மின் நுகர்வோர் குறைதீர் முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


மதுரை, மதுரை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவீந்திரநாதன் கூறியதாவது: மின் வாரிய ஒழுங்கு முறை ஆணைய வழிகாட்டுதல்படி, கலெக்டரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் முன்னிலையில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், கே.புதுார் வட்ட மைய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நாளை (ஜன.,13) காலை 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் மதுரை கிழக்கு, சமயநல்லுார், திருமங்கலம், உசிலம்பட்டி கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர் கலந்து கொள்ளலாம். இந்த அலுவலகம் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் புதிதாக பெறப்படும் மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
* மேலுார் தெற்கு மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் இன்று (ஜன.,12) காலை 11:00 முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது. இக்கோட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர் கலந்து கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் ரவீந்திரநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை