கூட்டுறவு சங்கங்களில் ரூ. 390 கோடி இழப்பு : பணியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களில் ரூ. 390 கோடி இழப்பு : பணியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Added : ஜன 12, 2017
Advertisement

மதுரை: 'தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூ பெயரை தவறாக பயன்படுத்தி, உயர் அலுவலர்களின் வாய்மொழி உத்தரவால் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் 390 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது,' என, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.மதுரையில் இச்சங்க மாநில பொது செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட தலைவர் ஆசிரியத்தேவன் கூறியதாவது: தமிழகத்தில் 4500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. 50 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.நான்காண்டுகளாக பொது விநியோகத் திட்ட மானியம் முறையாக வழங்கப்படவில்லை. 2006ல் அரசால் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, சங்கங்களுக்கு வரவு வைக்கப்படவில்லை. பயிர் கடனுக்காக ஏழு சதவீத வட்டி சலுகை சங்கங்களுக்கு ஆண்டு கணக்கில் வழங்கப்படவில்லை. இதனால் பல சங்கங்கள் சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது.கூட்டுறவு அமைச்சர் ராஜூ பெயரை தவறாக பயன்படுத்தி, உயர் அலுவலர்கள் வாய்மொழி உத்தரவின்படி, கூட்டுறவு கடன் சங்கங்களில் பல முறைகேடுகள் நடக்கின்றன.சங்க பொது சேவை மைய பயன்பாட்டிற்கு மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை மூலம் 'பயோ மெட்ரிக் பிங்கர் பிரின்ட்' கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடக்க விலை 3400 ரூபாய் என அட்டை பெட்டியில் உள்ளது. ஆனால் 6000 ரூபாய் வரை விலை நிர்ணயித்து காசோலை பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. இக்கருவி வெளிச்சந்தையில் 2500 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த வகையில் சங்கங்களுக்கு 1.5 கோடி ரூபாய் வரை நிதி இழப்பு ஏற்பட்டது.தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் நவீன முகப்புடன் இருந்த போதிலும், தேவையற்ற சூழ்நிலையில் நவீனமயமாக்குதல் பெயரில் சங்க நிதியை மோசடி செய்யும் நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதனால் 15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.புதிய கிட்டங்கி மற்றும் புதிய அலுவலகக் கட்டடம் கட்டுதல் மதிப்பீட்டில் 15 சதவீதம் வரை அமைச்சர் பெயரை பயன்படுத்தி மாவட்ட அதிகாரிகளால் கட்டாய வசூல் 12 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில் காலி சாக்குகளை நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 18 ரூபாய்க்கு எடுக்க வாய்ப்புள்ள நிலையில், மாநில அளவில் துணை பதிவாளர் வாயிலாக ஒப்பந்த குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 8 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒவ்வொரு சங்கமும், தனித்தனி நிர்வாகத்தை கொண்டு தனித்துவமாக செயல்படும் நிலையில், தனி நபர் ஆதாயம் அடையும் நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும். தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவது என, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை