முழுமையான கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முழுமையான கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு கோரிக்கை

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement


மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியின் வறட்சி குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், அதிகாரிகளுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார். பருவ மழை பொய்த்து போனதால், வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதோடு, பாப்பான்குளம் கிராம பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டமும் நடத்தினர். இதனை தொடர்ந்து மடத்துக்குளம் பகுதியில் வறட்சி பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, மற்றும் வேளாண்மைத்துறையினர் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'கால்நடைகளுக்கே நீர் இல்லை. பயிர்கள் அனைத்தும் காய்ந்து விட்டன. அமராவதி ஆலைக்கு ஒப்பந்தம் செய்த கரும்பில், 75 சதவீதம் காய்ந்து விட்டதால், இந்த ஆண்டு கரும்பு அரவை செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யும் அளவில் வறட்சியின் தாக்கம் உள்ளது. இதனால், மிகவும் அவதிப்படுகிறோம்' என்றனர். மடத்துக்குளம் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், 'வறட்சி குறித்து அரசுதுறையினர் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இந்த கணக்கெடுப்பு வளையத்துக்குள் அனைத்து விளைநிலங்கள், சாகுபடி செய்த பயிர்கள், காய்ந்து போன பயிரின் பரப்பளவு ஆகிய தகவல்கள் முழுமையாக பதிவு செய்யப்பட வேண்டும்.

விளைநிலங்களுக்கு வரும் அதிகாரிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்கி, தேவையான சான்றிதழ்கள் மற்றும் வறட்சிபகுதிகளை காட்ட வேண்டும்' என கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை