சபரிமலை பக்தர்களுக்காக பயணிகள் ஹெலிகாப்டர் வசதி தொடக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலை பக்தர்களுக்காக பயணிகள் ஹெலிகாப்டர் வசதி தொடக்கம்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சபரிமலை, சபரிமலை பயணத்துக்காக முதல் பயணிகள் ஹெலிகாப்டர் நேற்று காலை நிலக்கல்லில் தரை இறங்கியது. சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக முக்கிய இடைதங்கும் இடமான நிலக்கல்லில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஹெலிபேடு அமைத்துள்ளது. இரட்டை இயந்திரம் கொண்ட ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் இந்த ஹெலிபேடு சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தனியார் பயணிகள் ஹெலிகாப்டர் நேற்று காலை 9.45 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு நிலக்கல்லில் தரை இறங்கியது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன், <உறுப்பினர் அஜய்தரயில், ஹெலிடூர் நிர்வாக இயக்குனர் ஷோபி போள் ஆகியோர் இதில் வந்தனர். பைலட் கே.எம்.ஜி. நாயர் ஹெலிகாப்டரை இயக்கினார்.
சபரிமலையை சர்வ தேச அளவிலான வழிபாடு மையமாக மாற்றுவதற்கு, ஹெலிகாப்டர் சர்வீஸ் மூலம் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாக தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை