கிராமத்தை தேடி... கூடுதல் பஸ் வசதிக்கு ஏங்கும் ரங்கம்புதூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்தை தேடி... கூடுதல் பஸ் வசதிக்கு ஏங்கும் ரங்கம்புதூர்

Added : ஜன 12, 2017
Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட பெரியநெகமம் பேரூராட்சிக்குட்பட்ட சிறு கிராமம் ரங்கம்புதுார். தற்போது இக்கிராமத்துடன் சின்னேரிபாளையத்துக்கு எதிரில் உள்ள எம்.ஜி.ஆர்., நகரும் இணைந்துள்ளது.
ரங்கம்புதுாரில் இருந்து இடம் தேடிச்சென்றவர்கள், தற்போதும் இக்கிராம முகவரியில் உள்ள ரேஷன்கார்டுகளை தான் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல, எம்.ஜி.ஆர்.,காலனியைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள், குறுக்குவழியில் வந்து இங்கு தான் படிக்கின்றனர்.இவ்விரு கிராமங்களுக்கு இடையே பஸ்வசதி இல்லாததால், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் மூலம் காலை, மாலை நேரங்களில் கார்வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கிராம விவசாயிகளுக்காக பி.ஏ.பி., வாய்க்கால் வசதி உள்ளது. ஆனால், வாய்க்காலின் இருபக்கமும் உள்ள, பல ஏக்கர் தோப்பு அழிந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் வறட்சி நிவாரணக்குழு வந்து பார்வையிட்டுச்சென்றது.
கிராமத்தின் வீதிகள் அனைத்தும் தரமான, அகலமான கான்கிரீட் ரோடுகளாக மாற்றப்பட்டுள்ளன. குடிநீருக்கு குறையேதும் இல்லை. அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீரும், உள்ளூர் போர்வெல்லும் கிராம மக்களின் தாகத்தையும், தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இருந்தும், ஊருக்காக கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் பயன்பாடு இல்லாமல், பராமரிப்பின்றி கிடக்கிறது. இதன் தேவையை தற்போது கிராம மக்கள் வேண்டும் என்கின்றனர்.
தண்ணீர் தொட்டியுடன் புதருக்குள் கிடக்கும் இப்பொதுக்கழிப்பிடத்தை சீர்படுத்தி தர வேண்டும் என மக்கள் கேட்கின்றனர். ஆனாலும், இக்கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பிடம் உள்ளது. ஒரு சிலர் வீடுகளில் கழிப்பிடம் இல்லை. அப்படியிருந்தும், துாய்மை பாரத திட்டத்தின் கீழ், நான்கைந்து வீடுகளில் கழிப்பிடம் கட்டித்தரப்பட்டுள்ளது. இன்னமும் பல வீடுகளுக்கு கழிப்பிடம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தெருவிளக்குகள் எரிகின்றன. முற்றிலும் தென்னைகள் சூழ்ந்த இக்கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் குடிநீர் குழாய்கள் உள்ளன. வீட்டு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. கிராமத்தில் தென்னை சாகுபடியாளர்கள் இருந்தாலும், பெரும்பாலானோர், கிராமத்தின் தென்பகுதியில் உள்ள தென்னை நார் மஞ்சி, பித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஒருசிலர் மட்டுமே வெளி வேலைகளுக்கு சென்று திரும்புகின்றனர்.
கிராமத்தில் சிறிய அளவிலான, மூன்று மளிகைக்கடைகள் உள்ளன. ஒரே ஒரு டீக்கடை உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் வசதிக்காக காலை, 8.30 - 8.45 மணிக்கு ஒரு பஸ் வருகிறது. இந்த பஸ் ஊருக்குள் நான்கு முறை வந்து சென்றாலும், மாலை, 6.30 மணிக்கு மேல் ஊருக்கு பஸ் இல்லை.
ஊரை சுற்றி தென்னைகள் இருந்தாலும், தண்ணீர் இன்றி தென்னைகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தை தொட்டுள்ளன. நிலத்தடி நீர் குறைந்து போயுள்ளதால் தோப்புகளில், தேங்காய் பறிப்பு குறைந்துள்ளது. மருத்துவ வசதிக்கு அருகில் உள்ள காளியப்பம்பாளையத்தில் செயல்படும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நடந்து தான் செல்ல வேண்டும்.
இதேபோல, சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கடைவீதி ஆகியவற்றுக்கு பெரிய நெகமத்துக்கு சென்றாக வேண்டும். இங்குள்ள துவக்கப்பள்ளி கட்டடம் ஒன்று, 1969ல் கட்டப்பட்டுள்ளது. இது வலுவாக உள்ளது. ஆனாலும், ஓடு வேய்ந்த கூரையை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் இப்பள்ளியில், 20 குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர். பொதுமக்கள் தேவைக்காக பகுதி நேர ரேஷன்கடை, அங்கன்வாடி ஆகியன உள்ளன. கிராமத்தின் வீதிகளில் தண்ணீர் டேங்க் வைக்கப்பட்டுள்ளன. பேரூராட்சியாக இருந்தாலும், இக்கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை