ்யாவிற்கு எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப்

நியூயார்க்: அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வானதற்கு ரஷ்யாவின் மறைமுக உதவி இருப்பதாக குற்றசாட்டு வெளியாகி பரபரப்பாக பேசப்படும் நிலையில், ‛எனக்கும் ரஷ்யாவிற்கு எந்த தொடர்பும் இல்லை' என்று டிரம்ப் பேட்டியில் தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வான பிறகு முதல்முறையாக ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:
நான் செலுத்திய வரி விபரங்களை தற்போது வெளியிடப்போவதில்லை. அது தற்போது தணிக்கையில் உள்ளது. எனது தொழில்களை எனது இரண்டு மகன்களும் கவனித்து வருகின்றனர். அதுகுறித்து எந்த கருத்துக்களும் அவர்கள் என்னிடம் பகிரப்போவதில்லை. நான் எனது தொழிலில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிவிட்டேன்.


ரஷ்யா குறித்து கருத்து


என்னை பற்றி தவறாக வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் செய்திகள் முற்றிலும் போலியானது. எனக்கு ரஷ்யாவுடன் கடனோ, நிலுவை தொகையோ என எந்த வித தொடர்பும் இல்லை. ரஷ்ய அதிபர் புதினுக்கு என் மீது நல்ல அபிமானம் ஏற்பட்டால் அது எனது பெரிய சொத்தாக கருதுவேன்.
அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு


ஐ.எஸ்., பயங்கரவாதிகளை அழிக்க அமெரிக்காவிற்கு ரஷ்யா உதவலாம். இதுவரை இல்லாத அளவில் அமெரிக்கர்களுக்கு பல வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன். அமெரிக்காவில் அமையவுள்ள அமைச்சரவை இதுவரை இல்லாத சிறந்த அமைச்சரவையாக அமையும். ஒபாமா கொண்டு வந்த ஒபாமா கேர் திட்டம் ஒரு தோல்வியான திட்டம். அந்த திட்டம் மாற்றியமைக்கப்படும்.
மெக்சிகோ சுவர்


நான் பதவியேற்றவுடன் உடனடியாக பல திட்டங்கள் கையெழுத்தாகவுள்ளன. அதில் முக்கியமாக அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் இரு நாடுகளையும் பிரிக்கும் வகையில் பெரிய சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் இரு நாட்டிற்கு உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.'' என கூறினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
12-ஜன-201710:08:19 IST Report Abuse
Rajendra Bupathi சரி ஒங்க ஆப்பன் குதிருக்குள்ள இல்ல? அப்புறம் ஜெயிச்சது எப்படி?
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
12-ஜன-201709:28:59 IST Report Abuse
balakrishnan உண்மையில் பாராட்டுக்குரியவர், தன் மீது ஒரு குற்றச்சாட்டு என்றவுடன் தனது வக்கீல் உடன் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார், நிருபர்களும் கேள்வி கேட்டார்கள், உலக வல்லரசின் அதிபராக போகிறவர் நடந்து கொண்ட முறை மிகவும் நாகரீகமாகவே இருந்தது, ஆனால் நாம் மோடியை ஒரு கேள்வி கேட்கமுடியுமா
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
12-ஜன-201708:33:08 IST Report Abuse
Ramesh Kumar அமெரிக்காவும் ரஸ்யாவும் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்....உலகளாவிய தீவிரவாதத்தை எதிர் கொள்ள இருவரும் கைகோர்த்தால் மட்டுமே முடியும்....
Rate this:
Share this comment
Cancel
singaivendan - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-201705:33:10 IST Report Abuse
singaivendan நீங்க சும்மா அசத்துங்க டிரம்ப்.... நீங்கள் செய்திருப்பது ஒரு இமாலய சாதனை எதிரிகள் முகத்தில் கரியை பூசி களத்தில் இப்போது எதிரிகளே இல்லை என்ற அளவுக்கு ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள்... உங்கள் ஆட்சி நல்லாட்சியாகவும் அது ஒரு பொற்காலமாகவும் கட்டாயம் அமையும்.. நீ....ங்கள் எல்லா வகையிலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
12-ஜன-201704:54:29 IST Report Abuse
Rajesh நம் நாட்டு (IT) அமெரிக்க அடிமை கூட்டம் அரண்டு கிடப்பதாக கேள்விப்பட்டேன்..
Rate this:
Share this comment
Tamil - Trichy,இந்தியா
12-ஜன-201715:16:46 IST Report Abuse
Tamilஉனக்கு ஏய்யா இந்த வயித்தெரிச்சல். கூந்தல் உள்ளவன் அல்லி முடிஞ்சுகிறான்....
Rate this:
Share this comment
Rajesh - Chennai,இந்தியா
17-ஜன-201701:41:43 IST Report Abuse
Rajeshஅது அல்லி அல்ல அள்ளி அப்புறம் எனக்கு தெரிந்து IT கூட்டத்திற்கு கூந்தலே இல்லை அவர்கள் எப்படி அள்ளி முடிப்பார்கள் ??? நான் உள்ளதை சொன்னேன் சார் நமக்கு எல்லோரும் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் வயித்தெரிச்சல் எல்லாம் அறவே இல்லை நான் உள்ளதை சொன்னேன் 20 -jan நம்மாளின் நிலைமை என்ன என்று தெரிந்துவிடும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை