"வேண்டும் ஜல்லிக்கட்டு' ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்...தடை... உடை! வீறு கொண்டு எழுந்த இளைஞர் பட்டாளம்| Dinamalar

தமிழ்நாடு

"வேண்டும் ஜல்லிக்கட்டு' ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்...தடை... உடை! வீறு கொண்டு எழுந்த இளைஞர் பட்டாளம்

Added : ஜன 12, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
"வேண்டும் ஜல்லிக்கட்டு' ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்...தடை... உடை! வீறு கொண்டு எழுந்த இளைஞர் பட்டாளம்


திருப்பூர்: ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம், திருப்பூரில், நேற்று நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும், நாட்டு மாடுகள், இயற்கை விவசாயத்துக்கு ஆதாரமாக உள்ள, நாட்டு மாடு இனங்களை காக்கும் வகையில், திருப்பூரிலுள்ள பின்னலாடை தொழில் அமைப்பினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், 50க்கும் மேற்பட்ட அமைப்பினர், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவல கம் முன் நேற்று நடந்தது.
காங்கயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி பேசியதாவது:ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை ஏற்காமல், ஒரு சிலர் உள்ள "பீட்டா' அமைப்பின் கோரிக்கையை ஏற்று, நீதிமன்றம் தடை விதித்துள் ளது. இதில், நமது பாரம்பரிய விவசாயம், நாட்டு மாடுகளை அழிக்கும் மிகப்பெரிய சதி உள்ளது.
நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்; நமது பண்பாடு மீது, கேலியும், கிண்டலும் என்ற நிலையே தொடர்கிறது. மத்திய அரசு, காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து, மாடுகளை நீக்கினால் போதும். மத்திய அரசு மட்டுமே இதற்கான தீர்வு காண முடியும். அதை நோக்கி, தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
ஏற்றுமதியாளர் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் பேசுகையில், ""இன்று ஏற்றுமதியாளர் களாக வளர்ந்திருந்தாலும், அனைவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களே. விவசாய நிலங்கள், நாட்டு மாடுகள் உள்ளன. ஜல்லிக்கட்டு விளையாட்டை தொடர, நாட்டு மாடுகளை காப்பாற்ற தொழில் துறை உறு துணையாக இருக்கும்,'' என்றார்.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பேசுகையில், "ஏறுதழுவு தல் என்பது, காளைகளை அரவணைத்து செல்வதே; அந்த வகையில், நாம் விளையாட்டு போட்டிகளை நடத்தலாம். பாரம்பரிய பூஜையாக கொண் டாடலாம். இதற்கான, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண் டும். திருப்பூர் தொழில் துறையினர், அனைத்து வகைகளிலும், ஜல்லிக்கட்டு மீட்புக்கு உதவி செய்வர்,'' என்றார்.
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேசுகையில், ""மத் திய அரசு தடையை நீக்க வேண்டும்; இது, எங்கள் காளை, எங்கள் காளையர்கள் விளையாடும் விழா; தடை விதித்தாலும், நடத்தியே தீருவோம். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
வெற்றி அமைப்பு தலைவர் சிவராம், தொழில் பாதுகாப்பு குழு அண்ணாதுரை, விவித் பேஷன்ஸ் வாசுநாதன், "டீமா' சங்க தலைவர் முத்துரத்தினம், "டெக்பா' சங்க தலைவர் ஸ்ரீகாந்த், தொழில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, கொங்குநாடு விவசாயிகள் கட்சி தலைவர் ராஜாமணி, இந்து முன்னணி மாநில பொது செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
"தினமலர்' நாளிதழுக்கு பாராட்டுஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும், "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக "தினமலர்' நாளிதழில் அதிகளவு செய்தி வருகிறது. இன்று (நேற்று) கூட ஒரு பக்க செய்தி வழங்கியுள்ளனர்.இளைஞர்கள் ஆத ரவு பெருகி வருகிறது. போராட்டம் எழுச்சிமிக்கதாக மாறுவதற்கு, "தினமலர்' முக்கிய காரணமாக உள்ளது,' என பாராட்டினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesh - coimbatore,இந்தியா
12-ஜன-201718:47:07 IST Report Abuse
venkatesh மக்கள் சக்தி முன் எந்த நீதி மன்றமும் நிற்கமுடியாது இவர்கள் ஜவ்வு மாதிரி ஆண்டுக்கணக்கில் விசாரிப்பார்கள் அப்புறம் தீர்ப்பு எழுத ஒரு மாமாங்கம் என்ன கொடுமையப்ப இந்த நாட்ல கேக்க நாதி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
12-ஜன-201715:27:07 IST Report Abuse
thiru உச்சநீதி மன்ற தடையை மீறி இம்முறை ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்...தமிழக அரசு ஆதரிக்கும் போது யாரும் தடுக்க வாய்ப்பில்லை... எனவே ஜல்லிக்கட்டு இம்முறை நிச்சயம் நடக்கும்...
Rate this:
Share this comment
Cancel
bell - coimbatore,இந்தியா
12-ஜன-201709:23:54 IST Report Abuse
bell உண்மை தான், தினமலருக்கு என் பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை