இசையில் இனிமை தந்த மல்லாடி சகோதரர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இசையில் இனிமை தந்த மல்லாடி சகோதரர்கள்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


மதுரை, மதுரையில் சத்குரு சங்கீத சமாஜ 65வது ஆண்டு இசை கலை விழாவில் நேற்று, மல்லாடி சகோதரர்களின் கர்நாடக சங்கீதம் நடந்தது.
ஸ்ரீராம் பிரசாத்- ரவிக்குமார் இணைந்து வழங்கிய வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி, மார்கழி தென்றலாய் தவழ்ந்தது. துவக்கமாக, திருவெற்றியூர் தியாகய்யர் இயற்றிய 'சகானா' ராக ஆதிதாள வர்ணம், வர்ணத்தின் அனைத்து சஞ்ராங்களும் இனிமை தந்தன.
'ஸ்ரீரகுகுல...' என துவங்கும் தியாகராஜர் கீர்த்தனை, அம்சத்வனி ராகம், ஆதி தாளத்தில் பாடி ரசிகர்களின் கைதட்டலை பெற்றனர். தொடர்ந்து 'மொந்து வெனக...' என துவங்கும் தர்பார் ராக கீர்த்தனையில், ஆதி தாளத்தில் தியாகராஜர் பாடிய பாடல் பக்தி, இசையை அள்ளித் தந்தது.
லலிதா ராக ஆலாபனை சிறப்பாக அமைய ஷியாமாசாஸ்திரி இயற்றிய 'நன்னுக்ரோவ' என்ற 'மிஸ்ரசாப்பு' தாளத்தில் நேர்த்தியுடன் பாடப்பட்டது. இந்த ராகத்தில் மல்லாடி சகோதரர்கள் வழங்கிய நிரவல் இசை ரசிகர்களின் மனதை தொட்டது.
கணேஷ் பிரசாத் அனுபவ பூர்வமாக வயலின் வாசித்தார். மிருதங்கம் இசைத்த சாய்கிரிதர் சிறந்த லயக்கோலங்களை தந்தார். கடம் வாசித்த கிருஷ்ணசாமி திறம்பட செயலாற்றி கச்சேரியை வெற்றி பெற செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை