தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா : குன்றத்தூரில் ஸ்டாலின் பங்கேற்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா : குன்றத்தூரில் ஸ்டாலின் பங்கேற்பு

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (6)
Advertisement
தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா : குன்றத்தூரில் ஸ்டாலின் பங்கேற்பு

குன்றத்துார்: குன்றத்துார் அருகே, தி.மு.க., சார்பில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழாவில், அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் கலந்துகொண்டார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், சமத்துவ பொங்கல் விழா, குன்றத்துார் அடுத்த கோவூரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர், தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், அவர் மனைவி, துர்கா, பேரக்குழந்தைகளுடன் பங்கேற்றார். நிகழ்ச்சியில், குத்துவிளக்கு ஏற்றி, அடுப்பு மூட்டி, பானையில் அரிசி இட்டு, பொங்கல் விழாவை துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து புலி ஆட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில், ஸ்டாலின் பேசியதாவது: தமிழர் பண்பாட்டுக்கு எந்த பிரச்னை வந்தாலும், அதை பார்த்துக்கொண்டு, தி.மு.க., சும்மா இருக்காது. மத்திய அரசு, கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் இல்லை என அறிவித்ததும், தி.மு.க., கண்டன அறிக்கை வெளியிட்டது. அதன் பிறகு தான் மற்ற கட்சிகள், தமிழ் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டன. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்படும். விவசாயிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது மன வருத்தம் அளிக்கிறது. மாநிலத்தில் ஆட்சி செய்யும் அரசு, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
அண்ணாதுரையை மறந்த தி.மு.க., : தி.மு.க., சார்பில் கோவூரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், அமைக்கப்பட்டிருந்த பேனர்களில், ஒன்றில் கூட அண்ணாதுரை, பெரியார் படங்கள் இல்லை. கோவூரில் உள்ள சுந்தரேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. கோவிலுக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து, பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படாததால், பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். விழா நடைபெறும் இடம் முழுவதும், கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி நடக்கும் போதே, கட்சியினர் அவற்றை பிடுங்கி, தின்னத் துவங்கி விட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayadev - CHENNAI,இந்தியா
12-ஜன-201721:16:37 IST Report Abuse
Jayadev அய்யே ஸ்டாலின் சாமியெல்லாம்கூம்புடா கூடாது தப்புப்பா பாபாவுக்கு கோபம் வந்துடும்
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
12-ஜன-201719:26:53 IST Report Abuse
Chandramoulli நமக்கு நாமமே மூலம் மக்கள் இவரை பொங்க வைத்து அனுப்பிய பிறகும் இன்னமும் புத்தி வரவில்லை . மறுபடியும் கிளம்பி விட்டார் . அஞ்சா நெஞ்சன் இருக்கும் வரை எங்களுக்கு கவலை இல்லை .மதுரை பக்கம் சங்கு தாண்டி உனக்கு.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-201715:09:58 IST Report Abuse
Swaminathan Nath ஜல்லி கட்டு வீர விளையாட்டு, மாற்று கருத்து இல்லை, நமது Mp கள் தமிழகத்திற்காக இது வரை என்ன முன்னேற்றம் கொண்டு வந்துள்ளனர், தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, தண்ணீர் இல்லை, எதிலும் கலப்படம், போலி மருந்துகள், கல்வி கட்டண கொள்ளை, சாராய வியாபாரிகள் இப்பொது கல்வி தந்தை, படித்த மாணவர்களுக்கு வேலை இல்லை, குடிக்க நல்ல தண்ணீர் இல்லை, நல்ல அரிசி இல்லை, எங்கு சென்றாலும் லஞ்சம், ரெட்டி, ராம மோகன் ராவ் , , வைகுண்ட ராஜன், granide கொள்ளை ,,,,செயல் படாத அரசாங்கம், மீனவர்கள் மீன் பிடிக்க முடியவில்லை, மணல் கொள்ளை வளரும் தீவிரவாதம். இன்னும் பல இருக்கிறது தமிழன் இதை எதிர்த்து எப்போது போராட போகிறான், ///சிந்திக்கவும் .
Rate this:
Share this comment
Cancel
dharmaram - visakapatnam,இந்தியா
12-ஜன-201709:10:14 IST Report Abuse
dharmaram ஆம் ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடக்க போகிறது. மானம் கெட்ட குடும்பம் தமிழ் நாட்டின் இன்றைய எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமே நீங்கள் தான் என்பதை நாங்கள் அறிவோம். என்ன வேஷங்கள் போட்டாலும் தத்தி ஸ்டாலின் நீ என்றுமே முதல்வர் பதவிக்கு தகுதியானவர் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
12-ஜன-201706:30:14 IST Report Abuse
Amirthalingam Sinniah போக்கிரி பொங்கல் யார் நடத்துவார்கள்?
Rate this:
Share this comment
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-201711:38:50 IST Report Abuse
முக்கண் மைந்தன் ..Ha, ha... Well said, bro......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை