புது மணப்பெண் விபத்தில் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புது மணப்பெண் விபத்தில் பலி

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


திருப்பூர்: திருப்பூரில், ஆருத்ரா தரிசன விழாவுக்கு கணவனுடன் பைக்கில் சென்ற புது மணப்பெண், விபத்தில் பலியானார்.திருப்பூர், புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 31; டெய்லர். இவருக்கும், கேரளாவை சேர்ந்த வெண்ணிலா, 19 என்பவருக்கும், கடந்த ஆண்டு டிச., மாதம் திருமணம் நடந்தது. நேற்று, நல்லூர் ஈஸ்வரன் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவுக்கு, பைக்கில் சென்றனர். தரிசனம் முடித்து விட்டு, திருப்பூர் ரூரல் ஸ்டேஷன் ரிங்ரோட்டில் வந்த போது, லாரியை, சதீஷ்குமார் முந்த முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும், லாரியில் சிக்கினார். இந்த விபத்தில், நிகழ்விடத்திலேயே வெண்ணிலா இறந்தார். படுகாயங்களுடன், திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில், சதீஷ்குமார் சிகிச்சை பெறுகிறார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமான ஒரே மாதத்தில், புதுப்பெண் பலியானது, புதுக்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை