போதையில் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிணத்துக்கடவு : நெகமத்தில் இருந்து அரசு டவுன் பஸ் பொள்ளாச்சி நோக்கிச்சென்றது. அதில், தொப்பம்பட்டியை சேர்ந்த பெயிண்டர்கள் சுரேஷ்குமார், 33, மாசாணி, 37 ஆகியோர் ஏறி தொப்பம்பட்டிக்கு சென்றனர். அப்போது, கோட்டூர், பொங்காளியூரை சேர்ந்த அரசு டவுன் பஸ் கண்டக்டர் மாசிலாமணி, 43, இருவரிடம் டிக்கட் கேட்டுள்ளார். குடிபோதையில் இருந்த இருவரும் அரசு பஸ்சில் டிக்கட் கேட்கிறாயா? என்று கூறி, தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இருவரும் சேர்ந்து கண்டக்டரை அடித்தனர். அதில், காயமடைந்த மாசிலாமணி சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து நெகமம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து, சுரேஷ்குமார், மாசாணி இருவரையும் கைது செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை