கிராம மக்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராம மக்கள் கோரிக்கை

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி: 'குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்,' என வலியுறுத்தி தொண்டாமுத்துார் கிராம மக்கள், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:தொண்டாமுத்துார் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. ஊரில் ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறு பழுதடைந்துள்ளது. அதைப்பற்றி பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை; ஆழ்துளை கிணறும் போதிய நிதி ஆதாரமில்லை என கூறி சரி செய்யாமல் உள்ளனர். அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்ட நீரும் முறையாக கிடைக்கவில்லை. எனவே, தண்ணீர் பிரச்னை அதிகமாக உள்ளதால், ஆழ்துளை கிணற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு தண்ணீர் முறையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை