ஜல்லிக்கட்டில் பின்வாங்க மாட்டோம்:முதல்வர் திட்டவட்டம் | ஜல்லிக்கட்டில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜல்லிக்கட்டில் பின்வாங்க மாட்டோம்:
முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டம்

சென்னை:'தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடைபெறுவதை, நிச்சயம் உறுதி செய்வோம்; எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டம்

அவரது அறிக்கை:


ஜல்லிக்கட்டு தொடர்பாக, பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக, 2014 மே, 7ல், உச்ச நீதிமன்றம், ஒட்டுமொத்த தடை விதித்தது.இதன் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த இயலாது. அதனால், மத்திய

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டு நடத்த, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியது.

அதை ஏற்று, 2016 ஜன., 7ல், காளைகள், காட்சிப் படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்து, மத்திய சுற்றுசூழல் துறை அறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து, அந்த அறிக்கைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள தீர்ப்பை,விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கி றேன். இந்த தீர்ப்பின் மூலம்,தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என, உறுதியுடன் நம்புகிறேன்.எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு தடைபட, அ.தி.மு.க., அரசு காரணம் என, பொய் குற்றசாட்டை கூறி உள்ளார். ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு முக்கிய காரணமே, தி.மு.க., அங்கம் வகித்த, ஐக்கிய

Advertisement

முற்போக்கு கூட்டணி அரசு, 2011ல் வெளியிட்ட அறிக்கை தான் என்பதை,தமிழக மக்கள் அறிவர்.

மேலும், ஸ்டாலின் பேசும்போது, '2014ல் உச்ச நீதிமன்றம் வகுத்த நடைமுறைகளுக்கு எதிராக, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது' என, ஒரு பொய்யை கூறி உள்ளார். இது, ஜல்லிக் கட்டுக்கு எதிரானவர் களோடு சேர்ந்து, தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்.

அரசியல் ஆதாயத்திற்காக, தமிழக நலனை விட்டுக் கொடுக்க, தி.மு.க., முற்பட்டுள்ளது. தமிழகத்தின் உரிமைகளை காத்து, அவற்றை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. காவிரி, முல்லை யாறு, என, எந்த பிரச்னையாக இருந்தாலும், தமிழர் நலனை காத்தவர் ஜெயலலிதா.

அவர் வழியில் செல்லும் நானும், தமிழக அரசும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறு வதை, நிச்சயம் உறுதி செய்வோம். இதில், எள்ளளவும் பின்வாங்க மாட்டோம். தமிழர் களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை கட்டிக் காப்போம்.இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
15-ஜன-201708:59:38 IST Report Abuse

மதுரை விருமாண்டிவேட்டியை மொதல்லே சரியா கட்டுங்கடா..பின் வாங்கமாட்டோம்ன்னா, எதுக்கு போலீசை விட்டு தொரத்துறே?

Rate this:
Meenu - Chennai,இந்தியா
14-ஜன-201718:54:51 IST Report Abuse

MeenuPETA ( People for the Ethical Treatment of Animals) அமைப்பு அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் தனி மனித அமெரிக்கரால் விலங்குக்கு சேவை செய்யும் நோக்கத்தில் 1980 ல் உருவாக்கப்பட்டது. இந்த வெப் சைட்டை கவனியுங்கள் ://www.peta.org/about-peta/learn-about-peta/ பிறகு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய ஆறு நாடுகளில் மட்டும் ஆபிஸ் திறந்து, அந்த நாட்டு கலாச்சார பாரம்பரிய முறைகளில் விலங்குகள் சம்மந்தமாக பொது மக்களுக்கு நீதிமன்றம் மூலம் தொந்தரவுகளை கொடுக்கிறது. இந்த ஆறு நாடுகளை தவிர வேரே எந்த நாடுகளுக்கும் இந்த அமைப்பை உள்ளே விடவில்லை. அமெரிக்காவில் விலங்குகளுக்கு என்று சட்ட திட்டங்களை இந்த அமைப்பு வகுத்து கொடுத்து அதே சட்டங்களை நம் இந்தியா தேசத்திலும் குறிப்பாக தமிழர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தான் சுப்ரீம் கோர்ட்க்கு சென்றுள்ளது. பாருங்கள் சட்டம் எங்கிருந்து எங்க வருதுன்னு. தொன்றுதொட்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்று வரும் நம் தமிழ் நாட்டில் காளையை நாம் எல்லோரும் இத்தனை வருடமா வதைக்கிறோமாம் அதுசரி உங்க நாட்டுல எத்தனை மாடுகளை, கோழிகளை, மீன்களை தினமும் கொன்று சாப்பிடுறீங்க. அதை நிறுத்தினீங்களா ? விலங்குகள் zoo ல் அடைத்து வச்சிருக்கீங்க. கார்-ல் அடிபட்டு இறக்கிறது. அதற்காக கரை ஓட்டகூடாதுன்னு சட்டம் கொண்டுவந்தீங்களா? எலி பெருகி பொருள்களையெல்லாம் நாசம் பண்ணினா அதை உங்க நாட்டுல எலியை கொள்ளாம இருக்கீங்களா? இல்ல அந்த எலிகளுக்கெல்லாம் ஆதரவு கொடுத்து வளர்க்கிறீங்களா? விலங்குகள் எண்ணிக்கை பெருகிவிட்டால் அதை கட்டுப்படுத்த, கொன்று, அதை இன்னொரு விலங்குக்கு உணவாக போடுறீங்க ? சிங்கம் இன்னொரு விலங்கை கொன்று தின்கிதே, அதை உங்க அமைப்பு தடுக்குதா? எங்க நாட்டுல ஒரு ஆபீஸ் வைத்துக்கொண்டு எம் தமிழ் மக்களின் தொன்று தொட்டு வரும் ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டால் மாடுகளை சித்ரவதை செய்யகிறோம் என்று சொல்லி எங்களுக்கு தொந்தரவு கொடுப்பதால் நீங்கள் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். எங்காவது ஒரு சம்பவம் நடந்தால் ஒட்டு மொத்த ஜல்லிக்கட்டையே நிறுத்தினால் ஞாயம் இல்லை. ரயில் விபத்து ஏற்பட்டால் ரயில் சேவை முழுவதையும் நிறுத்திவிடுறோமா ? விலங்குகள் மேல் என்னமோ இவங்களுக்கு மட்டும் தான் அன்பு பாசம் இருப்பதாகவும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இல்லாததாகவும் நீதிமன்றம் போறீங்க. இதெல்லாம் ஓவர். எங்க காளைகள் மீது நாங்கள் எவ்வளவு பாசம் வச்சிருக்கோமுன்னு எங்களுக்கு தான் தெரியும். காளையை சித்ரவதை செய்தால் அதன் சொந்தக்காரன் போலீசில் புகார் கொடுக்கட்டும். அதை விட்டு விட்டு ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் குற்றவாளியாக காண்பித்து ஜல்லிக்கட்டை தடை செய்வது நீதி அல்ல. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் மதிப்பளிக்க வேண்டும். ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டீர்கள். அந்நிய நாட்டுக்காரன் நம் கையை பிடித்து நம் விரலால் நம் கண்ணை குத்துகிறான். இதற்க்கு சுப்ரீம் கோர்ட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறான். நமக்கெல்லாம் தேசப்பற்று இருந்தால்????? இந்த அமைப்பு தொடுத்த வழக்கை இந்நேரம் தள்ளுபடி செய்திருக்கவேண்டும். இதை இவ்வளவு பெரிதாக்கிருக்க கூடாது. வாழ்க பாரதம் வளர்க தமிழ்.

Rate this:
வேந்தன் - சின்சினாட்டி,யூ.எஸ்.ஏ
12-ஜன-201723:34:17 IST Report Abuse

வேந்தன் வேண்டாமய்யா. இப்போதுள்ள உங்க வழிதான் நல்ல வழி.அதிலேயே பயணியுங்கள். மக்கள் ஆதரவு இருக்கும்.

Rate this:
Ramesh - New Delhi,இந்தியா
12-ஜன-201711:26:57 IST Report Abuse

Rameshகாவிரியில் தண்ணீர் இல்லை.. நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் வறுமையில் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.. இதைப்பற்றி கவலைப்படுபவர்கள் மிகவும் குறைவு.. ஆனால் ஜல்லிக்கட்டுதான் இப்போதைய முக்கிய விஷயம்.. ஜல்லிக்கட்டு இல்லையெனில் நம்மால் இருக்க முடியும்.. ஆனால் நீரும் உணவும் இன்றி உயிர் வாழமுடியுமா? மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டியது நீருக்கும் விவசாயத்திற்கும் தான்..ஜல்லிக்கட்டை எப்போது வேண்டுமானால் விளையாடலாம்..

Rate this:
kundalakesi - VANCOUVER,கனடா
12-ஜன-201716:29:31 IST Report Abuse

kundalakesiஜல்லிக் கட்டு நடத்தினால் நாட்டு காளைகள் பராமரிப்புக்கு ஊக்கம் இருக்கும். முதுகில் திமில் வைத்த நம்மூர் மாடுகளின் பால் A2 வகையைச் சேர்ந்தது, மருத்துவ குணம் எக்கச்சக்கம், சாணம் முதற்கொண்டு, கோமியம் ஈறாக . அவை வேண்டுமானால் பொலிகாளைகளை ஜல்லிக் கட்டிலே தான் தேர்வு செய்வர். இதுதான் பீட்டா அமைப்பின் நயவஞ்சக பார்வை . இந்திய நோயெதிர்ப்பு , சக்திமிகு மாட்டினத்தை நீக்கி ஜெர்சி வகைகளை கொணர்ந்து, செமனுக்கு அங்கே தொங்க வேண்டும். சூட்சுமத்தில் அடிப்பதில் நயவஞ்சக பிளான் கில்லாடித்தனமாய் போடப்பட்டிருக்கிறது. பணம் பல மட்டங்களில் விளையாடியிருக்கிறது. கூடங்குளம், நர்மதா அணை போல், தடுக்கும் கும்பல்கள் கீழமையிலிருக்கிறது....

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
12-ஜன-201711:20:30 IST Report Abuse

Tamil Selvanஜல்லிக்கட்டை நடத்துவது தான் எல்லா கட்சிகளின் குறிக்கோள் என்றால், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினால் போதும் ஒரே மணி நேரத்தில் தடையாணையை ரத்து செய்து விடுவார்கள்... சாலைமறியல் முதல் ரயில் மறியல் வரை... இது தெரிந்தும் திராவிட கட்சிகள் ஒன்று சேர்த்து போராட்டமாட்டார்கள்... ஏன் என்றால் இந்த திராவிட கட்சிகளுக்கு எப்படியும் இந்த ஜல்லிக்கட்டு நடந்து விடக்கூடாது என்பதில் நீதிமன்றத்தை விட, PETA அமைபை விட இவர்கள்தான் அதிக ஆர்வமாய் இருக்கிறர்கள்?...

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
12-ஜன-201710:46:47 IST Report Abuse

நக்கீரன்நீங்கள் என்ன உறுதி செய்வது? இந்த முறை நாங்களே என்ன எதிர்ப்பு வந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்துவது என்று முடிவு செய்து விட்டோம். நாங்கள் நடத்திய பிறகு உங்களால் தான் நடந்தது என்று பீத்திக்கொள்ளுங்கள்.

Rate this:
suresh - omaha,யூ.எஸ்.ஏ
12-ஜன-201710:02:12 IST Report Abuse

sureshஜல்லிக்கட்டு விவகாரத்துல பின் வாங்க மாட்டோம்னு சொல்றது சரி. சசியோட மல்லுக்கட்டு விவகாரத்திலயும் பின் வாங்காம இருந்தா சரி.

Rate this:
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
12-ஜன-201709:10:10 IST Report Abuse

ஜாம்பஜார் ஜக்குஆட்சி கலைக்கப்பட்டால் நிச்சயம் திமுக தான்.

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
12-ஜன-201711:22:02 IST Report Abuse

Tamil Selvanஆட்சி கலைக்கப்பட்டாலும் திருமங்கலம் பார்முலாவுக்கு பணம் இல்லை... அதனால் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், இனி கனவில்தான் பிடிக்க வேண்டும்.......

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஜன-201708:45:31 IST Report Abuse

Lion Drsekarகண்கள் கட்டப்பட்டும், கால்கள் கட்டப்பட்டும், கைகள் பின்புறம் கட்டப்பட்டும், வாய் பேசமுடியாத அளவிற்கு தேய்த்தல் போடப்பட்டு, மூளையை பயன்படுத்தவே முடியாத ஒரு நிலைக்கு அடித்து இழுத்து சென்ற நிலையிலும் சிரித்த முகத்துடன் , மன்மோகனை மிஞ்சும் அலசிற்கு நடமாடும் ஒரு ரோபோவை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி, நாளைக்கு முதல்வர் பதவி பிரமாணம், வெடியவிப் பார்த்தல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களையும் தாண்டி தனியாக பங்கு கொள்ளும் பொது விழா, காட்சியம் கொள்கை காலடிச் சுவற்றில் நடக்கும் இந்த ஜநாயகத்தில் தங்களை பாராட்டாமல் யாரும் இருக்க முடியாது, சத்தியமாக உங்களைப்போன்ற மனநிலை இந்தியாவில் எல்லோருக்கும் இருந்தால் சிறைச்சாலைகள், நீதிமன்றம் மற்றும் காவல் நிலையங்கள் இருக்காது, இன்றய இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம், உங்கள் இரத்தம் குரூப் என்ன> வந்தே மாதரம்

Rate this:
Balamurali - Salem,இந்தியா
12-ஜன-201708:38:48 IST Report Abuse

Balamuraliகர்நாடகா என்றைக்கும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதித்ததில்லை, அதை போல நாமும் ஒரு முறையாவது இருந்துதான் பார்ப்போமே...

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
12-ஜன-201711:24:38 IST Report Abuse

Tamil Selvanநீதி மன்றத்தில் இருப்பவர்கள் எல்லோரும் பெரும்பாலும் கான் கிராஸ் ஆட்சி காலத்தில் இருப்பவர்கள்... மேலும் கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பது கான் கிராஸ் அரசு ... அதனால் அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அலட்சியம் செய்தால், அதனால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை.. அதுபோல் தமிழக அரசும் அலட்சியமாக இருந்தால் அது ஆட்சிக்கே ஆபத்தாய் முடிந்து விடும்......

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement