லாலுவுக்கு 'பென்ஷன்': பீஹாரில் வினோதம் | லாலுவுக்கு 'பென்ஷன்': பீஹாரில் வினோதம்| Dinamalar

லாலுவுக்கு 'பென்ஷன்': பீஹாரில் வினோதம்

Added : ஜன 12, 2017 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
லாலுவுக்கு 'பென்ஷன்': பீஹாரில் வினோதம்

பாட்னா: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவிற்கு ‛பென்ஷன்' வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.


போராட்டம்:


பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மறைந்த தலைவர், ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில், 1974ல், பீஹார் வளர்ச்சியை முன்னிறுத்தி, சம்பூர்ண கிராந்தி போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர்.


பென்ஷன் திட்டம்:

மாநில வளர்ச்சிக்காக சிறை சென்றோரை கவுரவப்படுத்தும் வகையில், அவர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டத்தை, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு அறிமுகம் செய்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற, லாலு பிரசாத் யாதவ், மாநில அரசு திட்டத்தின் கீழ், மாதம், 10 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வேண்டி விண்ணப்பித்தார். இதற்கு, மாநில அரசு ஒப்புதலும் வழங்கியுள்ளது. இதே போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற முதல்வர் நிதிஷ், தனக்கு பென்ஷன் வேண்டாம் என, தெரிவித்துள்ளார்.


சலசலப்பு:

பீஹார் முதல்வராக இருந்தபோது, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், ஐந்து ஆண்டு சிறை தண்டனை பெற்ற, லாலுவுக்கு, மாநில அரசின் சார்பில் பென்ஷன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
12-ஜன-201718:04:42 IST Report Abuse
karunchilai எம் எல் ஏ ஓய்வு ஊதியம், எம் பி ஓய்வு ஊதியம், மூத்தக் குடிமகன் ஓய்வு ஊதியம், தற்போது இது. இவரது ஓய்வு ஊதியங்கள் மட்டுமே மாதம் லக்ஷத்திற்கும் மேல் தேறும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜன-201716:38:25 IST Report Abuse
Endrum Indian ஓய்வூதியம் என்பது சம்பளம் வாங்கியவர்களுக்கு பொருந்தும் பல ஆயிரம் கோடி ஊழல் செய்தவர்களுக்கு அல்ல. இன்றும் அறிவற்ற நிலையில் தான் பிஹார் அரசு செயல்ப்டுகின்றது என்பதற்கு இது ஒரு சரியான முன்னுதாரணம். எல்லோருக்கும் கொடுத்தார்கள் இவருக்கும் அப்படியே என்பது வெறும் சப்பைக்கட்டு சமாதானம்.
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
12-ஜன-201714:18:23 IST Report Abuse
Chandramoulli ரெண்டாவது கருணாநிதி . ஊழலில் முதுகலை பட்டம் பெற்றவர் . இவரின் ஆசான் கருணாநிதி . விஞ்ஞான ஊழலில் டாக்டர் பட்டம் பெற்றவர் .
Rate this:
Share this comment
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) லாலுபிரசாத் யாதவ் அவர்கள் இல்லாத மக்களுக்கு அல்லது கஷ்டப்படும் குழந்தைகளுக்கு படிப்பு செலவுகளுக்கு இந்த பென்ஷன் தொகையை கொடுக்கலாம்... இல்லை என்றால் வேண்டாம் என்று சொல்லி தன்னை கவுரவப்படுத்திக் கொள்ளலாம்...
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
12-ஜன-201712:06:18 IST Report Abuse
Durai Ramamurthy வெறும் பத்தாயிரம் ரூபாய்க்காக ஒரு கட்சியின் தேசிய தலைவர் இவ்வளவு அற்பத்தனமான மனிதனாக நடந்துகொள்வது இந்தியாவின் சரித்திரத்தில் ஒரு சாபக்கேடு.
Rate this:
Share this comment
Cancel
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
12-ஜன-201711:14:51 IST Report Abuse
Krishna Sreenivasan இவரா ஏழை இவருக்கும் வருதே பென்சன் இவர் மனைவிக்கும் உண்டு பென்ஸன் பிள்ளைலேயும் சிலதுகள் MLA அண்ட் MP கேக்கணுமோ அடுத்த வேளை சோத்துக்கே லாட்டரி அடிக்குறாங்கோ . ஒரு பொன்னு மருத்துவர்னு கேள்வி
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
12-ஜன-201709:27:14 IST Report Abuse
Jaya Prakash கேவலமான அரசியல் என்றாலும்.... இது சட்டப்படி தவறில்லை... (அதுதான் இந்தியா)...... அவருக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பெயில் வழங்கி உள்ளது..... so சட்டப்படி இதை எதிர்க்கமுடியாது...... ஆனால் கேவலமான செயல்தான்..... கோடி கணக்கில் சொத்து சேர்த்தவன்.... வெறும் பத்தாயிரம் கேட்பது வினோதமே..... ஆனால் அரசியல்வாதியின் காரியத்தில் எல்லாம் ஒரு காரணம் இருக்கும்...... ஒரு தந்திரம் இருக்கும் .......பார்க்கலாம்... போக போக தெரியும்..,,,
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
12-ஜன-201708:56:56 IST Report Abuse
karunchilai பாவம் பரம ஏழை.....
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
12-ஜன-201708:56:29 IST Report Abuse
karunchilai விடமாட்டார் சுரண்டலை.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஜன-201708:34:51 IST Report Abuse
Lion Drsekar இந்த லொள்ளுக்கு எம் எல் எ பென்சன், முதல்வர் பென்சன், மத்திய மந்திரி பென்சன், பாராளுமன்ற பென்சன், சிறைக்கு சென்றதில் பென்சன் , இதே போன்று இவரது மனைவி, மகன்,,, வேறு என்ன வேண்டும், பொது மக்களின் வரிப்பணம் இப்படி பாழாவதை யாராலும் தடுக்க முடியாது, இதைப்போல் இந்த நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு குடும்பம், மத்தியில் பல குடும்பம், சூப்பர் ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை