உருவாரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உருவாரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரம்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி : கோதவாடி ஆல்கொண்டமால் கோவிலில், நேர்த்திக்கடன் செய்ய எருது, ஆடு உருவாரத்துக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.பொள்ளாச்சி தொகுதியில் உள்ளது கோதவாடி கிராமம். கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, இங்குள்ள ஆல்கொண்டமால் கோவிலுக்கு சுற்றுப்பகுதி விவசாயிகள் சென்று வழிபட்டு வருகின்றனர். தாங்கள் வளர்க்கும் கால் நடைகள் எவ்வித நோயினாலும் பாதிக்கக்கூடாது. கால்நடைகள் பெருக வேண்டும். விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து வணங்குகின்றனர்.இதற்கு கைமாறாக, மண்ணால் செய்யப்பட்ட ஆடு,மாடு, எருது, நாய் உள்ளிட்ட உருவாரங்களை செய்து, சமர்ப்பிக்கின்றனர். இந்த உருவாரங்கள் தயாரிப்பை, கோதவாடியைச் சேர்ந்த மண்பாண்ட தயாரிப்பு தொழிலாளி சென்னியப்பன் ஆண்டு தோறும் தீவிரமாக தயாரித்து விவசாயிகளுக்கும், அருள் வேண்டி வரும் பொதுமக்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். அரசு அனுமதி சீட்டுடன், கோதவாடி குளத்தில் மண்ணெடுத்து, பானைகள் தயாரித்து வரும் இவர், பொதுமக்களின் வேண்டுகோளின்படி,பல்வேறு உருவாரங்களை செய்து கொடுக்கிறார். இதற்காக குறிப்பிட்ட தொகையையும் வசூலிக்கிறார். இப்பணியின் இறுதிக்கட்டமாக, வேக வைத்த உருவாரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி வேகமெடுத்துள்ளது. நடப்பு ஆண்டின் ஆல்கொண்டமால் கோவில் திருநாள் வரும் தை 3ம்தேதி நடக்கிறது. இதற்காக கோவில் சுற்றுச்சுவர் வெள்ளையடிக்கப்பட்டு, சுற்றுப்பகுதி புதர்கள் அகற்றப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை