சட்டசபை குழுக்கள் நியமனம் எப்போது: ஐகோர்ட் 'நோட்டீஸ்' | சட்டசபை குழுக்கள் நியமனம் எப்போது: ஐகோர்ட் 'நோட்டீஸ்' Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சட்டசபை குழுக்கள் நியமனம் எப்போது:
ஐகோர்ட் 'நோட்டீஸ்'

சென்னை:சட்டசபை நிலை குழுக்களை அமைக்க கோரிய வழக்கில், சபை முன்னவர், சட்டசபை செயலர் பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்பும்படி, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

 சட்டசபை குழுக்கள் நியமனம் எப்போது: ஐகோர்ட் 'நோட்டீஸ்'

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தாக்கல் செய்த மனு:


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில், 89 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்ட சபை விதிகளின்படி, 12 குழுக்களை, சபாநாயகர் நியமிக்க வேண்டும். மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்கு குழு, பொதுத் துறை நிறுவனங்கள் .

குழு என, 12 குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களுக்கு என அதிகாரங்கள், செயல்பாடுகள், வரையறுக்கப்பட்டு உள்ளன.

சட்டசபைக்குள், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள், நிர்வாக ரீதியிலான செயல்பாடுகள், அரசியல மைப்பு சட்டப்படி நடக்கிறதா என்பதை, இந்த குழுக் கள் கண்காணிக்கும். புதிய சட்டசபை அமைந்து, 15 நாட்களுக்குள், குழுக்களை நியமிக்க வேண்டும். குழுக்கள் முழுமையாக செயல்பட துவங்கினால், ஆளுங்கட்சியின் தவறுகள் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என பயந்து, குழுக்களை அமைக்காமல் உள்ளனர். அதனால் தான், ஏழு மாதங்கள் ஆகியும், இன்னும் குழுக்கள் அமைக்கப்படவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், இந்த பிரச்னை குறித்து, சட்டசபையில் பேசினேன். அதற்குசபாநாயகர், விரைவில் அறிவிப்பு வெளி யாகும் என்றார்; ஆனால்,இதுவரை நியமிக்கப்பட வில்லை. எங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களுடன், கவர்னரையும் சந்தித்து மனு கொடுத்தேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழக சட்ட சபைக்கான, 12குழுக்களையும் உடனடியாக

Advertisement

அமைக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி பி.ராஜேந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். மனு வுக்கு பதில் அளிக்கும்படி, சட்டசபை செயலர், சபை முன்னவர் , தலைமை செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, ஜன., 19க்கு தள்ளி வைத்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
12-ஜன-201701:11:38 IST Report Abuse

ramasamy naickenஇந்த விஷயத்தில் நீதிபதிகளால் என்ன செய்யமுடியும். எத்தனையோ தடவை உத்தரவிட்டும் அண்ணா நூலகத்தை சீர் செய்ய முடியவில்லை. அதை போல தான் இதுவும். உத்தரவை சசிகலா காலில் போட்டு மிதிப்பார். நீதிபதிகள் என்ன செய்ய முடியும்?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement