பி.எப்., தொகையை செலுத்த கெடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பி.எப்., தொகையை செலுத்த கெடு

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வால்பாறை: தொழிலாளர் நல நிதியை (பி.எப்) வரும், 31 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து வால்பாறை தோட்ட நிறுவனங்களின் ஆய்வாளர் முகம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு நல நிதிச்சட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் பணிபுரியும் கடைகள், ஓட்டல்கள் பணிபுரியும் தொழிலாளியின் டிசம்பர் மாத சம்பளத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்து, அந்த தொகையுடன் தொழிலாளிக்கு வேலை வழங்கிய நிறுவனத்தின் பங்காக, 20 சதவீதம் சேர்த்துமொத்தம், 30 சதவீதம் தொகையை தொழிலாளர் நல நிதிக்கு பங்குத்தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். இத்தொகையை இந்த மாதம், 31ம் தேதிக்குள் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், டி.எம்.எஸ்.,வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 6 என்ற முகவரிக்கு வங்கி வரைவு காசோலை மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை