தீபாவுக்கு குவியும் ஆதரவு:அதிர்ச்சியில் சசி வட்டாரம் | தீபாவுக்கு குவியும் ஆதரவு: அதிர்ச்சியில் சசி வட்டாரம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தீபாவுக்கு குவியும் ஆதரவு:
அதிர்ச்சியில் சசி வட்டாரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபாவுக்கு, 60 சதவீத, அ.தி.மு.க., தொண்டர்களும், 50 சதவீத பெண்களும், தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள தாக, உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

 தீபாவுக்கு குவியும் ஆதரவு:அதிர்ச்சியில் சசி வட்டாரம்

இதனால், கதி கலங்கியுள்ள, சசி வட்டாரம், மாவட்டம் தோறும் சமாதான முயற்சியை தீவிரப்படுத்த, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.சேலம், வேலுார், மதுரை, ஈரோடு, நெல்லை, துாத்துக்குடி உட்பட, தமிழகம் முழுவதும், தீபா பேரவை துவங்கி, உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. 'வாட்ஸ் ஆப்' வழியாகவும், ஆதரவு பெருகுகிறது.

அ.தி.மு.க.,வில் பதவியில் உள்ளவர்கள், தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதாக தெரிவித்தபோதும், ரகசியமாக குழி பறிக்கும் வேலையையும் செய்து வருவதாக கூறப்படு கிறது. பல இடங்களில், தீபா பேரவைக்கு தேவையான நிதி மற்றும் ஆதரவை, மறைமுக மாக வழங்குவதாக, தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து, சந்தேகம் எழுந்ததும், சசி வட்டாரத்திற்கு, நெருக்கமான தனியார் ஏஜென்சி ஒன்று, ஜன., 1 - 9 வரை, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ரகசியமாக ஆய்வு நடத்தியது. அதை மோப்பம் பிடித்த உளவு துறையினர், தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்து, தங்கள் தரப்பிலான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், தமிழகத்தின், 12 மாநகராட்சிகளில், வார்டு வாரியாக, இரண்டாம் கட்ட நிர்வாகிகள் இணைந்து, ஆங்காங்கே தீபா பேரவையை உருவாக்கி வருகின்றனர். அவர்களுக்கு, 60

சதவீத அ.தி.மு.க., தொண்டர்கள் ஆதரவும், 50 சதவீத பெண்கள் ஆதரவும் கிடைத்துள்ளது. அதே போல், கட்சி நிர்வாக ரீதியாக பிரிக்கப் பட்டுள்ள, 54 மாவட்டங்களில், பல மாவட்ட முதல் கட்ட தலைவர்கள் கூட, தீபாவுக்கு மறைமுக ஆதரவு அளிக்கின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா இறந்து, ஒரு மாதம் கூட முடியாத நிலையில், பொதுச்செயலர் பதவியை சசிகலா ஏற்றதை பட்டாசுகள்வெடித்தும், இனிப்பு வழங்கியதும், பெண்கள் மத்தியில், கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அதிர்ச்சி அடைந்த தலைமை, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட செயலர்கள் மட்டுமின்றி, மாஜி நிர்வாகிகளை அழைத்து, தீபா ஆதரவாளர் களை வளைத்துபோட உத்தரவிட்டுள்ளது.

பல மாவட்ட செயலர்கள், தீபா ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தோல்வியை சந்தித்துள்ள தால், மாவட்ட செயலர்களே அணி மாறுவது குறித்து, ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியை மீட்க...:

கரூர் மாவட்ட தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம், காமராஜபுரத்தில் நேற்று நடந்தது. 'எம்.ஜி.ஆரின், 100வது பிறந்த நாளை கொண்டாடு வது; அ.தி.மு.க.,வை, தீபா வழி நடத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ., சவுந்திரராஜன் பேசுகையில்,''ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சி யின் தலைமை தகுதி இல்லாதவர்களிடம் சென்று விட்டது. இதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. அதற்கு, ஜெயலலிதாவின் உண்மையான வாரிசான, தீபா தலைமையை தொண்டர்கள் ஏற்கவேண்டும்,'' என்றார்.

ஈரோட்டில், புதிய கட்சியை தொடங்கிய, ஜெயலலிதாவின் விசுவாசிகளை சந்திப்பதற்காக, தீபா நேற்று நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால், ஒரு நாள் முன்னதாக, நேற்று முன் தினம் இரவே, சந்தித்து,பத்திரமாக ஊருக்கு செல்ல அறிவுறுத்தி னார். தீபாவை நேரில் சந்தித்த, ஈரோட்டை சேர்ந்த பாரூக் என்பவர் கூறுகையில்,''ஒரு நாள்

Advertisement

முன்ன தாகவே, திடீரென அழைத்தார். உடனடியாக சென்று சந்தித்தோம். 15 நிமிடங் கள் கலந்துரையாடி னார். அரசியல் தாண்டி ஒவ்வொருவரின் குடும்பத்தை பற்றியும் விசாரித்தார்,'' என்றார்.

தீபா ஆதரவாளர்கள் விபரம் சசி குடும்பத்தினர் சேகரிப்பு

தீபாவிற்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகள் குறித்த விபரங்களை, சசிகலா குடும்பத்தினர் சேகரித்து வருகின்றனர்.ஜெ., அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும், தீபா பேரவை என்ற பெயரில், உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில், தீபா பேரவை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. தீபா ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, சசிகலா குடும்பத்தினரிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், தீபாவிற்கு ஆதரவாக செயல்படும் கட்சி நிர்வாகிகள் யார் என்ற விபரத்தை, சசிகலா குடும்பத்தினர் சேகரித்து வருகின்றனர்.

இதை தீபா ஆதரவாளர்கள், தங்களது, 'வாட்ஸ் ஆப்' குழுவில் பகிர்ந்துள்ளனர். அதில், 'விரை வில், சசி குடும்பத்தினர் மிரட்டலில் ஈடுபடுவர்; யாரும் பயப்பட வேண்டாம்' என்று கூறியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
12-ஜன-201721:24:24 IST Report Abuse

Sivagiriஎம்ஜியாருக்குப் பிறகு ஜானகிக்கு ஏற்பட்ட கதிதான் இவரது கதி . . .அப்பிடி இப்பிடின்னு பாவ்லா கட்டீட்டு . . ஏதோ முடிந்த அளவு கறந்து விட்டு . . ஆளை வுடுப்பான்னு ஓடுற கேசு . . . கட்சியையும் ஆட்சியையும் நாட்டையும் காப்பாத்துற மூஞ்சியா இது . . .

Rate this:
மீசநேசன் - chennai,இந்தியா
12-ஜன-201721:06:57 IST Report Abuse

மீசநேசன்உண்மையா சொன்னா சசியையாவது எல்லோருக்கும் தெரியும். எந்தமாதிரி தெரியும் என்பது வேற விஷயம். ஆனா நீ யாரும்மா? திடீர்ன்னு வந்து நிக்கற?

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஜன-201720:42:27 IST Report Abuse

K.Sugavanamநல்லா பொழுது போச்சு..

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
12-ஜன-201719:04:40 IST Report Abuse

Paranthamanதமிழகம் முழுவதும், தீபாவிற்கு ஆதரவாக செயல்படும் கட்சி நிர்வாகிகள் யார் என்ற விபரத்தை, சசிகலா குடும்பத்தினர் சேகரித்து வருகின்றனர். அப்பட்டியலை வைத்து என்ன செய்ய போகிறீர்கள். நாக்கு வழிக்கவா.

Rate this:
Kandaswamy - Coimbatore,இந்தியா
12-ஜன-201717:56:06 IST Report Abuse

Kandaswamyரொம்ப சரியா சொல்லனும்னா, புலிய பார்த்து பூனை சூடு போட்ட கதை, தீபா. வரிக்குதிரைய பார்த்து கோடு வேணும்ன்னு ஆசைப்பட்ட கழுதை,சசிகலா. எனக்கு தெரிந்து ரெண்டும் விளங்கப்போவதில்லை. தமிழ் மக்கள் ஏன் இன்னும் வாரிசுகளும்,ரத்த சம்பந்தங்களுமே தங்களை ஆளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்று புரியவில்லை. ஏன் தமிழர்களில் திறமைசாலிகள் குறைந்து விட்டனரா? அல்ல நமக்கேன் வேண்டாத வம்பு என்று ஒதுங்குகிறார்களா???. ஆகா மொத்தத்தில் தமிழன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா....

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
12-ஜன-201717:44:51 IST Report Abuse

ரத்தினம்அதிர்ச்சியோ என்ன மண்ணாங்கட்டியோ, ரெண்டு பேருமே வர்றது தமிழ்நாட்டுக்கு நல்லது இல்ல. ஒன்னு ஊழல் குற்றச்சாட்டு உள்ள பெண்மணி, இன்னொன்னு ஜெயலலிதாவின் வாரிசுன்னு தமிழக ஆட்சியையே கேக்குது. பின்புலம் டவுட்டாக வேற இருக்கு. வேற்று மதம் என்கிறதுக்காக இல்லை, இந்து மதம் வேண்டாம்னு வெறுத்து மதம் மாறியவர். ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆட்டு மந்தை கூட்டமாக ஆதரவு கொடுத்தது போல இந்த பெண்மணிக்கு ஆதரவு கொடுக்க கூடாது. வேற நல்ல தமிழ் அரசியல் வாதி கிடைக்கலையா? திரும்ப வாரிசு அரசியலா?

Rate this:
B. Dhayanandan - Chennai,இந்தியா
12-ஜன-201716:59:47 IST Report Abuse

B. DhayanandanIt is a known secret as to why the Dinamalar gives much importance to the niece of J ..Blood is thicker than water. Had deepa been born in some other e, would the Dinamalar come forward to support?

Rate this:
Nallavan - Nagai,இந்தியா
12-ஜன-201716:43:13 IST Report Abuse

Nallavanபத்து பேர் வந்து சால்வை போட்டாலே எம் எல் ஏ ஆகி விட்டதாக நினைத்துக்கொண்டு வாழும் மனிதர்கள் மத்தியில் தினம் ஆயிரக்கணாக்கான பேரை சந்தித்துக்கொண்டு தமிழ் ஆங்கில வூடகங்களுக்கு தெளிவாக பதட்டப்படாமல் பேட்டி கொடுத்துக் கொண்டு நிதான போக்கை அமைதியாகவும் ஆர்ப்பாட்டமில்லாமல் செயல் படும் வித்தியாசமான போக்கு தீபாவின் பிளஸ் பாயிண்ட் பிரச்சனையான நேரத்தில்தான் தலைவர்கள் உருவாகிறார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது

Rate this:
Madhav - Chennai,இந்தியா
12-ஜன-201713:59:40 IST Report Abuse

Madhav61 .78965476 % சதவீதம் என்பதே சரியான தகவல். இதுவும் கூட பின்ன எண்ணை எட்டு இலக்கங்களுக்குள் மட்டுபடுத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கு பிறகே. இந்த நம்பர் போடறது, பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி கதை விடுவது எல்லாம், பழசு. சரியான செய்திக்கு இலக்கணமும் இல்லை. அப்போல்லோவில் நடந்ததை உண்மையாக பத்திரிகைகள் வெளிப் படுத்தியிருந்தால் ஒரு உயிராவது தப்பி இருக்கும். இனிமேலாவது, பிரச்சினைகளையும், தீர்வை நோக்கி நகரும் வகையிலும் செய்திகளை வெளியிட முயற்சி செய்யுங்கள்.

Rate this:
paraman - Nellai,இந்தியா
12-ஜன-201713:45:22 IST Report Abuse

paramanதமிழ் நாட்டை பற்றி நல்ல அறிவும், முற்போக்கு சிந்தனையும், தமிழ்ப் பற்றும் கொண்டுள்ள திரு.சீமான் அவர்களுக்கு ஏன் ஒரு வாய்ப்பை கொடுக்க கூடாது ?

Rate this:
paraman - Nellai,இந்தியா
12-ஜன-201715:07:27 IST Report Abuse

paramanராஜேந்திர பூபதி சார் , சீமானை பற்றி ஏதாவது சொல்லுங்களேன் ? எந்த அனுபவமும் இல்லாத தீபாவை ஏன் முன் நிறுத்த வேண்டும் ?...

Rate this:
CHANDRU-PARIS - PARIS,பிரான்ஸ்
12-ஜன-201717:40:00 IST Report Abuse

CHANDRU-PARISசீமான் ஒரு சந்தர்ப்பவாதி என்று உங்களுக்கு ஏன் புரிய வில்லை ? ராமதாஸ் வைகோ திருமா.... இந்த வரிசையில் கடைசியா சேர்ந்தவர் தான் சீமான். தமிழ் மக்களுக்கு புரிந்த இந்த சாதாரண விஷயம் உங்களுக்கு காலம் விரைவில் புரிய வைக்கும்...

Rate this:
மேலும் 71 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement