இந்தியா - வியட்நாம் ஏவுகணை ஒப்பந்தம்: சீனா டென்ஷன்| Dinamalar

இந்தியா - வியட்நாம் ஏவுகணை ஒப்பந்தம்: சீனா டென்ஷன்

Added : ஜன 12, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்தியா - வியட்நாம் ஏவுகணை ஒப்பந்தம்: சீனா டென்ஷன்

ஹனோய்: வியட்நாம் இந்தியாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்க திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாக உள்ள ஏவுகணை ஒப்பந்தம் சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஏவுகணை வாங்க திட்டம்


பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வியட்நாமின் ஹனோய் நகருக்கு சென்ற போது வியட்நாமிற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தவிர வியட்நாம் கப்பல் படைகளுக்கு இந்தியா நீர் மூழ்கி கப்பல் பயிற்சியும் அளித்து வருகிறது. இந்நிலையில் வியட்நாம் இந்தியாவிலிருந்து ஏவுகணைகள் வாங்கும் திட்டத்திலும் உள்ளது. இதனால் சீனா கலக்கம் அடைந்துள்ளது.


சீனா வலியுறுத்தல்


இந்தியா வியட்நாம் இடையேயான நட்புறவில் சீனா தலையிட விரும்பவில்லை என்றும் அதே நேரம் அமைதிக்கு பாதகம் ஏற்படும் வகையில் இரு நாடுகளுக்கு இடையோன ஏவுகணை ஒப்பந்தம் இருக்கும் என சீனா கருதுகிறது. இந்நிலையில் வியட்நாம் அதிபர் குயேன் பு டிரோங் ஜனவரி 12ல் அரசு முறைப்பயணமாக சீன தலைநகர் பெய்ஜிங் செல்ல திட்டமிட்டுள்ளார். அவர் வருகையின் போது இந்தியாவிடமிருந்து ஏவுகணை வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டி சீனா வியட்நாமிடம் வலியுறுத்த முயற்சிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
12-ஜன-201715:03:09 IST Report Abuse
vnatarajan Mr ஜெய ஜெய மிக விளக்கமாக கருது தெருவித்திருக்கிறீர்கள் உண்மையில் நமது ஆயுத வளர்ச்சியில் சீனாவிற்கு பயம் இருக்கிறது. இதற்கு காரணம் மோடிஜீதான்
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
12-ஜன-201714:55:30 IST Report Abuse
vnatarajan ஆசியக்கண்டத்தில் இந்தியா வளர்வதை சீனா உண்மையில் விரும்பவில்லை. சீனா மட்டும் நம் நாட்டில் புகுந்து அடிக்கடி கலவரத்தை ஏற்படுத்துகின்ற நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் ஆயுத ஒப்பந்தங்கள் வைத்துக்கொள்ளலாம் ஆனால் இந்தியா மட்டும் அவர்களுடடைய அண்டை நாடான வீயட்நாமுடன் ஏன் ஒப்பந்தம் வைத்துக்கொள்ளக்கூடாது . சீனாவின் வற்புறுத்தலுக்கு வீயட்நாம் அதிபர் பணிந்துவிடக்கூடாது மோடிஜீயின் அயல்நாட்டு கொள்கையால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Bangalore,இந்தியா
12-ஜன-201714:19:49 IST Report Abuse
Rajesh இது ஆரம்பம் மட்டுமே.. பொறுத்து இருந்து பாருங்கள் இந்தியா வல்லரசாக ஆகும் காலம் வந்துவிட்டது ..
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
12-ஜன-201713:34:49 IST Report Abuse
Murugan சைனா ஒரு கொத்தடிமை நாடு, அவன் நாட்டு மக்களை அடிமையாக வைத்திருப்பது போல் அனைவரையும் அடிமையாக்க துடிக்கிறவன். இந்தியாவின் வளர்ச்சி மிக,மிக ..........பயத்தைத்தான் ஏற்படுத்தி வருகிறது ஆதலால்தான் கேடுகெட்ட பாகிஸ்தானுடன் கைகோர்த்து உள்ளான் .
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
12-ஜன-201712:11:09 IST Report Abuse
A. Sivakumar. பாகிஸ்தானை வைத்துக் கொண்டு இந்தியாவை மிரட்டும் சீனாவுக்கு சரியான ஆப்பு இது. இன்னும் நல்லா அடிச்சு விடுங்க பிரதமர் அவர்களே
Rate this:
Share this comment
Cancel
Anandha Kumar - Bangalore,இந்தியா
12-ஜன-201711:23:53 IST Report Abuse
Anandha Kumar இவனுங்க மட்டும் பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கறாங்க, நாம அதை பார்த்துட்டு சும்மா உட்கார்ந்துட்டு இருக்கணுமா.
Rate this:
Share this comment
Cancel
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
12-ஜன-201710:34:54 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar china alwayas double acting...
Rate this:
Share this comment
Cancel
Shriram - Chennai,இந்தியா
12-ஜன-201707:07:05 IST Report Abuse
Shriram என்ன பொறாமையா இருக்கா ஏட்டய்யா ? லைட்டா ...
Rate this:
Share this comment
Cancel
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
12-ஜன-201707:05:01 IST Report Abuse
Jey Kay - jeykay@email.com சீனா பதட்டப்பட காரணம்?? Brahmos ramjet supersonic cruise missile வகையை சார்ந்தது, ஒலியின் வேதை விட மூன்று மடங்கு வேகத்தில் பாயக்கூடியது (வேகம் மணிக்கு 3700கிம்) சீனா brahmos இ தாக்க வேண்டுமெனில் அதை Airborne early warning and control tem (AEW&C - வான்வழி முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு) துணையுடன் மட்டுமே வெற்றிகரமாக (இருப்பினும் வெற்றி விகிதம் குறைவே) எதிர் கொள்ள முடியும். இன்றளவில் active super sonic cruise missile இந்தியா மற்றும் ரஷ்யா விடம் (P -800 Oniks என்கிற பெயரில்) மட்டுமே உள்ளன. இந்தியா Defence sector இல் தற்போது வேகமாக முன்னேறி வருகிறது. அந்நியன் நம்மை தாக்கும் பட்சத்தில் AAD & PAD Defense shield போக ரஷ்யா S400 மற்றும் அரிஹந்த் நீர்முழ்கியில் பொறுத்தப்படவுள்ள K4 (அப்துல் கலாம் அவர்களின் நினைவாக பெயர் சூட்டப்பட்ட) ஏவுகணை மூன்றாவது அடுக்கு பாதுகாப்பாக அமையும். அது போக அரிஹாந்த் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் (எரிபொருள் நிரப்பும் அவசியம் இன்றி) பல மாதங்கள் கடலுக்கடியில் ஓசை இன்றி ரேடார் கையொப்பம் இடாமல் எதிரி எல்லையை அடைந்து தாக்கும். submarine-launched ballistic missile உலகத்தில் USA, UK, Russia, France, China விடம் மட்டுமே இருந்தது, இந்தியாவும் இன்று அந்த பட்டியலில் அரிஹந்த் & K4 (3500km) மற்றும் K15 sagarika (1900km) துணையுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. K5 (6000km) வளர்ச்சியின் கீழ் உள்ளது. இந்தியா canister missle பல அறியப்படாத இடத்தில் தற்காப்புக்காக புதைத்து வைத்துள்ளது. தேவைப்படும் பொழுது வேண்டியவை எதிரிகள் அழிக்கும் பட்சத்தில் இரண்டாவதாக தாக்க அவை பயன் படும். அவை அனைத்தும் திட எரிபொருளில் இயங்குவதால் பராமரிப்பது எளிது. உலகம் சுற்றும் வாலிபன் ஓசையின்றி பல நாடுகளுக்கு சென்று சீனாவை இன்று புலம்ப வைத்துள்ளார். இந்திராவிற்கு அடுத்து ஒரு துணிச்சலான பிரதமர் இன்று தான் இந்தியாவிற்கு கிடைத்துளார். வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
ak - ,
12-ஜன-201707:39:23 IST Report Abuse
aksema ji 👍👍👍👍...
Rate this:
Share this comment
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
12-ஜன-201707:43:11 IST Report Abuse
Jey Kay - jeykay@email.comமேலும் ISRO சென்ற வருடம் scramjet engine சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது. அது hypersonic cruise missile வகை Brahmos-2 தயாரிக்க பயன்படுத்தப்படும் (குறைந்த பட்ச வேகம் மணிக்கு 6,000km) பாக்கிஸ்தான் மற்றும் சீனா புலம்புவது அப்போது இன்னும் பலமாக கேட்கும்....
Rate this:
Share this comment
Cancel
venkatasubramani - Cincinnati,யூ.எஸ்.ஏ
12-ஜன-201705:24:48 IST Report Abuse
venkatasubramani சீனா பாகிஸ்தானுக்கு பலவிதமாக உதவுகிறதே.. அதனை இந்தியா குறை சொல்லி இருக்க்கா.. உனக்குன்னா வியாபாரம், எங்களுக்குன்னா அமைதிக்கு பாதகம்னா எப்படி மிஸ்டர்.சீனா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை