பயிர்க்காப்பீடு பிரீமியம் தொகை வாங்க மறுப்பு முக்காடு போட்டு விவசாயிகள் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயிர்க்காப்பீடு பிரீமியம் தொகை வாங்க மறுப்பு முக்காடு போட்டு விவசாயிகள் போராட்டம்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement


துாத்துக்குடி, : துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகளிடம் பிரீமியம்
தொகை வாங்க தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை
கண்டித்து விவசாயிகள் தலையில் துண்டுால் முக்காடு போட்டு ஆர்.டி.ஓ., அலுவலகத்தை
முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில் பரவமழை பொய்த்த போனதால், அனைத்து பகுதியிலும் பயிர்கள் காய்ந்து
கருகியுள்ளன. தமிழகத்தினை வறட்சி பாதித்த மாநிலமாக அரசு அறிவிப்பு செய்துள்ளது.
இந் நிலையில் விவசாயிகள் தற்கொலை, உயிரிழப்பு தொடர்ந்து வருகிறது. மத்திய அரசின்
பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் ஜன., 22 ம் தேதி வரை காப்பீடு பிரீமியத்தொகை
செலுத்தலாம், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. தொடக்க கூட்டுறவு கடன்
சங்கங்கள், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமும் பிரீமியத்தொகையை பெற்று வந்தனர்.
பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் விபரங்கள் ஏழு பக்கங்களில் உள்ளது. இதனை இணைய
தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதள சேவை சரியாக இல்லாததால், ஜன., 7 ம்
தேதியே பயிர்க்காப்பீடு பிரீமியத்தொகை வாங்குவதை நிறுத்தி விட்டனர். இதுவரை பெறப்பட்ட
விண்ணப்பங்களுக்கு பதிவேற்றம் செய்ய ஜன., 20 ம் தேதி வரை ஆகும். அதற்கு பின் பதிவேற்றம்
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது, என்பதால் பிரீமியம் வாங்குவதை
நிறுத்தம் செய்ததாக தெரிவிக்கின்றனர்.
வேதனையடைந்த விசாயிகள் தலையில் துண்டால் முக்காடு போட்டு கோவில்பட்டி ஆர்.டி.ஓ.,
அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் தங்களது கோரிக்கை மனுவினை ஆர்.டி.ஓ., கண்ணபிரானிடம்
கொடுத்தனர். நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
வரதராஜன், விவசாயி தெரிவித்ததாவது: பருவமழை பொய்த்து போனதால், பயிர்கள் கருகியுள்ளன.
கடன் பெற்று செய்த விவசாயம் பாழாகிவிட்டது. விவசாயிகள் வேதனையில் இருக்கும் நிலையில்
பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் இருந்தும், விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு நடவடிக்கை எடுத்து, விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
----

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை