நால் ரோட்டில் தானியங்கி சிக்னல் தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நால் ரோட்டில் தானியங்கி சிக்னல் தேவை

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உடுமலை: குடிமங்கலம் நால்ரோட்டில், விபத்துகளை தவிர்க்க தானியங்கி சிக்னல் அமைத்து, நிரந்தர போலீஸ் செக்போஸ்ட் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி-தாராபுரம் மற்றும் உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் நால்ரோடு குடிமங்கலத்தில் உள்ளது. இப்பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை சந்திப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 'சென்டர் மீடியன்' மற்றும் வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்நிலையில், நால்ரோடு பகுதியில், வாகனங்கள் தாறுமாறாக ஒன்றையொன்று முந்திச்செல்ல முயற்சிக்கின்றன. இதனால், போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டு விபத்துகள் அதிகரிக்கின்றன. காலை மற்றும் மாலை நேரங்களிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை நால்ரோடு பகுதியில் அமைந்துள்ளதால், மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர்.இரு மாநில நெடுஞ்சாலைகளிலும் கனரக வாகனப்போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாகனங்களை தணிக்கை செய்யவும், கண்காணிக்கவும், நால்ரோடு பகுதியில், குடிமங்கலம் போலீஸ் சார்பில் செக்போஸ்ட் செயல்பட்டு வந்தது. குறுகிய நாட்களில் செக்போஸ்ட் செயல்பாடு இல்லாமல் மூடப்பட்டது. இதனால், அங்கு, போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதுடன், கடத்தல் வாகனங்களும் எளிதாக கடந்து செல்கின்றன. இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, குடிமங்கலம் நால்ரோடு பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும். அங்கு நிரந்தரமாக போலீஸ் செக்போஸ்ட் அமைத்து, போலீசாரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை