மலைவாழ் மக்களுடன் இணைந்து பொங்கல் விழா நட்பு வளர்க்கும் போலீசார் | Dinamalar

மலைவாழ் மக்களுடன் இணைந்து பொங்கல் விழா நட்பு வளர்க்கும் போலீசார்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

உடுமலை: மேற்குத் தொடர்ச்சி மலை செட்டில்மென்ட் பகுதிகளில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாவோயிஸ்ட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே மாவோயிஸ்ட்கள் கைது, ஆதரவாளர்கள் போராட்டம், கோர்ட்டில் ஆஜர் என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. இந்நிலையில், கேரளாவில் இருந்து, மேற்கு தொடர்ச்சி மலை வழியாக, தமிழகத்தினுள் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி இருப்பதாகவும், அடிப்படை வசதிகளுக்காக போராடும் மலைவாழ் மக்களை, மாவோயிஸ்ட்கள் பக்கம் ஈர்க்க முயற்சிப்பதாகவும் 'க்யூ' பிரிவு போலீசார், அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தும் வருகின்றனர். இதன் காரணமாக, தமிழக கேரள எல்லை வனப்பகுதியில், அடிப்படை வசதிகளற்ற கிராமங்களில், மலைவாழ் மக்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தித்தரவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு முடிவு செய்தது; இதற்காக, மாவோயிஸ்ட் கண்காணிப்பு மற்றும் மலைவாழ் மக்கள் சேவை பணிகளுக்காக, உடுமலை அடுத்த செட்டில்மென்ட் பகுதிகளில், 10 பேர் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் கூடுதல் போலீஸ் படை மற்றும் ஆயுதங்களை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல், தனிப்படை போலீசார் மலைவாழ் மக்களிடம் அடிப்படை தேவைகள் குறித்தும், அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரித்து அறிக்கை தயாரிக்கின்றனர். அதையடுத்து, கோடந்துார், ஈசல்திட்டு, சாலையூத்து, பூச்சகோட்டான்பாறை, திருமூர்த்திலை, கருமலை உள்ளிட்ட, 14 செட்டில்மென்ட் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களுக்கு பொதுவினியோக திட்ட பொருட்கள், அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொது மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, அரசு பணி மற்றும் வாகனம் ஓட்டுனர் பயிற்சி, குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு பயிற்சிக்கான உபகரணங்கள் என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, மலைவாழ்மக்கள் குடியிருப்புகளை சீரமைத்தல், பஸ் வசதி, சோலார் தெருவிளக்கு, ரோடு, சாக்கடை, ரேஷன் கார்டு, ஜாதிச்சான்று, ஆதார் கார்டு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்.பி., உமா தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறையினருடன் இணைந்து கோடந்துார் செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள், பொங்கல் விழா கொண்டாடினர். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது மட்டுமின்றி குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கு இலசவ நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டன. அப்போது, விவசாயத் தொழில் மேம்பட தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரவும், மாதந்தோறும் பொதுமருத்துவ முகாம் நடத்தவும் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். எஸ்.பி., உமா பேசுகையில், '' உடுமலை அடுத்த தமிழக-- கேரளா எல்லையோர செட்டில்மென்ட் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தி, அரசின் திட்டங்கள் அவர்களை முழுமையாக சென்றடைய வழிவகை செய்யப்படும்,'' என்றார். விழாவில், திருப்பூர் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, டி.எஸ்.பி., விவேகானந்தன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.