சசிகலாவுடன் பன்னீர்செல்வம் மோதலா? | சசிகலாவுடன் பன்னீர்செல்வம் மோதலா?:முதல்வர் நிகழ்ச்சி இடம் மாறியதால் சர்ச்சை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலாவுடன் பன்னீர்செல்வம் மோதலா?:
முதல்வர் நிகழ்ச்சி இடம் மாறியதால் சர்ச்சை

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவிற்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கோட்டை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

 சசிகலாவுடன் பன்னீர்செல்வம் மோதலா?:முதல்வர் நிகழ்ச்சி இடம் மாறியதால் சர்ச்சை

ஜெயலலிதா இருந்த வரை, அவரது நம்பிக் கைக்குரியவராக, முதல்வர் பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்து, விலக நேரிட்ட போது, பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.அந்தளவுக்கு இவர், ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற்றது, சசிகலா குடும்பத்தினருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியது.

எனவே, பன்னீர்செல்வம் மீது, ஜெயலலிதா வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகை யில், பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். கடந்த, அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.

சட்டசபை தேர்தலில், பன்னீர்செல்வத்திற்கு, 'சீட்' கிடைக்காது என, தகவல் பரவியது. ஆனால், அவருக்கு சீட் கொடுத்து, அவரை நிதி அமைச்சராக்கி, தனக்கு அடுத்த இடத்தை, ஜெயலலிதா வழங்கினார்.இதனால் அதிருப்தி அடைந்த சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதா மறைந்ததும், எடப்பாடி பழனிச்சாமியை, தற்காலிக முதல்வராக்க முடிவு செய்தனர்.

ஆனால், மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக, மீண்டும் முதல்வராக, பன்னீர்செல்வமே தேர்வு செய்யப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா தலைமை ஏற்கவும், அவரது விசுவாசியாகவும் மாற முன் வந்தார். பொதுச்செயலராக, சசிகலா ஆசைப்பட்ட தும், அந்தப் பதவிக்கு அவர் வர, பன்னீர்செல்வம் உறுதுணையாக இருந்தார். முதல்வர் என்பதையும் மறந்து, அவரது காலிலும் விழுந்தார்.

அதன்பிறகும், அவருக்கு சசிகலா உரிய மரியாதை வழங்கவில்லை. கட்சி நிர்வாகிகளை சந்திக்க, சசிகலா வந்தபோது, முதல்வர் மற்றும் அமைச்சர் கள், கூட்டம் நடந்த அரங்கிற்குள் அனுமதிக்கப்பட வில்லை. கூட்டம் முடிந்து, சசிகலா புறப்படும் வரை, கால் கடுக்க காத்திருந்தனர்.

இது, பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. தொடர்ந்து, மீனவர் பிரச்னை தொடர்பாக, அவர் பிரதமருக்கு கடிதம் எழுத, பதிலுக்கு சசிகலாவும் கடிதம் எழுதினார். மேலும், தன் கடிதம் பத்திரிகை களுக்கு வெளியான பிறகே, பன்னீர்செல்வம் கடிதம் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக, 9ம் தேதி, முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமருக்கு கடிதம் எழுதினார்; நேற்று சசிகலா கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை தான், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், டில்லியில் மத்திய அமைச்சரிடம் வழங்கினர். இது தொடர்பாக, பத்திரிகையாளரிடம் பேசிய,லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ஒரு முறை கூட, தமிழக அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. சசிகலா உத்தரவில் வந்ததாக மட்டும் தெரிவித்தார்.

ஒவ்வொரு செயலிலும், தன்னை அவமதிக்கும் வகையில், சசிகலா செயல்படுவது, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இருவருக்கும் இடையே

Advertisement

கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

திறப்பு விழா இடமாற்றம் ஏன்?


முதல்வர் பன்னீர்செல்வம், இன்று, 25 துறை களின் சார்பில், வட மாவட்டங்களில் கட்டப் பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் புதிய தொழிற் சாலைகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைக்கிறார்.இந்நிகழ்ச்சி, சென்னை, எழும்பூர் குழந்தை நல மருத்துவ மனையில் நடைபெற உள்ளது. பொதுவாக திறப்பு விழா நிகழ்ச்சி, தலைமை செயலகத் தில், முதல்வர் அறையில் நடைபெறும். ஆனால், அந்த அறையை பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என, சசிகலா உத்தர விட்டதால், விழா எழும்பூருக்கு மாற்றப் பட்டதாக, தகவல் வெளியானது.

அதை, கட்சி நிர்வாகிகள் மறுத்தனர். ஜெயலலிதா மறைந்து, 45 நாட்கள் நிறைவு பெறாததால், அவரது அறையை பயன்படுத்த வில்லை என தெரிவித்தனர். மேலும், இந்த மருத்துவமனையில் கட்டியுள்ள கட்டடத்தை யும், முதல்வர் திறந்து வைக்கிறார்; அதனால் தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
12-ஜன-201723:47:00 IST Report Abuse

Dr.C.S.Rangarajanமரியாதை என்பது நாம் மற்றவருக்கு தந்து அதனை அவர்களிடமிருந்து பெறுவது, கண்ணியமான செயல், நல்ல உறவையும், நம்பிக்கையும் வளர்க்க வித்திடும். "நான்" என்ற அகந்தை கிழங்கை தகுதியற்றவர்கள் வளர்த்துக்கொண்டு பிறரை மதிப்பிடவும் தெரியாமல், மதிக்கவும் தெரியாமல் கர்வத்துடன் இருப்பது எல்லாக்காலத்திலும் செல்லுபடியாகாது. அப்துல் கலாம் போன்ற மாமேதைகள் 'அடியார்க்கு அடியார்' என்ற நிலையில் தங்களை தாங்களே அடையாளம் கண்டுகொண்டதால், 'நெஞ்சம் மறக்காத நிலைமட்டுமல்ல, சாகா வரம் பெற்றநிலையை அடைந்தார்கள். 'அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்".

Rate this:
P Mahendiran - Nagpur,இந்தியா
12-ஜன-201716:50:00 IST Report Abuse

P Mahendiranபன்னீர் ஐயா, எத்தனையோ பேர் ஏங்கிக் கிடக்கும், ஒரு நாளாவது அரியணையில் அமர்ந்து விட முடியாதா எனப் பலர் தவம் கிடக்கும் சிம்மாசனம், பதவி, அரிய வாய்ப்பு, உமக்கு தற்காலிகமாகக் கொடுக்கப்பட்டு, இப்பொழுது நிரந்தரமாகவே கொடுக்கப்பட்டு உள்ளது. சசிகலாவிற்கு கடும் எதிர்ப்பு, ஜாதகம் வேறு சரியில்லை. இதைச் சரியாக பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவில்லை எனில், நீரெல்லாம் மனித குலத்தில் பிறந்ததே வீண். மக்கள் தலைவனாக மாறி மக்களுக்காகப் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்துங்கள். அடிமைத்தனத்திலிருந்தும், ஊழல் அரசியலில் இருந்தும் வெளியில் வாங்க. வேலைக்காரிகளும், கத்துக் குட்டிகளும் நாடாளத் துடிக்கும் போது... நிழல், நிஜமாவதில் தவறில்லை. கூண்டில் இருந்து விடுபட்ட சிங்கம் போல கர்ஜித்துப் பாருமய்யா. எல்லோரும் அடங்கிடுவாங்க. முடியலைனால், ஆட்சியைக் கலைத்து விட்டு, மக்கள் விரும்பும் தலைமையைத் தேர்ந்தெடுக்க, மக்களுக்கு வழி விடுங்க.

Rate this:
murasu - madurai,இந்தியா
12-ஜன-201716:40:42 IST Report Abuse

murasuபன்னீர் தான் சசி காலில் விழுந்து உருண்டு தன் விசுவாசத்தை காட்டிவிட்டார் , இன்னும் தினமலர் என்ன எதிர்பார்க்கிறது

Rate this:
Vandhe Madaram - Karur,இந்தியா
12-ஜன-201716:36:15 IST Report Abuse

Vandhe Madaramஆமாம் நம்ம சிங்கப்பூர் சேகரன் எங்கே போனார்? அவருடைய பதிவு இல்லாமல் போர் அடிக்கிறது. தினமலர் ஒரு சிறப்பு நிருபரை சிங்கப்பூர் அனுப்பி அவரை கண்டுபிடியுங்களேன் ப்ளீஸ்

Rate this:
ARUN - coimbatore,இந்தியா
13-ஜன-201707:42:26 IST Report Abuse

ARUNசிறப்பு பிரச்சாரம் செய்பவர்களுக்கு INNOVA கார் பரிசு வழங்குகிறார்களாம்.அதற்காக தலைமை கழகத்தில் சேகரன் வரிசையில் நிற்பதை பார்த்தார்களாம்...

Rate this:
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
12-ஜன-201716:04:25 IST Report Abuse

Bharathiஅப்பா அம்மாவோட காரையும் வீட்டையும் ஏன் இந்த வேலைக்காரி சொந்தம் கொண்டாடுறாராம்?

Rate this:
12-ஜன-201713:53:12 IST Report Abuse

உங்கள் சின்னமாஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர் தான் பன்னீர் செல்வம் என்பதை முதலில் பன்னீர் செல்வமும் பின்னர் அதிமுக தொண்டர்களும் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். தொண்டர்கள் இல்லை என்றால் என்ன குண்டர்கள் இருக்கிறார்கள் அவர்களை வழிநடத்த கொள்ளையடித்த பணம் இருக்கிறது என்ற மமதையில் இருப்பவரை அதிமுக தொண்டர்கள் புறக்கணிக்க வேண்டும்.

Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
12-ஜன-201710:56:36 IST Report Abuse

S.Ganesanஜெயலலிதா இறந்த அன்றே முதல்வர் பதவி பிரமாணம் ஏற்று கொள்ளவில்லையா ? சில நாட்களிலேயே சசியை பொது செயலர் ஆகி அவர் காலில் விழ வில்லையா ? முதல்வரின் தலைமை செயலக அலுவலகம் என்பது உணர்ச்சி பூர்வமாக பயன்படுத்த வேண்டிய இடம் அல்ல. அது சென்டிமென்ட்டுகளுக்கு அப்பாற்பட்டது. அதை 45 நாள் 60 நாள் ஒரு வருடம் என்று ஜெயலலிதாவின் காரியங்கள் முடியும் வரை பூட்டி வைப்பது தவறு. அது அவரின் இல்லம் அல்ல. வேண்டுமென்றால் போயஸ் தோட்ட வீட்டை , அதில் இருக்கும் அவர் அறையை பூட்டி வைத்தால் நியாயம் உள்ளது. அதுவும் அந்த அறையை பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா உத்தரவிட்டது கேவலம். அதை OPS கேட்பது அதை விட மகா கேவலம்.

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
12-ஜன-201710:47:46 IST Report Abuse

Chandramoulliஇரண்டு முறை முன்பு முதல்வர் பதவியில் இருந்த அனுபவம் எதை எப்படி செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். மேலும் அவர் அம்மா அவர்களின் அறையை எப்போதும் உபயோகம் செய்ததே இல்லை . களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த செய்தி உள்ளது . ஓ பி எஸ் அவர்களின் பணிவு அவரை நல்ல நிலைக்கு எடுத்து செல்லும். தீபாவிற்கு ஆதரவு முழுக்க முழுக்க ஓ பி எஸ் இருக்கிறார் . பிறகு தேவைப்படும். சாதுரியமாக காய் நகர்த்தி செல்கிறார்

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201715:05:46 IST Report Abuse

தமிழ்வேல் இவர், தீபாவுடன் சேர்ந்து கட்சியை நடத்த வேண்டும். சதிக்கும்பலுக்கு கட்சியை தாரைவார்த்தது தவறு. சதிக்கும்பல் கால்ல விழுறவரை பணிவுன்னு சொல்லலாமா ?...

Rate this:
நான் தமிழன் - Zurich,சுவிட்சர்லாந்து
12-ஜன-201710:45:55 IST Report Abuse

நான் தமிழன் ஒருவேளை விழுந்துகும்பிடும் போது தலை பாதத்தில் மோதிருக்குமோ... அதப்போயி தப்பா புரிஞ்சிகிட்டு தலைப்பு போட்டுட்டீங்க.... இதுக்கொரு தடவ கால்ல விழணும்... ஒரு மனுஷன் ஒரு நாளைக்கு எத்தன தடவைதான் கால்ல விழறது... எதிர்கட்சியினரை பார்த்து கேட்கிறேன் மனச்சாட்சி இல்லையா உங்களுக்கு....

Rate this:
christ - chennai,இந்தியா
12-ஜன-201710:28:48 IST Report Abuse

christஜெயலலிதா மறைந்து, 45 நாட்கள் நிறைவு பெறாததால், அவரது அறையை பயன்படுத்தவில்லை .ஜெயா இறந்து 2 நாட்களில் பதவிக்காக அடித்துக் கொண்டீர்களடா மானம் கெட்ட இணைப்பிறவிகளே ....

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201715:07:01 IST Report Abuse

தமிழ்வேல் காத்து குத்துறானுவோ. ஜெ இருக்கும்போதே பன்னீர் காலை வைக்கல....

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement