Notice For Mallaiya | மல்லையாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப கோர்ட் உத்தரவு| Dinamalar

மல்லையாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப கோர்ட் உத்தரவு

Added : ஜன 12, 2017 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 மல்லையாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப கோர்ட் உத்தரவு

புதுடில்லி: கோர்ட் உத்தரவுகளை மீறி, 273 கோடி ரூபாயை, தன் குழந்தைகளின் பெயருக்கு மாற்றியதாக, வங்கிகள் கூறிய புகார் குறித்து பதிலளிக்கும்படி, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டதை தொடர்ந்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றான், பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையா. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், வங்கிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தன் சொத்துக்களை விஜய் மல்லையா விற்கக் கூடாது, யாருக்கும் மாற்றக் கூடாது என, கோர்ட்டுகள் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த, 'டியாஜியே' என்ற நிறுவனத்தில், தன் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த, 273 கோடி ரூபாயை, விஜய் மல்லையா, தன் குழந்தைகளின் பெயருக்கு மாற்றியுள்ளான்; அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை விசாரணைக்கு ஏற்ற, நீதிபதிகள், குரியன் ஜோசப், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி, விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வு, வழக்கு விசாரணையை, பிப்., 2க்கு ஒத்தி வைத்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-201721:22:39 IST Report Abuse
singaraja...Chockalingapuram உங்களுக்கு கிடைக்கும் சம்பளத்திற்கு அதை நாளும் செய்யுங்கள் அதிகாரிகளே
Rate this:
Share this comment
Cancel
Jayadev - CHENNAI,இந்தியா
12-ஜன-201717:27:13 IST Report Abuse
Jayadev மல்லய்யாவை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாத மோடி அரசு , இனி பணக்காரர்ககளுக்கு எல்லா உதவிகளும் செய்யும் என்பது நன்றாகவே தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
12-ஜன-201715:20:20 IST Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு லண்டன் ஸ்டாக் எக்ஸ்ச்சஞ் (LSE) பங்குகளை இந்திய அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
12-ஜன-201713:32:53 IST Report Abuse
Appu அவ்வப்போது மக்களை திசை திருப்பவும் மக்கள் மனதில் மாற்றங்களை கொண்டு வரவும் நடக்கும் வழக்கமான ஒரு நிகழ்வாக மட்டுமே இருக்கும்...நன்றி...
Rate this:
Share this comment
Cancel
Kaliyan Pillai - Chennai,இந்தியா
12-ஜன-201712:51:44 IST Report Abuse
Kaliyan Pillai அவருடைய சொத்துக்களை ஏன் வங்கி முடக்கவில்லை? அவருடைய பங்கு பரிவர்த்தனைகளை SEBI ஏன் முடக்கவில்லை?
Rate this:
Share this comment
Cancel
Guruji Saran - Chennai,இந்தியா
12-ஜன-201711:54:42 IST Report Abuse
Guruji Saran இங்கிலாந்து அரசை மிரட்டி பணிய வையுங்கள் .. அவனை தூக்கி வெளிய போட சொல்லுங்கள் .. நாம் கொத்திக்கலாம் ...
Rate this:
Share this comment
Cancel
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
12-ஜன-201710:01:09 IST Report Abuse
Krishna Sreenivasan ssssssssss உடனே அவன் வந்துருவானுங்கோ நீங்க அனுப்பும் பேப்பரையே கூட கக்கூசிலே டிஸ்ஷ்யூவா வச்சுக்குவான்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஜன-201708:48:35 IST Report Abuse
Lion Drsekar இத்தனை ஆண்டுகள் இவர் போட்ட எலும்பு துண்டுகளை ருசித்து விட்டு இன்றைக்கு இவனுக்கு எதிராக குரல் கொடுக்க யாரும் முன்வரமாட்டார்கள், அப்படி இருக்க இந்த நோட்டீஸ் என்பதற்கு பதிலாக வால்போஸ்ட என்று போடுங்கள், அவனுக்கு இரண்டுமே ஒன்றுதான், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
12-ஜன-201708:01:03 IST Report Abuse
venkatesh ஆமாம் நீங்க நோட்டீஸ் அனுப்பியவுடன் உள்ளேன் ஐயா என்று வந்து நிக்க போறான் திருடன். நாட்டில் இருக்கும் பொது உள்ள புடிச்சு வைக்காமல் எங்கயோ இருக்கவனுக்கு நோட்டீஸ் அனுப்புங்க
Rate this:
Share this comment
Cancel
Mohan Kumar - chennai,இந்தியா
12-ஜன-201707:39:42 IST Report Abuse
Mohan Kumar நீதிபதிகளுக்கு நல்லா பொழுது போகிறது ஜாலியான வேலை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை