அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

உடுமலை: திருமூர்த்தி அணையில், போதுமான நீர் இருப்பு உள்ள நிலையில், மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இழுபறியாக இருப்பதால், இரு மாவட்ட விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். அரசாணைக்காக, பொதுப்பணித்துறையினர் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், இரண்டாம் மண்டல பாசனத்தில், இரு சுற்றுகள் மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டு, பாசனம் நிறைவு பெற்றது. தொடர்ந்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. தொடர்ந்து, தண்ணீர் இருப்பு செய்யப்படுவதால், திருமூர்த்தி அணை நீர் மட்டம், 60 அடியில், 56.07 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அளிக்கும் கருத்துரு அடிப்படையிலேயே அரசு தண்ணீர் திறப்பதற்கான அரசாணை வெளியிடும். இந்த மண்டலத்தில், திருப்பூர், கோவை மாவட்டத்துக்குட்பட்ட, 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தீவிரமடையும் கோரிக்கைமூன்றாம் மண்டலத்தில் பாசன வசதி பெறும் ஆயக்கட்டு பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. மக்காச்சோளம் உட்பட பயிர் சாகுபடி மேற்கொள்ள வழியில்லாத நிலையில், நீண்ட கால பயிரான தென்னையை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். திருமூர்த்தி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரே தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், உடனே தண்ணீர் திறக்கவும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.விவசாயிகள் கூறுகையில், 'பருவமழை இல்லாமல், காய்ந்து வரும் மரங்களை காப்பாற்ற, தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகிறோம். மூன்றாம் மண்டல பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறப்பதுடன், இரண்டு சுற்று தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, உள்ளூர் நீராதாரங்களான குளங்களுக்கும், பி.ஏ.பி., தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் திருப்பூர், கோவை மாவட்ட நிர்வாகங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பல்வேறு வகையில், பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம், முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொதுப்பணித்துறையினர் கூறியதாவது: பாசனத்துக்காக திருமூர்த்தி அணையில் தண்ணீர் இருப்பு செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பதற்கான அரசாணைக்காக, கருத்துரு அரசுக்கு அனுப்பபட்டுள்ளது. இதன்படி, சுற்றுகள் கணக்கிடாமல், மொத்தமாக, 1,200 மில்லியன் கன அடி, பாசனத்துக்கு வழங்க கருத்துருவில் வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான மற்றும் கிளை வாய்க்கால்கள் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதால், தண்ணீர் திறப்பு தாமதமாகி வருகிறது. வரும் 23ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, பொதுப்பணித் துறையினர் கூறினர். தேவை கண்காணிப்புவறட்சி காலத்தில், வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவதால், திருட்டு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. கடந்த இரண்டாம் மண்டல பாசனத்தின் போதே, பொதுப்பணித்துறையினர், பிற துறையினர் ஒத்துழைப்பு இல்லாததால், தண்ணீர் திருட்டை தடுக்க திணறினர். இம்முறை, முன்னதாகவே கண்காணிப்பு குழு அமைத்து, ரோந்து மேற்கொள்ள பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை