சிவகாசியில் கேரள மாவோயிஸ்ட்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகாசியில் கேரள மாவோயிஸ்ட்கள்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகாசி: போலி முகவரி சான்று கொடுத்து சிம் கார்டு வாங்கிய வழக்கில் கேரள மாவோயிஸ்ட்கள் இருவர் சிவகாசி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.கடந்த 2014 ல் சிவகாசியை சேர்ந்த கணேஷ் என்பவரின் ரேஷன் கார்டு நகல் மற்றும் போட்டோவை பயன்படுத்தி இரண்டு சிம் கார்டுகள் வாங்கியதாக கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வளப்பாடு பகுதியை சேர்ந்த சைனி, 42, பத்தனம்திட்டா மாவட்டம் குழிபரம்பில் பகுதி அனுப்மேத்யூ ஜார்ஜ், 32 , என, இரு மாவோயிஸ்ட்கள் கைதாகினர்.ஜாமின் மனு: கோவை மத்திய சிறையில் உள்ள இவர்கள், இதன் வழக்கு தொடர்பாக நேற்று மதியம் 1:00 மணிக்கு சிவகாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜெ.எம்., 1 ல் ஆஜர்படுத்தப்பட்டனர். மாவோயிஸ்ட்கள் தரப்பில் ஜாமின் மனு செய்தனர். “ஸ்ரீவி.,யில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இவ்வழக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ,விசாரணைக்கு பின் நாளை (இன்று) தெரிவிக்கப்படும்” என,கூறிய நீதிபதி சந்தானக்குமார் , மேலும் இவர்களை ஜன., 25 ல் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை