Advertisement
பதிவு செய்த நாள் :

மதுரை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை, அரசுடமையாக்க உத்தரவிடக் கோரிய மனுவை , உயர் நீதிமன்ற மதுரை கிளை பெஞ்ச் தள்ளுபடி செய்தது. ‛தனி நபர் சொத்து தொடர்பாக பொது நல மனு தாக்கல் செய்ய முடியாது' என, நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. ‛சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி இந்த மனு ஏற்புடையதல்ல' எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

மதுரை பொது நல வழக்குகள் மைய நிர்வாக அறங்காவலர், ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:முதல்வராக இருந்து மறைந்த


ஜெயலலிதா, சினிமா, அரசியலில் ஈடுபட்டார். சினிமாத் துறையில், பல கோடி ரூபாய் சம்பாதித்தார்.

1989ல், அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, சட்டசபை தேர்தலில், முதன்முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி


தேர்தல்களில் வெற்றி பெற்று, நான்கு முறை முதல்வராக பதவி வகித்தார். 2016, மே மாதம் ,நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி யிட்டார். அப்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், வங்கியில், 'டிபாசிட்' என, 10.63 கோடி ரூபாய்; பத்திர முதலீடு என27.44 கோடி; நகை கள் மதிப்பு என, 41.63 கோடி; நில மதிப்பு என, 72 கோடி ரூபாய் மற்றும் வாகன விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.

உடல்நலக் குறைவால், சென்னை, அப்பல்லோ

Advertisement

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிச., 5ல் ஜெ., மறைந்தார். ஜெ., பெயரில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில், அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. அவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. சொத்துகளுக்கு வாரிசு யார் என்பதை, நேரடியாக குறிப்பிடவில்லை. 'மக்களால் நான்; மக்களுக்காகவே நான்' என, ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடுவார். அவரது அசையும், அசையா சொத்துகளை, அரசுடமை யாக்க வேண்டியது அவசியம். இதன்மூலம் வரும் வருவாயை, ஏழைகளின் நலன்களுக் காக பயன்படுத்தலாம். எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், குழு அமைத்து, ஜெ.,யின் சொத்துகளை அடை யாளம் கண்டு, விபரங்களை அறிக்கையாக, தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில், சொத்துகளை கையகப்படுத்தி, அரசுடமை யாக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு


சொத்துகளை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க கோரி, பிரதமர்
அலுவலக முதன்மைச் செயலர், மத்திய உள் துறை செயலர், தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு, 2016, டிச., 15ல் மனு அனுப்பினேன். மனுவை பரிசீலிக்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-201722:04:21 IST Report Abuse

Mannandhaivery simple exercise. Tabulate all her properties. Leave what is d in her RK Nagar election nomination form. Remaining shall be taken over by government. If any penalty imposed on pending cases shall be recovered from the d assets.

Rate this:
raja - Kanchipuram,இந்தியா
12-ஜன-201722:02:22 IST Report Abuse

rajaஇந்தியாவில் நீதி என்பது கிடையாது. கொள்ளை அடிப்பவர் பாதுகாக்கப்படுவர். இது பிறந்த குழந்தை வரை அனைவருக்கும் தெரியும்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201721:23:39 IST Report Abuse

தமிழ்வேல் இரத்தவாரிசு இந்த மனுவை அளித்திருக்க வேண்டும். சொத்துக் குவிப்பு தீர்ப்பிற்குப் பிறகு அவரது வாரிசுகளால் மனு அளிக்கப் படலாம்.

Rate this:

சரவணன்,கோவில்பட்டி.ஜெ. சொத்தில் ஊழலில் சம்பாரித்தது அதிகம். அதனால் அது மக்களுக்கு வந்து சேர்வதே நியாயம். கலைஞருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் சொத்தும் தர்மத்திற்கு அப்பாற்பட்டதே!!!!!!! திராவிடக் கட்சியினரே அரசியலில் சம்பாத்தியம் செய்வதை தமிழகத்தில் விதைத்து மரமாக்கிய படுபாதகர்கள். இதில் யாரும் யாருக்கும் சலைத்தவர்கள் அல்ல.

Rate this:
John - Chennai,இந்தியா
12-ஜன-201720:32:55 IST Report Abuse

John35 வருடங்களாக பாத்திரம் தேய்க்கும் வேலைக்காரி முனியம்மா தான் அனுபவிக்கணுமா?

Rate this:
SUNDAR - chennai,இந்தியா
12-ஜன-201718:40:32 IST Report Abuse

SUNDARஜெயலலிதாவின் தாய் சந்தியா மேலும் ஜெயலலிதா சேர்ந்து வாங்கிய சொத்து போயஸ் இல்லம் என்கின்றனர். எனவே ஜெயலலிதாவிற்கு பின், அவரது வாரிசுகளுக்கும் பங்கு உண்டு. அல்லது அவரின் மறைவுக்கு பிறகு அவரின் ரத்த சம்பந்தங்களுக்கு போய் சேரும். அந்நியருக்கு போய் சேர வாய்ப்பில்லை. நிலைமை இப்படி இருக்க, தீபா ஏன் இது தெரிந்தும் வழக்கு போடாமல் இருக்கிறார்? புரியாத புதிர்?

Rate this:
Daniel - texas,யூ.எஸ்.ஏ
12-ஜன-201717:25:21 IST Report Abuse

Danielமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை, அரசுடமையாக்க உத்தரவிடக் கோரிய மனுவை , உயர் நீதிமன்ற மதுரை கிளை பெஞ்ச் தள்ளுபடி செய்தது. இது எல்லாரும் எதிர்பார்த்த தீர்ப்புதான். பணம் கொடுத்தால் நீதியை விலைக்கு வாங்கி விடலாம். ‛தனி நபர் சொத்து தொடர்பாக பொது நல மனு தாக்கல் செய்ய முடியாது' என, நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். அய்யா கணம் நீதிபதிகளே ஜெ ஒரு தனி நபர் அல்ல என்று உங்களுக்கு தெரியவே தெரியாதா. மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என, ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடுவார். அவரது வாய் மொழியை ஆதாரமாக கொண்டு அவரது அசையும், அசையா சொத்துகளை, அரசுடமை யாக்க வேண்டியது அவசியம் ஏனெனில் அவர் தமிழக மக்களின் சொத்து எனவே அவரது சொத்துக்களும் தமிழக மக்களுக்குத்தான். நான் சொல்வது சரி என்றால் லைக் போடுங்க. அதைப்போல் கட்டுமர தாத்தாவின் சொத்துக்களும் அவரது காலத்திற்கு பிறகு அவர் சொத்துக்கள் அனைத்தும் அவரது பேரப்பிள்ளைகளாகிய நமக்கு (தமிழ்நாட்டுக்கு ) சொந்தம். அவர் வாழும் வரை அவர் அனுபவிக்கட்டும் அதன் பிறகு நம் மக்களுக்கு.

Rate this:
வேந்தன் - சின்சினாட்டி,யூ.எஸ்.ஏ
12-ஜன-201723:08:55 IST Report Abuse

வேந்தன் லைக்கு, லைக்கு, லைக்கு....

Rate this:
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
12-ஜன-201715:42:45 IST Report Abuse

Ramaswamy Sundaramஅடிச்சாங்களா ஆப்பு? ஏண்டா ஊரான் சொத்துக்கு பேயா அலையறீங்க? திருட்டு ரயில் ஏறி வந்தவரின் குடும்பம் இன்றைக்கு ஆசியாவிலேயே பணக்கார குடும்பமாக உள்ளதே? மார்க்கண்டேய கட்ஜு கிழி கிழி என்று கிழித்தார்? இன்று வரை நாதஸ் அதற்கு ஏதாவது வாயை திறந்தா? இல்லையே? அம்மாவின் சுய சம்பாத்திய சொத்துக்களை அவருக்கு இஷ்டப்பட்டவர்களுக்கு கொடுப்பதை கேள்வி கேட்க நீங்கள் யார்? அற்ப பயல்களுக்கும் அவனுங்க பின்னால் இருந்து முடுக்கிவிடும் முட்டாள்களுக்கு உயர்நீதிமன்றம் அடித்த ஆப்ப மனதார வரவேற்கிறேன்.... .இனி ஒரு பயலும் வாயை திறக்கப்படாது ....சரியா? அற்றார் அழி பசி தீர்த்த அன்ன பூரணி அம்மா தர்மம் தேவதை....அந்த தங்கத்தாரகையின் ஆன்மா நிச்சயம் தமிழ்நாட்டை நல்லபடியாக கொண்டு செல்லும்.... நாதஸ் கும்பலை நாசமாக்கியே தீரும்

Rate this:
Maverick Alias JMD Cunha - Kanniyakumari,இந்தியா
12-ஜன-201716:11:02 IST Report Abuse

Maverick Alias JMD Cunhaகூமுட்டை....ஏதோ வழக்கு போட்டவர் அம்மணி சொத்து தனக்கு வேணுமின்னு போட்டாருன்னு நீ நினைச்சாலே அது ஒன் தப்பு....திருட்டு ரயில்.. ன்னு கோபால புறம் போய் கூவு... ஆப்பை ஏத்தியே ஒன்னை மைசூருக்கு அனுப்புவாய்ங்க...... .//அற்றார் அழி பசி தீர்த்த....//....ஏழை பாழை சாராய துட்டுல... இட்லி கடை நடத்தினா அதுக்கு இப்படி ஒரு பேரா ...? ...மைசூரிலேயே இருந்துக்கோ.........

Rate this:
Madurai Alagusundaram - Doha,கத்தார்
12-ஜன-201718:53:39 IST Report Abuse

Madurai Alagusundaramஇந்த மாதிரி நாதருக்கு நல்லது எது கெட்டது எதுன்னே தெரியாது சகோ, அவர் கேட்டது வாரிசு இல்லை, எனவே மக்களுக்கு உதவட்டும் என்று, எம்ஜியார் கூட சொத்துக்களை மக்களுக்கு எழுதிவைத்தார். சரி அம்மா சொத்தையெல்லாம் சின்னம்மா ஆட்டையப் போட்டா சந்தோசமா? என்ன அறிவோ? என்ன இவரெல்லாம் படித்தாரோ? கருமம் இப்போ தெரியுதுய்யா உன்னைமாதிரி ஆளுங்கானால மரியாதை போகுதுன்னு?...

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
12-ஜன-201715:37:05 IST Report Abuse

தமிழர்நீதி ஜெயா விஷயத்தில் நீதிமன்றம் ஆரம்பம் முதல் தள்ளுபடிதான் . அதனால் 75 நாள் என்ன ஆனது ஒரு மாநில முதல்வர் என்ன ஆனார் என்று தெரியாமல் போனது . எதோ உள்குத்து இருக்கும் போலிருக்கு .

Rate this:
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
12-ஜன-201714:58:51 IST Report Abuse

PRAKASHமக்களால் நான் மக்களுக்காகவே நான் னு சொன்னதெல்லாம் சசியோட மக்கள் .. நம்ம மக்கள் தான் மரமண்டைகள்..

Rate this:
மேலும் 71 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்